ஒரு மதியம்

உண்டியல் குலுக்கக் காலையிலிருந்து ஆட்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருத்தரையும் காணலை. மதியம் நான் மட்டும் கிளம்பி எங்கே போவதென்று முடிவின்றி, கார் போன போக்கில் போய் Lowe's வாசலில் நின்றேன். அச்சடித்த துண்டுக் காகிதங்களும் ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவுடனும். ரெண்டு மணி நேரம் நின்றிருப்பேன். கேள்வி கேட்காது கொடுத்தவர்கள், கேள்வி கேட்டுக் கொடுத்தவர்கள், ஏற்கெனவே கொடுத்துட்டேன், இல்ல சாரின்னு போனவர்கள்,சுனாமியா, எங்கே? என்று எல்லா விதமாயும் இருந்தார்கள். நிறைய பேர் நின்று விசாரித்தார்கள். உன் வீட்டில் எல்லோரும் பத்திரமா என்றார்கள். ஒரு அம்மா கையைப் பிடித்துக் கொண்டு கண் கலங்கினார். இன்னொருத்தர் நமக்காக இறைவனைத் தொழுதார். வீட்டுக்கு வந்து எண்ணிப் பார்த்தபோது 125 டாலர்களும் 82 காசுகளுமிருந்தன. இன்னும் என் தோழரெல்லோரும் வந்திருந்தால், ஒரு பத்து இடங்களில் சேர்த்திருந்தால் என்று மனக்கணக்கோடியது. TROவுக்கு அனுப்புகிறேன். நன்றி மனிதமே.

11 comments:

said...

சுந்தரவடிவேல், உணர்ச்சிவசப்படாமல் மெய்யாகவே நிறையச் சொல்ல விரும்புகிறேன்; ஆனால், சொல்ல வார்த்தையில்லை.

said...

பாராட்டுகள் சுந்தரவடிவேல்!

said...

பெரிசில்ல. ஆதங்கமெல்லாம் நிறைய பேர் சேர்ந்தா நல்லாருக்குமேங்கறதுதான்.

said...

you did a good job, sundar

said...

ஆயிரம் வார்த்தைகளில் எழுதுவதைவிட இரண்டுமணி நேரம் நின்றது மாபெரும் செயல். என்னுடைய மனம் கனிந்த பாராட்டுக்கள். - வெங்கட்

said...

மகத்தான காரியத்தைத் தனியாளாகச் செய்திருக்கிறீர்கள் சுந்தரவடிவேல். பாராட்டுக்கள்!

said...

நன்றிடா!
என் அன்பும் வணக்கமும்.

said...

மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் நிதி திரட்ட நீங்கள் செய்துள்ள முயற்சி மகத்தானது. பாராட்டுக்கள் சுந்தர்!

-ராஜா

said...

உமது சிந்தனையின் உறுதியை உமது செயல் காட்டுகிறது. உங்களைப் பாராட்டும் பொழுது
என் சிறிய தோற்றமும் கண்முன் வருகிறது.

said...

I don't know what to say. Only i could say THANK YOU from bottom of my heart.

said...

வார்த்தைகளைத் தேடுகிறேன் - கிடைக்கவில்லை.. This is really great