முற்று முழுதாய் எனக்கேயாய்
வரப்புகளின்றிப் பரந்த நேரம்
இப்போது அலையடித்து நீர்கலக்கும்.
குளிர்க் காற்றில் அவசரமாய்
இழுத்து விட்ட விடுதலை மூச்சில்
நுரையீரல் உறைகிறது.
பெருவாயிலொன்றில் யாரோ
நடந்துள் மறைகின்றார்
உன்னைப் போலே.
சிறுமகவைக் கைப்பிடித்து
நடக்கின்றாள் தாயொருத்தி.
போகட்டும்,
இவையெல்லாம் பெருநடை நடந்தும்
கடக்க முடியா என் வெளியில்.
நீ நலமா?
நம் மகனைக் கேட்டதாகச் சொல்!
மதியம் புதன், மே 18, 2005
ஒரு நண்பிக்கு!
Posted by சுந்தரவடிவேல் at 5/18/2005 07:01:00
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
என் சோகக்கதையைக் கே..;)
patam arumai...
அண்ணே, சொல்லுங்க கேப்பம்!
இப்பதான் இன்னொருத்தரு படம் வரையக் கோடு போடுதாரு:))
நம் மகனைக் கேட்டதாகச் சொல்!
?
//அண்ணே, சொல்லுங்க கேப்பம்!//
அத கேட்டாத்தான் தாங்காதையா உங்க மனமே
ஆமா உங்க மனமே :-)
ரவி, அது வூட்டுக்காரம்மா :)
அருமை வரைவுக்கு
அது கிடைக்குமோ?
ஆரை வரைந்தாய் ஆண்மகனே என
அடி கிடைக்குமோ?
ஆரறிவார்?
அடி கிடைத்தாலும்
அழுவாரை ஆரறிவார்? :-)
வந்துட்டாங்கையா, வந்துட்டாங்கையா!
இது பிரிவாற்றாமை அப்டின்னு ஏதாவது துறையின் கீழ் வருமா? இப்ப இந்தத் துறையில தலைவனும் அந்தத் துறையில தலைவியும் நடுவில் வெள்ளமாய் இணையமும், நடத்துங்கப்பா!. எங்க உன்னோட ஸ்பெஷல் பொட்டியில இன்னும் கமெண்ட்ட காணோம்.....
:))))
நட்பு நீடூழி வாழ்க!!
படம் நல்லா இருக்கு.
You2 Suntharavadivel???? (*_*)
nice poem & art.
கார்த்திக்கு...உமக்கொரு காலம் வெகுதொலைவில் இல்லை நண்பா:))
தங்கமணி, பொட்டியத்தான் நானும் பாக்கேன்!
நன்றி முத்து, கறுப்பி.
படமும் கவிதையும் அழகு
இப்ப சந்தோசமாப்பா!
இப்பதிவு கண்டு
காதல் கொண்டு
உதாசீனஞ்செய்த
வெந்நண்பிக்கு
செல்பேசியில்
சேர்பித்தேனொருச்
செண்டு.
பரவாயில்லையே, வரிக்கொரு வார்த்தையாப் போட்டா கவிதை மாதிரி ஆயிடுது :)
நன்றி ஈழநாதன்.
இறக்கை: //வரிக்கொரு வார்த்தையாப் போட்டா கவிதை மாதிரி ஆயிடுது// நா வேற என்ன செஞ்சிருக்கேங்கறீங்க :)). செண்டு அனுப்பியதைப் படிச்சதும் அடேங்கப்பான்னு ஆயிருச்சு. நல்லாருங்க!
நன்றி தான்யா!
Post a Comment