மனசே மனசே



ராபர்ட் சின்னப் பிள்ளையாயிருந்த போது ஒரு படம் வரைந்தான். அவன் வாத்தியார் இது என்ன படம் என்று பரிகசித்தார். ராபர்ட் மூன்றாம் வகுப்புத் தேர்வில் கடையனாகத் தேறினான். ஆசிரியர் மோசம் என்றார். அடுத்தடுத்த வருடங்களில் படு மோசமானான் ராபர்ட். நுண்ணறிவுச் சோதனைகளில் (IQ test) தடுமாறுகிறான்.

ஆறாவது வகுப்பிலொரு ஆசிரியர் இவனிடம் என்னத்தையோ கண்டுவிட்டு நன்றாகத்தான் படிக்கிறாய் என ஊக்குவித்தார். ராபர்ட் நன்றாகப் படித்தான். தனக்கு நுண்ணறிவுச் சோதனைகளில் ஏன் தடுமாற்றம் என்று சோதனை முறைகளையே சந்தேகிக்கிறான். நடைமுறை வாழ்க்கைக்கும் புத்தக அறிவுக்கும் வித்தியாசமிருப்பதாக எண்ணி இதனைத் தன் வகுப்புத் தோழரிடமே ஆய்வு செய்கிறான். கல்வி நுண்ணறிவும் (intelligence), நடைமுறை நுண்ணறிவும் வெவ்வேறே என்ற அவனது எண்ணம் வலுப்படுகிறது. பிறகு ராபர்ட் பல்கலைக் கழகத்தில் மனோவியலில் சேருகிறான். அறிமுகப் பாடத்தில் தட்டி முட்டித் தேறிய அவனிடம் வாத்தியார், ம்ஹ¥ம், நீ வேறு பாடம் படிப்பதே புத்திசாலித்தனம் என்க, இவனும் கணக்குக்கு ஓடுகிறான். அங்கோ இதை விட மோசம். மீண்டும் உளவியலுக்கே வந்து படித்தான். பிறகு ராபர்ட் வளர்ந்து பெரிய்ய்ய பிள்ளையாகி ராபர்ட் ஸ்டெர்ன்பர்க் என்ற உளவியல் நிபுணனாகி நேற்றைக்கு நம்ம திருவிழாவுல நடந்த ஒரு கூட்டத்துக்கு வந்து நுண்ணறிவைப் பத்திப் பேசினார். இவரோடு இன்னும் இருவரும் பேசினார்கள். என்ன தெரியும்கறத விட எவ்வளவு தெரியாது அப்படிங்கறதுதான் தெரிஞ்சது!

பேச்சின் மொத்த விஷயம்/கேள்விகள்! தன் இனத்தையே போரினாலும் வெறுப்பினாலும் அழித்துக் கொள்ளும் மனித இனத்தை விண்வெளியிலிருந்து பார்க்கும் யாருமே ஆச்சரியப்படுவர். விலங்கிலிருந்து பிறந்த இந்த விலங்கின் மனம் எப்படிப் பரிணமிக்கிறது? மூளையைப் பார்க்கலாம். பொருள். அது ஏற்படுத்தும் மனசைப் பார்க்க முடியாது. புலன்கள் மனசைக் கட்டமைக்கின்றன. கற்றுக் கொள்ளுதல் பிறந்ததிலிருந்தே நிகழ்கிறது. தேவையை உணர்தல், தேடுதல், அடையாளங் காணுதல், எளிமைப் படுத்தல் இதெல்லாம் மனசின் கூறுகள். இக்கூறுகளெல்லாம் புறக் காரணிகளால் பாதிக்கப் படுபவை. மாற்றப் படும் சாத்தியமுள்ளவை. மனசின் கட்டமைப்பில் கலாச்சாரத்துக்கும் முக்கியப் பங்குண்டு. இந்தியனுக்கும் அமெரிக்கனுக்கும் ஒரே மாதிரியான சோதனை செல்லாது. வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கு ஏற்ற துறையைத் தேர்ந்தெடுத்ததன் மூலமே வெற்றி பெற்றவர்களாயிருக்கிறார்கள். எனவே உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். ஸ்டெர்ன்பெர்க் ஒரு நுண்ணறிவுச் சோதனையைச் செய்து வருகிறார். அதில் ஏற்கெனவே சொன்னது மாதிரி கல்வி நுண்ணறிவு, நடைமுறை நுண்ணறிவு இவற்றோடு பகுப்பாய்வு நுண்ணறிவு (analytical intelligence) இதையும் சேர்த்து ஆராய வேண்டும் என்கிறார். இப்போதைய பள்ளிகள் வெறும் கல்வி நுண்ணறிவை மட்டுமே சோதித்து விட்டு மாணவர்களை மதிப்பிடுகின்றன. இது உண்மையான மதிப்பீடு அல்ல. இவர்களது பலவிதமான திறன்களையும் சோதித்தே மதிப்பிட வேண்டும். இதன் மூலம் வெறும் ஏட்டறிவே அறிவு என்ற நிலை மாறும்.

