பிள்ளைகளா சுண்டெலிகளா?

அமெரிக்கா தான் கண்டுபுடிக்கிற மருந்தையெல்லாம் ஏழை நாட்டு மக்கள் மேல குத்திப் பாத்துப் பரிசோதிக்கிற கதை தெரிஞ்சதுதான். இப்போ ஒரு புதுக் கதை. தன் சொந்த நாட்டு மக்கள் மேலயும் ஒரு சோதனை நடத்திப் பாக்குது. மக்கள் யாருங்கறதுதான் முக்கியம். குழந்தைகள். பச்சிளம் குழந்தைகளிலிருந்து பதின்ம வயதுப் பிள்ளைகள் வரை. கருப்பர்களும், ஹிஸ்பானிக்குகளும். எல்லாவற்றுக்கும் மேலாக அந்தப் பிள்ளைகள் அனாதைகள்!

ஆமாம். சுமார் ரெண்டு டஜன் மருத்துவ ஆராய்ச்சித் திட்டங்களில், எயிட்ஸ் உட்பட்ட நோய்களுக்கு, இந்தப் பிள்ளைகளின் மேல் மருந்துகள் ஏவிப் பரிசோதிக்கப் படுகின்றன. 1988 முதல் 2001 வரைக்கும் நியூயோர்க் மட்டும் 465 பிள்ளைகளைப் பயன்படுத்தியிருக்கிறது. இதுக்கெல்லாம் National Institutes of Health நிதியுதவியும் செய்திருக்கிறது. Johns Hopkins மாதிரிப் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களும் இந்தப் பிள்ளைகளைப் பயன்படுத்தியிருக்கின்றன. நிறைய மாநிலங்களில் இது நடக்கலாம். சில மாநிலங்களில் இந்த ஆராய்ச்சிப் பிள்ளைகளைப் பற்றிய கணக்கெதுவுமில்லை. சில சோதனைகளில் மாண்ட பிள்ளைகளின் எண்ணிக்கை "வருந்தும்படி" அதிகந்தான் என்றார்களாம்! இவர்கள் உபதேசமெல்லாம் ஊருக்குத்தானோ?

சுட்டியொன்று: Alliance for Human Research Protection.

5 comments:

said...

sundar
Americans also use women who are in the prison for various tests. Recently I was at a major hospital in Nj. The director of oncoloy division told me that she could get consent from patients, and I asked her the response rate, and surprised to see high %. asked how she managed that high%, and the answer was make the fonts too small!! As for as poor and lower income group, justice is the same everywhere!!

said...

சு.வடிவேல்:

கண்டிக்க வேண்டிய செயல்.ஆயினும் நடுவணரசு முன்னின்று அனுமதித்தவொன்றா என்பது போன்றவற்றை பொறுத்து தெரிந்து கொள்ள வேண்டும்.

மற்றும், இதுபோன்றவை நிகழும் போது அது வெளிப்படுத்தப்பட்டு,தவறுகள் களையப்பட இந்நாட்டில் இருக்கும் வாய்ப்புகள் வேறு இங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

-வாசன்

said...

this is not the first time.

one wonders how many of such trials get exposed.in case of those serving sentences in prison the less said the better it is.i understand that they have right to access to health.the state where the prision is and the company that runs the correctional facility i.e. prison decide this.so if the prisoners were lured to beleive that they would be benefitted from this trial that would not be surprising.

said...

இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா அப்படீம்பாங்க. இராக்குக்கு குளோரினை தடை செய்தப்ப எவ்வளவு ஆயிரம் குழந்தைகள் கொல்லப்படுவார்கள் என்று அமெரிக்கர்கள் அறிந்தே செய்தார்கள். பயங்கரவாதம் என்பதெல்லாம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் கதையில் ஓநாய் பேசும் வசனங்களே!

said...

Appadiyalla NT

Ungal kadaisi variyil, you should have used "Rights" instead of "Payangaravaadham"


sarah