குமுதினி - ராஜாவின் மறுமொழி

தட்டுவோம், திறக்கும் என்ற சென்ற பதிவுக்கு நண்பர் ராஜா மறுமொழியிட முயன்றிருக்கிறார். என் மறுமொழிப் பெட்டியில் ஏதோ பிழை. அவரால பதிய முடியலை. தனியஞ்சலில் அனுப்பினார். அவருடைய மறுமொழி இதோ:

"இந்தக் குமுதினிப் படகுப் படுகொலையைப் பற்றி நான் கேள்விபட்டதில்லை. இது போல இன்னும் எத்தனையோ வெளியே வராத விசயங்கள் ஈழத்தில் நடந்துள்ளன. ஈழத்தைப் பற்றிப் பேசினாலோ, எழுதினாலோ அது தேசத் துரோகம் என்பது போல நம் நாட்டிலேயே எண்ணப்படும் போது நாம் அமெரிக்காவையும் மற்ற நாடுகளையும் ஏன் சலித்து கொள்ள வேண்டும்? ராஜிவ் கொலை என்பது மன்னிக்க முடியாத, தன்னிலை விளக்கத்திற்கும் (துன்பியல் சம்பவ???்) உட்படுத்த முடியாத, நம் உணர்வுகளைக் காயப்படுத்திய, மாறாத ஒரு வடுவை நம் நெஞ்சங்களில் ஏற்ப்படுத்திவிட்ட ஒரு பாதகசெயல் என்ற விதத்தில் எனக்குப் புலிகள் மேல் தீராத ஆற்றாமை உண்டு. ஆனால் இப்போது நம் அமைதிப் படையினர் அங்கே செய்த கொடுமைகளைப் பற்றி அம்மக்கள் சொல்லக் கேட்கும் போது அவர்கள் கோபத்தில் நியாயம் இருக்கிறதோ என்று கொஞ்சம் மனதில் படுகிறது. அந்த ஒரு தவறை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு நாம் இன்னும் ஈழம் பற்றியும், அம்மக்கள் படும் துயரம் பற்றியும் கிஞ்சித்தும் அக்கறையில்லாமல் இருப்பது, ஈழம் பற்றிப் பேசினாலே பொடா பாயும் என்று பயமுறுத்துவதும் நம் தமிழ் இனத்துக்கே நாம் செய்யும் வரலாற்றுத் துரோகம். ஒரு தமிழனாகிய எனக்கே இந்தக் குமுதினி படுகொலை இதுவரை தெரிய வில்லை, என்னைப் போன்ற பலருக்கும் இது வரை இது தெரியவில்லை என்பதும் இது பற்றிய செய்தியை தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை என்பதும் நம் தமிழ்நாட்டு ஊடகங்கள் நமக்கு செய்து வரும் மிகப் பெரிய துரோகம். முதலில் சரிய செய்யப்பட வேண்டியது இது தான்.

வெட்டி வீழ்த்தப்பட்டு, வெட்டுக் காயங்களுடன் போராடிக் கொண்டிருக்கும் நம் மக்களுக்கு முதல் உதவி முதலில் நாம் செய்வோம். உதவிக்கு அடுத்த வீட்டுக்காரன் கதவை தட்டுவது பற்றியெல்லாம் அப்புறம் யோசித்துக் கொள்ளலாம்".

நன்றி ராஜா!

5 comments:

said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ப்ளாகரின் புது வடிவம் நன்றாயிருக்கிறது. மறுமொழிப் பெட்டி வித்தியாசமாக வேலை செய்கிறது. ஹாலோஸ்கேன் பெட்டியைத் தூக்கினால் பழைய மறுமொழிகளெல்லாம் போய்விடுமே! அதான் ரெண்டையும் வச்சிருக்கேன். ப்ளாகரில் நிறைய ஒட்டலாம். பாருங்க!

but it looks like this new blogger commenting is enabled in posts only from May 11th. Not before that. So if i remove the Haloscan from my template, will it remove all my old comments? dumb questions eh? :)

Anonymous said...

நன்றி நண்பர்கள் ராஜா சுந்தரவடிவேல் இருவருக்கும்,ஏதோ ஒரு வகையில் இருவரும் ஈழத்தில் நடப்பவை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் இந்திய அமைதிப்படையினரின் யாழ்ப்பாண விஜயம் பற்றி பல்வேறு தகவல்கள் ஆதாரபூர்வமாக என்னால் தரமுடியும் ஆயினும் சிலர் மனது புண்படுமே என்பதற்காகத் தவிர்த்து வருகின்றேன்.நீங்கள் எல்லோரும் விரும்பினால் எனது வலைப்பதிவுகளில் சிலவற்றைப் படங்களுடன் தருகின்றேன்.

www.kavithai.yarl.net


நீங்கள் சொன்ன குமுதினிப் படகுப் படுகொலை பற்றிய படங்களை மதி அக்காவின் பதில்கள் பகுதியில் சுட்டிகளாகக் கொடுத்துள்ளேன் பாருங்கள்.மேலதிகப் படங்களை எனது புகைப்படச் சேகரிப்பிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்

http://photos.yahoo.com/eelanathan

ஈழநாதன்

Anonymous said...

hello ithula payaapadaraththukku eanna irukku. ippadi payanthu payanthuthaan eallaarum namma eeri mithikkiraangka.

said...

நன்றி ஈழநாதன். உண்மைகளைச் சொல்வதே நல்லது. புண்படுமென்று பார்ப்பதில் பயனில்லை. எல்லோருக்கும் தெரியட்டும். பிறகு அவரவரே முடிவு செய்துகொள்ளட்டும்.

i think this commenting wont let everyone in...lets see.