அப்புறமாய்க் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப் பட்டது. சொந்த விஷயங்களைக் கூடக் கூச்சமில்லாமல் மக்கள் பேசுகிறார்கள், உதாரணமாய் ஒருவர், எனக்கு இருமுனைக் கோளாறு (bipolar disorderக்கு இப்படிச் சொல்லலாமா?) இருக்கிறது, இதற்கு வைத்தியம் செய்து கொள்கிறேன், இதை நான் எப்படிச் சீக்கிரம் குணப்படுத்திக் கொள்வது? இது மாதிரியாக. நான் கேள்வி பதில்களின் போது கவனச் சிதறலில் சிக்குண்டேன். ஏனெனில் நானும் என் கேள்விகளை யோசித்தபடி எழுந்து வரிசையில் நின்றேன். எனக்கு முன் ஒரேயொரு ஆள் இருக்கும்போது நேரம் முடிந்ததையா என்றுவிட்டார்கள். எனவே என் கேள்விகளுக்கு நீங்கள் விடை(?) சொல்லுங்கள்! குழந்தைகளுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் கொடுப்பதன் மூலம் அவர்களது நுண்ணறிவுத் திறனை மட்டுப் படுத்துகிறோமா, உதாரணமாக எனக்குச் சிறு பிள்ளையில் ஒரு மரக்கட்டையே பொம்மை, வீடு, பஸ், கிணற்றில் தண்ணீர் இறைக்கும் வாளி எல்லாம். இப்போது என் மகனுக்கு ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பொம்மைகள். இது அவனது நுண்ணறிவு வளர்ச்சியை எப்படி மாறுபடுத்தும்?

வீடு திரும்பும்போது இந்த மனோ பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்? இப்போதைய உலகியல் சார்ந்த புரிதல்களோடு நாம் நின்றுவிடுமா அல்லது அதையும் தாண்டி மெய்யறிவு என்கிறார்களே அது மாதிரி எதையேனும் கண்டு கொள்வோமா? திருவிழா என்றால் கூத்துப் பாட்டுக்களோடு நில்லாமல் பல்விதமான நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார்களே, நம்ம நல்லநிலம் முத்துராமன் இங்கிருந்திருந்தால் உங்களுக்கு இன்னும் நிறையக் கிடைத்திருக்கலாம் என்றவாறு மனம் இயங்கிக் கொண்டு வந்தது!

பின் குறிப்புகள்:
1. ஸ்டெர்ன்பெர்க்கின் இணைய பக்கம்.
2. மேலே இருக்கும் படத்தை நான் எடுக்க வில்லை, நிகழ்ச்சி நிரலிலிருந்து உருவியது.

17 comments:

said...

From http://nonzenzone.blogdrive.com/comments?id=87 :

Entry: ஏதோ இன்னிக்காலல என்னால ஆனது Monday, March 01, 2004

Posted by பெயரிலி @ 03/01/2004 02:33 PM PST
"இருமுனை ஒழுங்கின்மை", "ஈரந்த ஒழுங்கீனம்" எனவாச்சும் நேரடியா உடைச்சுச் சொல்லிடுவேன். ஆனா, mania & depression ரெண்டும் ஆல்டனேட்டிவ்வா ஓடிக்கிட்டிருக்கிறதால, இதுவும் நமக்குள்ள நோயாச்சோன்னு (disorder எங்குறத நோயின்னும் சொல்லமுடியுமா தெர்யல்ல) யோசிச்சுக்கிட்டிருக்கனா, கொஞ்சம் நோய்க்கேத்தமாதிரித்தான் தேடவேணுமாக்கும். "ஈருணர்வுநிலை ஒழுங்கின்மை"ன்னு சொல்லப்போனா, அதுக்குள்ளாற பேஷண்டு பேஷண்ஸ் இல்லாம ரெண்டு தடவ தன்னோட maxima-minima வ தொட்டுட்டு வந்துடுவான். "உணர்ச்சிப்பிறழ்வுநிலை ஒழுங்கீனம்", "உணர்ச்சிநிலை அலைவு", "உயர்தாழ் உணர்ச்சிமாற்ற ஒழுங்கீனம்", "ஈரந்த உணர்ச்சி ஒழுங்கின்மை" அப்டீன்னு டெபினிஸனையே குடுத்துடலாமுன்னாலும் சரியில்லே.

