மே 22ஐ தமிழீழ நாளாக அறிவித்து மாசசூசெட்ஸ் மாநில அவையில் 1979ம் ஆண்டு ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மாசசூசெட்ஸ் இதை இப்போதும் கடைபிடிக்கிறதா என்று அறிந்தவர்கள் கூறவும். இது நிறைவேற முக்கியக் காரணமாக இருந்தவர் மரி எலிசபெத் ஹோவே. இவர் இன்றளவும் தமிழர்கள் ஒரு ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் என்பதிலும், அவர்களுக்குத் தனிநாடு ஒன்றே தம் உரிமைகளைக் காத்துக் கொள்ளும் வழி என்பதிலும் உறுதியாயிருக்கிறார். இவரைப் பேட்டி கண்ட ஆசியா ட்ரிப்யூனி்ன் தயா கமகே புலிகளைப் பற்றி இவரது வாயைக் கிளற எவ்வளவோ முயன்றிருப்பது தெரிகிறது. ஆனாலும் ஹோவே, தமிழர்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாயிருக்கிறார். இலங்கையில் ஆங்கிலேய ஆட்சிக்குப் பின்னான சிங்கள ஒடுக்குமுறை வரலாற்றை இத்தீர்மானம் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறது.
கட்டுரையைத் தமிழாக்கிப் போட நேரமில்லாத நிலை. அதனால் சுட்டி: ஆசியா ட்ரிப்யூன்.
மதியம் ஞாயிறு, மே 22, 2005
இன்று தமிழீழ நாள்!
Posted by சுந்தரவடிவேல் at 5/22/2005 12:34:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
இந்த விஷயத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி சுந்தர்.
சுந்தரவடிவேல்,வணக்கம்!நீங்கள்கூடவா கருத்துச் சுதந்திரத்தை மறுத்துவிடுவது?பெயரிலியின் கருத்துக்களை எதற்காக அடித்துள்ளீர்கள்?மனிதர்களைப் பேசவிடுங்கள்,அப்போதாவது ஆயிரம் பூக்கள் மலரட்டும்.நிறைந்த வேதனையுடன் மௌனிக்கின்றேன்.
ஐயோ ஐயோ அது நானேதான் அழித்தேன். ம் ய்வ் த்வ்ஸ்ரீ்f தட்டச்சிலே இன்னொரு ஆளும் விளையாடுது. பிறகு
இரமணிதரன்,நன்றி.நான் சுந்தரவடிவேல்மீது ஏதோ பழியைப்போட்டுவிட்டேன்.மன்னித்துவிடுங்கள் என்னைச் சுந்தரவடிவேல்!
ஐயோ என்ன ஸ்ரீரங்கன் இதற்குப்போய்! நீங்கள் பெரியவர்.
சுட்டிக்கு நன்றி சுந்தரவடிவேல்!
உங்கள் பதிவுக்கும் இணைப்புக்கும் நன்றி சுந்தரவடிவேல்.
எங்களுக்குள்ளே கூட போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வழிதவறிநிற்கும் மக்கள் பலர் இருக்கும்போதும் தூரதேசத்தில் இருக்கும் மொழியால் நாட்டால் வேறுபட்டு நிற்கும் மக்களின் தார்மீக ஆதரவு மனதுக்கு உற்சாகமாக இருக்கிறது.
நன்றிகள் சுந்தர். அந்தக்கட்டுரை இந்துவின் பாணியிலேயே எழுதப்பட்டிருக்கிறது.
/அந்தக்கட்டுரை இந்துவின் பாணியிலேயே எழுதப்பட்டிருக்கிறது.
/
தங்கமணி, ஏஸியன் ட்ரிப்யூன் ஆசிரியர் பற்றி
தங்கமணி அண்ணா நான் சொல்லவந்ததை பெயரிலி சொல்லிவிட்டார்.இந்த கே.ரி கருணாவுக்கு விழுந்தடித்து எழுதிய கட்டுரைகள் வாசித்ததில்லையா.சுந்தர் அண்ணா பதிவுக்கு நன்றி
Post a Comment