சில்லு விளையாட்டின் மேல்
வண்டியோட்டியவனை
விரட்டியபடி
அல்லது
இடுப்பில் தம்பியோடு
எலந்தைப் பழம் பொறுக்கியபடி
இம்மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில்
சிறிய மண்சாலைத் தெருக்களில்
இவளை நீங்கள்
கண்டிருக்கக் கூடும்.
அன்றைக்கு இவள்
அந்தக் கல்யாண வீட்டுக்கு
வந்திருந்தாள்.
மதியம் வியாழன், மே 19, 2005
அந்தப் பிள்ளை!
Posted by சுந்தரவடிவேல் at 5/19/2005 05:40:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
முகத்துக்கும் அதன்மீதான வரிகளுக்கும்,
iyalpu.
கவிதையும், படமும் இயல்பாயிருக்கின்றது. ரொரண்டோ வருகின்ற சந்தோசம் அடிக்கடி இடப்படும் பதிவுகளில் தெரிகின்றது :-)
டிசே,
//ரொரண்டோ வருகின்ற// இல்லை, "ரொரண்டோவில் இருக்கின்ற" :))
படமும், பாட்டும் சூப்பர்!
அது சரி யார் இது போட்டோவில?
தனிப்பொட்டியப் பார்த்தீங்களா?
//யார் இது போட்டோவில?//
யாரோ. கல்யாண வீட்டுல மாப்பிள்ளை வீட்டுப் பிள்ளை!
ஆர், தங்கமணியா உந்த வண்ண விளையாட்டுக்கள் காட்டித் தந்தது?
நல்ல படம், நல்ல வரிகள்.
// ஆர், தங்கமணியா உந்த வண்ண விளையாட்டுக்கள் காட்டித் தந்தது?//
வசந்தன், இதை மட்டுமில்லை, வரிகளைக் காட்டித் தந்ததும் அவரே!
நன்றி பிரகாஷ்.
சுந்தர்,
நல்ல படம் & கவிதை.
-மதி
டோய்ய்ய்ய்!
நல்ல படம் & கவிதை.
Post a Comment