இராம.கி, வெங்கட், காசி இவுங்ககிட்ட கேளுங்கையா. உருப்படியா ஏதாச்சும் தருவாங்க. அதுல ஆளுக்கேத்த weight போட்டு ஒரு weighted average பாத்து எடுத்துங்க. நானும் அங்ஙன இங்ஙன பாத்துக்கொண்டிருக்கேன். நிச்சயமா இதுக்கு ஏற்கனவே தமிழ் வைத்தியத்துல மருந்து... அடச்சே! மருத்துவச்சொல் இருக்கவே செய்யுமுன்னு நினைக்குறேன்.


Posted by Balaji @ 03/01/2004 01:38 PM PST
புத்தம் புதிய வார்த்தையோ, பத்தாம் பசலி வார்த்தையோ.... Bipolar disorder என்பதற்கும் பெயரிலி ஒரு தமிழ் சொல் கொடுக்க முடியுமா... (அடுத்து என்ன... இங்கே தமிழ் சொல்லாக்கம் செய்யப்படாது என்று பதிவு வராதவரைக்கும், அட்வான்ஸ் நன்றி!)


Posted by பெயரிலி @ 03/01/2004 12:11 PM PST
அப்பா ஏழுகொண்டலவாசா அது என்னோடதானான்னு எனக்கு நெசமாத் தெரியாது. எழுதுறாப்ப தோணிச்சு. எழுதிட்டேன். முன்னமே யாராச்சும் சொல்லிருந்திருக்கலாமோ என்னமோ தெரியாது. அதனால, அத புதிய வார்த்தன்னு சொல்லிடத் தயக்கம் சாமி.


Posted by Balaji @ 03/01/2004 11:53 AM PST
பிளவாளுமை - புதிய வார்த்தைக்கு நன்றி...


Posted by பெயரிலி @ 03/01/2004 11:17 AM PST
பிளவாளுமையா? யாமா? யாமேன் இனிவரும் காலத்திலே பிடித்தலைய வேண்டியிருக்கும்? ஏற்கனவே எம்பிரான் பரமசிவன் நமக்குத்தான் நாயாய், பேயாய், பல்லாயிரம் கணங்களாய் ஆகி நின்று அவனை விதந்தேத்தும் பணியினைத் தந்திருக்கின்றானே! யாமேன் பிளவாளுமைப்பித்தகப்பட்டு பிணியுழன்று, இப்பொல்லாவுலகில் புல்லாய், புழுவாய், பெருமரமாய், கல்லாய், பாம்பாய், பல்லாயிரம் பர்ஸனாலிட்டி, அனிமலாலிட்டி, ரெப்டைலாயில்ட்டி எல்லாமாகி!!!

இதுக்கே போயி இப்புடின்னா?


Posted by Shankar @ 03/01/2004 11:08 AM PST
இந்த யூனிகோடு-திஸ்கி இம்சை வேற பெரிய இம்சை. நாஞ்சொல்ல வந்தது இன்னான்னா:
ஒரு நா இல்லாட்டி ஒரு நா split personalityல கிறுக்கு புடிச்சு அலையப்போறதென்னவோ நிச்சயம். நீங்களா நாங்களான்னுதான் தெரியல.

said...

சித்த மருத்துவம் சித்தர் மகத்துவம் எல்லாமாகி(கிருபா கிறுக்குக்கு நல்லதொரு மருந்து சித்த மருத்துவத்தில் உண்டு அதாகப்பட்டது என்னவென்றால்...வேண்டாம் ஓடாதீர்கள்..)

said...

