மறந்திருந்த விளக்கு

Image hosted by Photobucket.com

ஊரில் ஒரு நாள்
மின்சாரம் ஒழிந்த இருளில்
மண்ணெண்ணெய் மணத்துடன்
துலங்கிய வெளிச்சமொன்று.

10 comments:

said...

அரிக் கேன் விளக்கு? விளக்கு ;-)

said...

ஆமாம் ரஜினிகாந்த், செல்வநாயகி. சில இருளான நேரங்களில் மறந்திருக்கும் வெளிச்சம் நம்பிக்கையூட்டும்!
பெயரிலி: அரிக்கானாலும் அரனுக்கானாலும் வேணும். விளக்கில்லன்னா பந்தம். நரருக்குத்தான் :)

said...

தேய்ச்சி பார்த்தியா? பூதம் எதாவது வந்சுச்சா?

said...

எத்தனையோ நினைவுகளைக் கிளப்பி விட்டுட்டீங்க சுந்தர்.

ஒரு நினைவலைக் கட்டுரை வரலாம். ஜாக்கிரதை! ;)

said...

நான் முதன் முதலில் பார்த்த அரிக்கென் விளக்கு ஒரு ஜெர்மன் தயாரிப்பு. அம்மாச்சி அதில் எண்ணை ஊற்றி திரியை ஏற்றினால் சிக்கலில்லாமல் திரி ஏறும். கண்ணாடியை உடைத்து விட்டு திட்டுவாங்க வேண்டியிருக்கும். அது ஏற்றிய ஒளி மனதில் இருக்கிறது. அந்த பித்தளை விளக்கு இப்போது எங்கிருக்கும்?

நல்ல படம்டா பையா!

said...

எனக்கு ஜாம்போத்தல் விளக்கு ஞாபகம் வந்துது.

said...

// தேய்ச்சி பார்த்தியா?//
அப்பா தேய்ப்பார். கொஞ்சூண்டு சாம்பலை அந்தக் கண்ணாடியின் உட்புறத்தில் கொட்டி ஒரு துணியால் மெல்ல, சுற்றிச் சுற்றித் தேய்ப்பார். பளபளப்பாகும். அப்புறம் கொளுத்தினா வெளியே இருக்க+நிழல் பூதமெல்லாம் பளிச்சுன்னு தெரியும்:)

//ஒரு நினைவலைக் கட்டுரை வரலாம்.//
வரவேண்டும் வரவேண்டும் :))

//ஜாம்போத்தல் விளக்கு// வசந்தன், எங்க ஊர்லயும் இப்படி போத்தல் மூடி வழியாகத் திரியை விட்டு எரிக்கும் வழக்கம் இருப்பது ஞாபகத்துக்கு வருகிறது!

said...

மாட்டுவண்டி அடியில் கட்டிதொங்கவிட்ட விளக்கின் ஒளியும், அவை காலில் கட்டைய சலங்கையின் ஒலியும் அமைதியான இஅரவில் ஒரு கிராமத்து நினைவைதரும். இந்த வாரம் ஹரிக்கேன் விளக்கு, சைக்கிள் என பழைய கால நினைவுகள்.

said...

//மாட்டுவண்டி அடியில் கட்டிதொங்கவிட்ட//
அந்தப் படம் நெஞ்சு துடிக்க மனத்திரையில் விழுகிறது. காதில் சக்கரங்களின் சத்தம் கேட்கிறது. நன்றி.

said...

anbuLLa peyarili,

hurricane-ilum aNaiyaadha viLakku endru kElvipattirukkiREn.

anbuLLa thEnthuli / sundaravadivEl,

indhumathiyin "tharaiyil iRangum vimaanangaL" kadhaiyil varum nigazhchiyai ninaivupaduthivitteergaL.