உண்டியல் குலுக்குவோமா?

அமெரிக்காவிலிருப்போர் உண்டியல் குலுக்கலாமா?
பலமுறை நாம் பார்த்திருக்கிறோம், தீயணைப்புத்துறை, ஆப்பிரிக்க நிவாரணம், இது மாதிரி உண்டியல்கள் சாலைச் சந்திகளில், பாதையோரங்களில், கடைகண்ணிகளில் குலுங்கும். இது விடுமுறைக்காலம். கூட்டம் கூடும். இப்போது செய்திகள் கொஞ்சம் பரவியிருக்கின்றன. புஷ்ஷ¤ம் ஆதரவைக் காட்டியிருக்கிறார். இப்போது உண்டியல் குலுக்கினால் கொஞ்சம் காசு தேறும்.

எப்படிச் செய்வது?

நாம் எதையும் விற்கப் போனால்தான் பெரும் விண்ணப்பப் படிவங்கள், அனுமதிகள் என்று அலைய நேரும். விற்காமலிருக்கும் வரை நாம் உள்ளூர்ப் போலீசாரிடம் பேசி அந்தப் பகுதியில் நிதி கோரலாமா (zoning regulations) என்று கேட்டுக் கொண்டால் மட்டும் போதும் எனத் தெரிகிறது. நீங்கள் உங்களூர் தமிழ்ச்சங்கத்தோடு இணைந்து இதைச் செய்வது நலம். ஒரு நாலைந்து பேர், நாலைந்து இடங்களில செய்யமுடிந்தால் போதும்். இதைத்தான் நாளை செய்வதாகத் திட்டமிட்டு வருகிறோம். விடுமுறைக் காலத்திலேயே இதைச் செய்து முடிப்பது நல்லது என நினைக்கிறேன். எவ்வளவோ பேருக்குக் கொடுக்க மனமிருக்கும், எப்படி எங்கேயென்று தெரியாது. கையிலிருப்பதைப் போட்டுவிட்டுப் போவது அவர்களுக்குச் சுலபம். அவர்களது ஒவ்வொரு டாலரும் நமக்கு முக்கியம். எப்படிப் போகிறதென்று பார்க்கலாம்.

மறந்து விட்டது, ஒரு அரைப் பக்கத்தில், ஏன் இந்த வசூல், என்ன நடந்தது, நீங்கள் யார் (எந்த சங்கம்), விருப்பமானோர் வேறு எங்கெல்லாம் நிதியளிக்கலாம் அல்லது விபரம் பெறலாம் போன்ற விபரங்களை மக்களிடம் கையளித்தல் நல்லது.

1 comments:

said...

அன்புள்ள சுந்தரவடிவேல்,

இங்கே நியூஸிலாந்தில் நாங்களும் ( தமிழ்ச் சங்கம்) இந்த ஷாப்பிங் மால்களில் எல்லாம் உண்டியல்
குலுக்கி வசூல் செய்கிறோம்.

சிங்களாவர்களின் சங்கங்களும் 'ஸாசேஜ் சுட்டுக் கொடுத்து பணம் வசூலிப்பதாக'நேற்று தொலைக்காட்சி
செய்தி சொன்னது.

இன்றும் உண்டியல் குலுக்குவோம். இங்குள்ள ( கிறைஸ்ட்சர்ச் நகரம்) இந்தியர்கள் என்ன செய்யப் போகிறார்கள்
என்ற விவரம் இதுவரை இல்லை!