நன்றி பாலாஜி.
:)) இது மாதிரி நல்லக் கூத்துக்களையெல்லாம் இழந்துட்டோம் :(

இருமுனையை தமிழ் இணையப் பல்கலைக் கழகத்திலிருந்து எடுத்தேன். கோளாறை நானாகப் போட்டேன். எல்லாருக்கும் ஒரு அடியும் ஒரு முடியும் இருக்கு. அதோட விஸ்தீரணத்தை வச்சு, நமக்குப் பழக்கப் படாததா இருந்தா, ஒழுங்கின்மை, கோளாறுன்னு சொல்லிர்றோம். இப்போதைய ஒழுங்கின்மையே ஒரு ஆயிரம் வருடங்களுக்கப்புறம் ஒரு சாதாரண நடவடிக்கையாக இருக்கலாம். மனோநிலைகளின்படி மனிதர்களை வரையறுப்பது எங்கோ இடிக்கிறது, இல்லையா? அத்தனைப் பெயரிலிகளிலே ஒருத்தராச்சும் வந்து விளக்குவாங்களான்னு பாப்போம்!:)

ஈழநாதன் அது என்ன க்ருபா ஷங்கரின் சித்த மருத்துவம், போயிப் படிச்சுப் பாக்குறேன்!

said...

கொவார்ட் கார்ட்னர் மல்டிபிள் இன்டெலிஜென்ஸ் குறித்து எழுதியுள்ளார். திறன்கள் (உடல்,மன) ஒரே மாதிரியாக எல்லாக் காலங்களிலும் மதிக்கப்படுவதில்லை. எனவே அறிவாற்றலின் பல பரிமாணங்கள் நமக்குத் தெரிவதில்லை. மவுசை இயக்கி வட்டம் வரைவதற்கும், கைப்பழக்கமாக காகிதத்தில் வட்டம் வரைவதும் வேறு. தொழில் நுட்ப முன்னேற்றம் காரணமாக பிந்தையது இன்று தேவையில்லை என்று நாம் நினைக்கலாம். ஆனால் அப்படியல்ல. ஏனெனில் கைப்பழக்கம் வேறு பல
திறன்களுக்கு வழிவகுக்கும். அவை இன்று தேவைப்படுகின்றவா என்பது வேறு கேள்வி.

said...

டிஸ்ஆர்டர் நோயா இல்லை இயல்பா என்பது குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை, உடன்பிறந்தே வாழ்விக்கும் வியாதியாக இருக்கலாம் :)

said...

how about unipolar disorder :)

said...

ஜெயலலிதாவுக்கு uni-polar disorder இருப்பதாக அரசல் புரசலாக கேள்விபட்டேன். அதுவே ஆரம்பத்தில் மேலும் அறிந்து கொள்ள உந்துதலாக இருந்தது. இருப்பதாக கற்பனை செய்து அவரின் நடவடிக்கைகளை அலசிப் பாருங்களேன் :P

said...

இராமகிருஷ்ண பரமஹம்சரின் பேரின்ப நிலையோ அல்லது பலரும் வேண்டும் 'நித்யானந்த' நிலையோ unipolar disorder என்ற வகையில் அடங்குமா என்று யோசிக்கிறேன். இன்பம் என்பதற்கு மட்டும் சிறப்பு விதி விலக்கா?!

said...
This comment has been removed by a blog administrator.
said...

தற்சமயம் இந்தியாவில் செய்த லிப்டன் தேநீர் பை ஒன்றையும், நியூ ஜெர்சியில் இறக்குமதி செய்யப்பட்ட ஏசியன் கவுர்மெட் தேநீர் பை ஒன்றையும் கல்ந்து ஒரு தேநீர் உருவாக்கி ருசித்துக் கொண்டே எழுதுகிறேன். ஆகா! சொல்லொனாத இன்பமடி என் சுந்தரி!.

இந்த மாதிரி போக்கெல்லாம் எந்த வியாதி வகையில் வரும்? :)
உறிஞ்சிக்கொண்டே ,
நான் :)

said...

/இந்த மாதிரி போக்கெல்லாம் எந்த வியாதி வகையில் வரும்? :)/

ஏற்கனவே உங்களுக்கு இருக்கிற மிச்ச வியாதிகளைப் பற்றிச் சொன்னாற்றான் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வரமுடியும்:-)

வர வர தேநீரிலேயே கார்த்திக்குஅதை இதைக் கலந்து கஞ்சி காய்ச்சஆரம்பித்துவிட்டார். போகிறபோக்கிலே கள்ளச்சாராயம் காய்ச்சித்தான் தீருவார் என்று நினைக்கிறேன். :-)

said...

