ஈயடிச்சான்!

பாதிப்பு: வலைப்பூ-The Dullest Blog in the World

நேற்று வீட்டுக்கு வரும்போது என் ஜீன்ஸ் பாண்ட் மழையில் நனைந்து விட்டது. அதைக் கழற்றித் துணி அலமாரிக்குள் தொங்க விடாமல், அலமாரிக் கதவிலேயே வெளிப் பக்கம் தொங்க விட்டுவிட்டேன்.

4 comments:

said...

அலுமாரிக் கதவு ஈரம் பட்டுப் பொருமிப் போகாதா..?

said...

பொருமிப் போகாதா
>>
பொருமி?
'நனைஞ்சு, ஊறிப் போகும்'ங்ற அர்த்தமா?

said...

பரி

மரத்தளபாடங்களில் தண்ணீர் ஊற்றுப் பட்டால்
தண்ணீர் பட்ட இடத்தில் மரம் கொஞ்சங் கொஞ்சமாகப் பொருமும்.(வீங்;குவது போல)
பொருமிய அந்த இடத்தில் அதாவது தண்ணீர் பட்ட இடத்தில் மரத்தின் மேற்பகுதி மேலெழுந்து வெடித்திருக்கும்.
இதற்கு மேல் எப்படி - பொருமி - என்பதை விளங்கப் படுத்துவது என்று தெரியவில்லை.
சரியான முறையில் விளக்க முடிந்தால் பின்னர் விளக்குகிறேன்.

நட்புடன்
சந்திரவதனா

said...

சந்திரவதனா,
இந்த விளக்கமே போதும் :-)

இதை நானும் பார்த்திருக்கிறேன். பெயர் சொல்லி அழைத்ததில்லை, அதனால் வந்த சந்தேகம்.

நீங்கள் கவலைப்படுவது மாதிரி பொருமிப் போக வாய்ப்பில்லை. வேதிப்பூச்சுகளைத்(chemical coatings) தாண்டி, உண்மையான மரக்கட்டை அவ்வளவு சுலபத்தில் நனையாது :-)

பலகைக்கு மரம் அறுக்க, மரத்தை ஊறப்போடுவதையெல்லாம் ஞாபகப்படுத்திவிட்டீர்கள் :)