காரணம்

நெற்களத்தடி வைக்கோல்
தேங்காய்நார்ப் பஞ்சு
கூட்டியெறியும் தலைமயிர்,
அள்ளிச் சொருகிச் சுற்றித்
திரிக்குங் கயிறு

பிசைந்து அறுத்துச்
சூளையிட்டுச் சுட்டுச்
சிவக்குஞ் செங்கல்

இப்படியே என்
நாள்மலரரும்பும் நீளும்
நிகழ்விட்டு நிரப்பும்

இன்றைக்கு இவ்வரிகளையும்
சேர்த்துக் கொள்கிறேன்

ஏன்னு கேட்டா என்ன சொல்ல?
அம்மா சொல்லும்,
கொண்ட வய்யி எதுக்காச்சும் ஆவும்.

2 comments:

said...

/அம்மா சொல்லும்,
கொண்ட வய்யி எதுக்காச்சும் ஆவும்./

said...

/அம்மா சொல்லும்,
கொண்ட வய்யி எதுக்காச்சும் ஆவும்./

இது கவிதையாக வருகின்றது. தங்கமணிக்கும் இன்றைக்கு வந்திருக்கிறது.
ஆகட்டும்.