அடடா லேட்டா வர்றேன் போல இருக்கே.
ஏங்க சு.வ. உங்க மனசுல என்ன நெனச்சிக்கிட்டிருக்கீங்க? நான் மனசு பத்தி கிறுக்கினா நீங்களும் எழுதிடறதா? கொஞ்சம் புரியற மாதிரி எழுதினா என்ன? :-))

said...

//இருக்கிற மிச்ச வியாதிகளைப் பற்றிச//
ம்ம்.. வந்து... காபிதான் டீதான் ஒரே பானம் கிடையாது! ஒரு 2 வாரம் காபி குடிக்கிறது. அப்பற்ம் ஒரு 2 வாரம் டீகேப் காபி, அப்பறம் போர் அடிச்சவுடனே டீ. முதல் 2 வாரத்துக்கு பாலில்லாத ப்ளெயின் டீ; அப்பறம் கொஞ்ச நாள் பால் போட்ட டீ. எப்பாயாவது சில சமயங்களில் பாலும் தேனும் கலந்து குடிப்பதுண்டு; இது தவிர சனி ஞாயிறுகளில் மட்டும் டங்கின் டோனட்ஸ் டீ; சில இரவுகளில்
பேய் பிடிச்சா மாதிரி இருக்கும்போது மட்டும் ஸ்டார்பக்ஸ் சென்று ஒரு லாட்டா சாய் ; இல்லன்னா காபி.

இப்ப சொல்லுங்க எனக்கு என்ன வியாதி? :)

said...

//இருக்கிற மிச்ச வியாதிகளைப் பற்றிச//
ம்ம்.. வந்து... காபிதான் டீதான் ஒரே பானம் கிடையாது! ஒரு 2 வாரம் காபி குடிக்கிறது. அப்பற்ம் ஒரு 2 வாரம் டீகேப் காபி, அப்பறம் போர் அடிச்சவுடனே டீ. முதல் 2 வாரத்துக்கு பாலில்லாத ப்ளெயின் டீ; அப்பறம் கொஞ்ச நாள் பால் போட்ட டீ. எப்பாயாவது சில சமயங்களில் பாலும் தேனும் கலந்து குடிப்பதுண்டு; இது தவிர சனி ஞாயிறுகளில் மட்டும் டங்கின் டோனட்ஸ் டீ; சில இரவுகளில்
பேய் பிடிச்சா மாதிரி இருக்கும்போது மட்டும் ஸ்டார்பக்ஸ் சென்று ஒரு லாட்டா சாய் ; இல்லன்னா காபி.

இப்ப சொல்லுங்க எனக்கு என்ன வியாதி? :)

said...

இந்தா மாதிரி நாய் குடி குடிக்கிறதுக்கு பதிலா கள்ளச் சாராயமே குடிக்கலாம் என்கிறீர்களா?

said...

அடா அடா கார்த்திக்கு! இப்படியொரு காரம், மணம், குணம் இருக்க வியாதியைப் பற்றி நான் கேள்விப் பட்டதே இல்லையே. ஏதோ ஒரு பேச்சுக்கு, சாரி, கவிதைக்கு, பெயரிலி "பீக்கோ டீயைப் பருகுமின்" அப்படின்னு எழுதினா அதையே கஷாய வாக்கா எடுத்துக்கிட்டு இப்படிச் சாயத்தண்ணி குடிச்சுக்கிட்டு ராராவா அலையலாமா? எதற்கும் நம்ம சேலத்துக்குப் பக்கத்துல குட்டிச் சாமியார்னு ஒருத்தர் புதுசாக் கிளம்பியிருக்காராம். அவருகிட்ட நீங்க போறதுதான் நல்லதுன்னு அண்டரண்ட பஜ்ஜி சொல்லுது :)

பரி - அந்தக் குரங்கு இங்கயும் இருக்காக்கும். அதுவும் சும்மா இல்ல, கண்டதையும் குடிச்சுட்டு ஆடுது, அதான் அதுக்கும் வெளங்கல, உங்களுக்கும் வெளங்கல!
ஆண்டிப் பண்டாரம் பாடுகிறார்: காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி...

said...

உங்களுக்கெல்லாம் என்ன வியாதியோ எனக்கு தெரியாது. ஆனா இணையத்துல நுழையற தமிழ் எழுத்தாளர்களுக்கு வர்ற வியாதியைப்பத்தி எழுதியிருக்கேன் (http://silandhivalai.blogspot.com/2004/06/syndrome.html). படிச்சுப்போட்டு போங்க..