இந்திய மருந்துகள் தள்ளாடுகின்றனவா?

எயிட்ஸ் நோய்க்கு நம் நாட்டு சிப்லாவும், ரான்பாக்ஸியும் மருந்து தயாரித்தன. குறைந்த விலையில் தரப் போகிறார்கள் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. எல்லா மருந்துகளையும் உலகச் சுகாதார அமைப்பு (WHO) தரக்கட்டுப்பாடு செய்தபின் பரிந்துரைத்து ஒரு பட்டியல் வெளியிடும். அந்தப் பட்டியலில் இருக்கும் மருந்துகளையே வாங்கிச் சுகாதார நிறுவனங்கள் நோயாளிகளுக்கு வழங்கும். இந்தப் பட்டியலில் ஒரு மருந்து இடம் பெறுவதற்கான விதிமுறைகள் கெடுபிடியானவை. மே மாதத்தில் இவ்விதிகள் மேலும் இறுக்கப் பட்டன. இதன் விளைவாக சிப்லாவின் எயிட்ஸ் மருந்து பட்டியலிலிருந்து நீக்கப் பட்டது. இப்போது ரான்பாக்ஸியின் மூன்று எயிட்ஸ் மருந்துகள் நீக்கப் பட்டுள்ளன. முறையான ஆய்வக முறைகள், முறையான மருத்துவ முறைகள், வீரியக் குறைவு ஆகிய காரணங்களால் இம்மருந்துகள் நீக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிறுவனங்கள் தங்கள் மருந்துகளின் தரத்தை உயர்த்தி மீண்டும் பட்டியலில் இடம் பெற முயற்சிக்கலாம் என்று நம்பப் படுகிறது. எயிட்ஸ் உலகில் பரபரப்பாய் எழுந்த நம் நிறுவனங்கள் இப்படித் தள்ளாடுவது நம் தரக்கட்டுப்பாட்டு முறைகளை மீளாய்வு செய்ய வலியுறுத்துகிறது.

செய்திக்கு ஆதாரம்

1 comments:

said...

அண்ணை,
இந்த மருந்துகள் தரச்செல்லுபடி ஆகாதன என்று சொல்லப்படுவதற்கு இவை இலக்குக்கோடுகளைத் தொடுமளவுக்குத் தரமற்று இருக்கின்றன என்பதும் முழுக்க முழுக்க காரணமாகுமா என்று சொல்லிவிடமுடியாது. இவை பெருமருந்துசெய்நிறுவனங்களின் நோக்குகளுக்குப் போட்டியாக குறைவிலையிலே அதே மருந்துகளை ஆக்கிவிடுகின்றன என்பதுங்கூட மறைமுகமாக ஓர் அழுத்தத்தினை இங்கே கொடுத்திருக்கலாம். இந்தியாவின் எயிட்ஸ் மருத்துற்பத்தி ஆரம்பத்திலிருந்தே பன்னாட்டுப் பெருமருந்துநிறுவனங்களுடன் கொம்புசீவிக்கொண்டே இருந்தன. தங்களுக்கு இருக்கும் ஆய்வுக்கான செலவு இந்தியா போன்ற நாடுகளின் (தாம் கண்டுபிடித்த) சூத்திரத்தினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சிறுமாற்றங்களுடன் மருந்துற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கில்லை என்பது பன்னாட்டுப்பெருமருந்துநிறுவனங்களின் வாதம்.