மதியம் திங்கள், மே 02, 2005

தராக்கி/ஐ. நா. மனு/கையொப்பம்

தராக்கியின் படுகொலை மீது நியாயமான விசாரணை தேவை. இதை சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்துதல் அவசியம். இது சம்பந்தமாக ஐ. நா. மனித உரிமைகள் ஆணையத்திடம் முறையிட ஒரு மனு தயாரிக்கப் பட்டிருக்கிறது. இதில் அனைவரும் கையொப்பமிடுவோம். செய்தியை நண்பர்களுக்குப் பரப்புவோம். கையொப்பமிடுவதற்கான சுட்டி இதோ:
http://www.petitiononline.com/Tharaki/petition.html

10 comments:

Narain Rajagopalan said...

முதலில், இந்த பதிவுக்கு வாக்குப் போடுங்கள். பெடிஷன் ஆன்லயன் போய் உங்களின் கையோப்பமினை இடுங்கள். எதிர்ப்பினை காட்டவேண்டுமெனில் முதலில் எல்லோருக்கும் இப்படி ஒரு வாய்ப்பிருக்கிறது என்பதை புரியவைக்க வேண்டிய அவசியமிருக்கிறது. அவரவர் நண்பர்களுக்கு சொல்லுங்கள். சுந்தர், நல்ல அவசியமான பதிவு.

வசந்தன்(Vasanthan) said...

தகவலுக்கும் இணைப்புக்கும் நன்றி.

Thangamani said...

பதிவுக்கு நன்றி சுந்தரா!

இந்தக்கொலையைச் செய்தவர்கள் எதை எதிர்பார்த்து இதைச் செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் தமிழ் மக்கள் அவர்கள் எதிர்பாராத அளவுக்கு இதற்கு செயலாற்ற வேண்டும்.

சுந்தரவடிவேல் said...

இந்த மனுவை ஆக்கியவர்களுக்கும், கையெழுத்திடுவோருக்கும் உங்களோடு சேர்ந்து நானும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்!

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Thanks Sundar

-MAthy

சுந்தரவடிவேல் said...

இது வரை 1000+ கையெழுத்துக்கள் குவிந்திருக்கின்றன!

வசந்தன்(Vasanthan) said...

ஆனால் இத்தொகை காணவே காணாது. சரியான முறையில் இத்தளம் பற்றி வெளிப்படுத்தவில்லையோ தெரியாது. தமிழ்நாதம் இணையத்தளமும் இதை வெளியிட்டுள்ளது. இருந்தும் வெறும் ஆயிரம் கையொப்பங்கள் என்பது யானைப்பசிக்கு சோளப்பொரிதான். இத்தளத்தை அறிமுகப்படுத்தி உதவிய உங்களுக்கு நன்றி.

-/பெயரிலி. said...

Please vote

International probe on Sivaram murder?
[input] Yes
[input] No
[input] Appoint a local commission
[input] No inquiry needed

http://www.bbc.co.uk/sinhala/

currently,

International probe on Sivaram murder?
Yes (269 votes)
37.1%
No (287 votes)
39.6%
Appoint a local commission (54 votes)
7.4%
No inquiry needed (115 votes)
15.9%
Results are indicative and may not reflect public opinion.

-/பெயரிலி. said...

International probe on Sivaram murder

SnackDragon said...

You can aubmit your letter/comment

or At least vote here.

http://www.bbc.co.uk/sinhala/highlights/story/2005/05/050501_sivaram_murder.shtml