விடுதலை நாள் வாழ்த்துக்கள்!இது அமெரிக்கக் கிராமக் கண்காட்சியொன்றில் வாங்கியது. அந்தக் குச்சியை மேலே தள்ளினால் பொம்மை வெளியே வரும். ஆட்டலாம், சுற்றலாம் துணிப்பொம்மை ஆடும். குச்சியைக் கீழே இழுத்தால் துணி கூம்புக்குள் சுருண்டு கொண்டுவிடும். பொம்மையின் இருப்பும் ஆட்டமும் நம் கையையும் மெய்யையும் பொறுத்து. பார்வைகளும், கருத்துக்களும், நம் விடுதலை நாளும் இப்படித்தான். இருக்கிறதென்றால் இருக்கிறது, இல்லையென்றால் இல்லை. எப்படியோ, சீர்மையான நாளையைப் பற்றிய கனவுகளுடன் நம் நாளைக் கொண்டாடுவோம்!

0 comments: