பல நிற நாளொன்றில்!

மாடு சண்டித்தனம் பண்ணுகிறது. வண்டிமாடு சண்டித்தனம் பண்ணினால் தார்க்குச்சி போடுவதும், யாரோட பொடிமட்டையில இருந்தாச்சும் ஒரு சிட்டிகை மூக்குப் பொடியை மாட்டு மூக்கில் வைப்பதும் உண்டு. விஷயங்கள் என்னைச் சுற்றி உட்கார்ந்திருக்கின்றன. ஆளுக்கொன்றாய்க் கதை சொல்கின்றன. எதை எழுதுவது என்று கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்து விட்டு இந்தப் படத்தை இடுகிறேன்.

மாசிலனின் கைவண்ணம். எல்லா வண்ண மாத்திரைகளிலும் தலா ஒரு சொட்டுத் தண்ணீர், கையிலொரு தூரிகை, கொடுத்துவிட்டால் போதும். நோட்டுப் புத்தகம் மட்டுமில்லை, தரை, கால், வயிறு என்று வண்ணப்படும். ரொம்ப நாட்களுக்கப்புறம் அந்த வண்ணப் பெட்டியைப் பார்ப்பது போலிருக்கிறது. நிவேதிதாவின் நினைப்பும் வந்தது!
படக் குறிப்பு: இரண்டு எதிரெதிர்ப் பக்கங்களில் மாசிலன் வரைந்த படங்களை Photoshop மூலம் ஒன்றாய் இட்டிருக்கிறேன்!


1 comments:

said...

மாசிலா.. புதுயுக பிக்காசோவே வருக!

நவீன ஓவியம், பார்ப்பவரின் எண்ணங்களின் வெளிப்பாடாக, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காட்சி கிடைக்குமாமே? எனக்கு முதல் ஓவியத்தில் ஒரு சேவலும் அடுத்ததில் தலை கீழாகத் தொங்கும் குறுவியும் தெரிகிறது. உங்களுக்கு?