வெளிநாடுகளில் வசிக்கும் நம்மில் பலரிடம் frequent flyer miles இருக்கும். Northwest Airlines (NWA) மற்றும் Continental Airlinesன் மைல்கள் உங்களிடம் இருந்தால் Americares அதைப் பெற்றுக் கொள்கிறது. இதைச் செய்வது சுலபம். உங்கள் கணக்கு எண்ணுடன் NWA/Continental ஐத் தொடர்பு கொண்டு Americaresக்கு என் மைல்களைக் கொடுங்கள் என்றால் போதும். Americaresஇடம் இதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை. 5 நிமிட வேலை.
இப்போது பார்க்கிறேன் செஞ்சிலுவைச் சங்கம் பல விமான நிறுவனங்களின் மைல்களையும் (including the famous Delta Skymiles) வாங்கிக் கொள்கிறதாம். நீங்கள் கொடுக்கும்போது "சுனாமிக்காக" என்று குறிப்பிடவும்.
மதியம் வெள்ளி, டிசம்பர் 31, 2004
இப்படியும் கொடுக்கலாம் - Frequent Flyer Miles
Posted by சுந்தரவடிவேல் at 12/31/2004 10:49:00
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஐரோப்பாவின் சிலநாடுகளில், இதற்கென ஏற்படுத்தப்பட்ட குறுஞ்செய்திகளை (SMS) அனுப்புவதன் வாயிலாகத் தோற்றுவிக்கப்படும் வருவாய், நிவாரண நிதிக்காக அனுப்பப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Thanks PKS. The ones we accumulated in 2001-2003 and almost unusable like you said were still there unexpired. I wish I know the expiration limits of such miles. But I believe yours could still be active to donate.
ராதா, நீங்கள் சொல்வது பற்றி எனக்குத் தெரியாது. அதற்குப் பயனர்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா அல்லது சும்மா செய்தியனுப்பிக் கொண்டிருந்தாலே போதுமா என்று உங்கள் பதிவில் ஒரு குறிப்பு போடலாமா? நன்றி.
சுந்தர், இதற்கென்று பயனர்கள் சிறப்பாகச் செய்யவேண்டியதில்லை. அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு (உ-ம்: 9999) குறிப்பிட்ட வார்த்தையுடன் (உ-ம்: சுனாமி, ஆசியா...) குறுஞ்செய்தியை அனுப்பவேண்டும், அவ்வளவுதான். அவ்வாறு அனுப்பப்படும் ஒவ்வொரு கு.செவுக்கும் ஸ்விஸ் பயனர்கள் 1 முதல் 5 ஃப்ராங்குகள் (அருகாமை நாடுகளில் யூரோவில்) கட்ட வேண்டியிருக்கும். பயனர்களிடமிருந்து வசூலிக்கப்படும் அத்தொகையை, சேவை வழங்குவோர் தொண்டு நிறுவனங்களுக்கு (உ-ம்: யூனிசெஃப், காரிடாஸ்) அளித்துவிடுவர்.
Post a Comment