சுத்திச் சுத்தி வந்தீக...


(படம்: யாரோ)
போன வாரமெல்லாம் கார் டயர்ல காத்து நிக்கல. இன்னக்கி அடிச்சா நாளக்கிம் அடிக்கணும். டயர மாத்தனும்னு ரொம்ப நாள் யோசன. பக்கத்தூட்டுக் காரரு சொன்ன கடக்கிப் போனேன். Town Fair Tires. கடக்காரரு வந்தாரு, டயரு டயராத் தடவுனாரு, "பின்னாடி ரெண்டும் தேவலாம். ஆனா மாத்துனா நல்லது. முன்னாடி ஒன்னு மொட்டை இன்னொன்னு முக்கா மொட்டை. ஒன்னு மாத்துறது நல்லதில்ல, ரெண்டையும் மாத்து"ன்னார். சரி ரெண்டுக்கும் என்ன வெலை? டயரு டன்லப்பு, ஒன்னு 59 டாலரு, அந்தக் கூலி, இந்தக் கூலி, பழய டயரத் தூக்கிப் போடக் கூலி, ஆகக் கூடி 208 டாலர். இன்னும் கொஞ்சம் விசாரிச்சுப் பாக்கணும்னு தோணுச்சு. இருங்க வர்றேன்னு கிளம்பினேன்.

அடுத்த கடை. Pepboys. அதுல நான் நாலையும் மாத்தனும் என்ன வெலன்னு கேட்டேன். கடைக்காரர் சொன்னது: "Hankook அருமையான டயரு, நாலும் 262 டாலரு, உனக்கு நூறு ரூவா தள்ளுபடி, 162 குடு, வேற எதுவுமில்ல பூட்டிக்கிட்டுப் போ." என்னமோ இடிக்கிதே, இந்த டயரு நல்லாருக்குமா, பேரு கேள்விப்பட்டதே இல்லியே? இந்தா வர்றேன்னு கிளம்பிட்டேன். நடுவுல எங்கம்மா சொல்ற "ஆளப் பாத்தான், கூலியப் போட்டான்" கதையா எதாச்சும் தலையில மொளகா அறைக்கிறானா?ன்னு யோசனை.

அடுத்த கடை. Costco. கடைக்காரர், "உன் காருக்குக் கம்பெனி சொல்றது இது. Hன்னு போட்டிருக்கனும். அது எங்கிட்ட இல்ல. ஆனா கொஞ்சம் அகலமானது H போட்டு இருக்கு. ஒரு டயர் 76 டாலர். இந்த அகல டயரு வேணும்னா நாலும் புதுசாத்தான் போடணும். H போடாம இருக்கதை நான் போடக் கூடாது, கம்பெனி அடிக்கும்." அது என்னாங்க H? அதான் speed ratingஆம். நான் புரிஞ்சுக்கிட்டது என்னன்னா H போட்டிருக்கது 130 மைல் வேகத்துல 10 மணி நேரம் தொடர்ந்து ஓட்றதத் தாங்குமாம். இங்க அவ்வளவு வேகமாப் போக முடியாதுன்னாலும் இப்படித்தான் இருக்கணும்னு அந்தக் கார்க் கம்பெனி சொல்லிருக்காம். நீ Sears கடையில பாருன்னார். பாத்தேன். அது இல்லீங்க, ஆனா நா ஒரு படி கொறச்சதைப் போடலாமுன்னு எங்கம்பெனி சொல்லுது, இதப் போடவான்னு ஒன்னைச் சொன்னார். வேண்டாம்னுட்டேன். இப்ப எனக்கு H ஒட்டிக்கிச்சு. முந்தி பாத்த கடையிலெல்லாம் இந்த Hஐப் பத்தி யாரும் மூச்சு விடல. ஏதோ ஒரு டயர்னு தேடிக்கிட்டுத் திரிஞ்ச எனக்கு H-இச்சை புடிச்சிடுச்சு. நீ வேணா அதோ அந்தக் கடையில கேளேன்னார்.

அது இன்னொரு Town Fair Tires. அங்க Hதான் வேணும்னு கறாரா சொல்லிப்புட்டேன். அவரு, இங்க பாரு டன்லப் (அதே பழைய கடை 59 டாலர் டன்லப்பு) இதுல S போட்டிருக்கேன்னேன். இதுக்கும் Hக்கும் ரொம்பவெல்லாம் வித்தியாசமில்ல, ஒரு பத்து மைல்தான் கொறச்சல், எல்லா காருக்கும் இதான் போடுறோம். இன்சூரன்ஸ¤ ஒத்துக்குமான்னேன் நான் (வெவரமாப் பேசுறதா நெனப்பு). அதெல்லாம் ஒத்துக்கும், இங்க பாரு உனக்கு ரெண்டு டயருக்கு இருநூத்தி இருவத்தி (எத்தனைக்கோ) பண்ணித் தர்றேன். எனக்கு திருப்தி இல்லாம இல்ல நாம் போறேன்னேன். இல்ல இங்க வா பொறுன்னு படபடன்னு கம்பியூட்டரத் தட்டிட்டு, 202க்குப் பண்ணிறலாம் என்ன சொல்ற? வேணாம் நா அப்புறம் வர்றேன். இல்ல, நில்லு. மறுபடியும் பட பட. சரி உனக்காக இதான் செய்ய முடிஞ்சது, என்னோட கமிஷனெல்லாம் வாணாம், இந்தா 174க்கு முடிச்சிருவோம். அசந்த ஒரு சின்ன இடைவெளியில பூந்து மண்டையாட்ட வச்சுட்டார். 45 நிமிசத்துல புது டயர் ரெண்டு. S போட்டது.

வீட்டுக்கு வந்து நெட்டுல பாத்தா Sக்கும் Hக்கும் 18 மைல் வித்தியாசம். மனசுக்குள்ள நமநமன்னு என்னமோ பண்ணுது. Costcoவுல மாட்டுற கூலி, சுத்துற கூலி, நிதானக் கூலி, அந்தக்கூலி, இந்தக்கூலியெல்லாம் இல்ல, டயரு தேஞ்சு குப்பக்கிப் போற வரைக்கும் வாரண்டி. ஆனா நாம் போட்ட கடையில எல்லாத்துக்கும் காசு. ஏமாந்துட்டேனோ? ஆமான்னு வீட்டுக்குள்ளேருந்து ஒரு குரல் வந்துச்சு. திருப்பிக் குடுத்துறலாம். குடுத்துட்டு? 76 டாலர் டயர் நாலு, அகல டயரா H போட்டதா Costcoவுல வாங்கி பூட்டிறலாம். Town Fairக்குப் போன் பண்ணி வேணாம்னேன். நீங்க வாங்க எதாருந்தாலும் பேசிக்குவோம்னாரு கடக்காரரு. Costco வெவரத்தோட போனேன். இங்க பாருங்க, எனக்கு Hதான் வேணும், Costcoவுல 304+வரியோட 322க்கு இத்தனை உத்தரவாதத்தோட போட்றான், எனக்கு நீங்க போட்ட S வேணாம், கயட்டிக்கங்கன்னேன். என்னா சார் இப்படிச் சொல்லிட்டீங்க, அதே H டயரு, அதே சர்வீஸ் அவன விட 5% குறைஞ்ச வெலயில நாம்போட்டுத் தாரேன். அதான் என் கம்பெனி பாலிஸி, ஒங்க சந்தோஷந்தான் முக்கியம், நீங்க செவ்வாக்கெழம கூப்புடுங்க, டயரு வந்துருச்சான்னு சொல்லுறேன், மாத்திப்புடுவோம்னு சொல்லக் கிளம்பினேன். இதான் நான் டயருகொண்ட/கொள்ளும் படலம்.

சர்புதீங்கடையில எங்கப்பாவோட சைக்கிளுக்குப் பஞ்சர் ஒட்டிக்கிட்டதையும் இதையும் என்னமோ தெரியல கோத்துப் பாக்குறேன்.

5 comments:

said...

நண்பர் சு.வடிவேல்:

discount tires நம்பகரமான நிறுவனம்.tires.com
அவர்களது தளம்.வாங்கியதற்கு பிந்தைய சேவை
costco வைவிட சிறந்தது.அடுத்த தடவை இவர்களையும்
கேட்டுப் பாருங்கள் ;).

H Tire உயர்தர performance tire.பனியில் விலை
போகாது என நினைக்கிறேன்.

said...

நான் சொன்னதை திரும்பி எடுத்துக் கொள்ள
வேண்டியதுதான்.discount tires ல tire வாங்க
நீங்கள் மேற்கே ஒஹாயோ க்கு போகணும்
போலிருக்கு..உங்களூரில் கிளைகளைக் காணோம்!

said...

Dear Thangamani, Sundaravadivelu

In Honolulu, one has to pay thru the nose in the grocery store.

an artilce from honolulu advertiser - 18th july 2004.

//Next to gasoline, the commodity most likely to draw complaints for its high price in Hawai'i may be milk.


Milk was selling for an average of $6.36 a gallon in Honolulu last month, with some stores selling it as high as $7.99, according to a monthly survey by the state Department of Agriculture. That compares with prices of between $2 and $4 a gallon in Southern California.

"Eight dollars a gallon for milk, that's nuts," said Manoa resident Steve Lane.

Like many things sold in the Islands, milk goes for a premium because of the higher cost of doing business in Hawai'i. But unlike any other commodity, the price of milk is controlled by the state. It's not controlled to keep prices low as lawmakers have been attempting to do with a gasoline price cap. It's controlled to keep them high.
//

once a year or once in two years we have dock strike. First items to vanish from the ailes are Rice and toilet paper.

Practically everything has to be shipped from the mainland. Ppl coming from Mainland(mainly Texas) take months to get accustomed. Most of them, bring as much as they can from home.(students and their budgets. u bring it from home, and u dont have to pay for it. LOGIC LOGIC).

They say that Hawaii might be a paradise for tourists. not for the locals. :)

That way, Hawaii is incomparable ;)

said...

நன்றி வாசன், அவர்களது தளத்திலே வாங்கினால் அனுப்பும் செலவு இல்லையாம் (free shipping). இந்த முறைக்கு இங்கேயே ஒப்பேத்தியாகிவிட்டது:)

மதி, தகவலுக்கு நன்றி. கமஹமேஹா(?)காலத்துல மாடெல்லாம் ஒழுங்கா வளர்த்திருப்பாங்களோ! :)
அலாஸ்காவும் மனசுக்குள்ள வந்து போகுது!

said...

பாண்டி, மொதல்ல சாம்ஸ்கூடத்தான் இருந்தேன். ஒத்து வரலை, ரத்து பண்ணிட்டு இப்போ, காஸ்ட்கோவோட மானசீகமாக் குடும்பம் நடத்துறேன். இனி மறுபடியும் சாம்ஸ்கூடப் போறது யோசிக்க வேண்டிய விசயம்! ஆனாலும் உங்க யோசனைக்கு நன்றி :))