சில கோக்கு மாக்கான குறிப்புகள்!

Image hosted by Photobucket.com

1. திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் திறக்கப் படவிருக்கும் கோக் கும்பெனியை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி. இக் கும்பெனி நாளொன்றுக்கு 5 இலட்சம் லிட்டர்கள் தண்ணீரைப் பயன்படுத்த அரசால் அனுமதிக்கப் பட்டிருக்கிறது. தாமிரபரணியிலிருந்து இந்தத் தண்ணீர் உறிஞ்சப்படும். சொன்னதை விட அதிகமாக, அதாவது நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர்களை உறிஞ்சுமென மக்களால் அச்சம் தெரிவிக்கப் படுகிறது. சுற்றுப் புற விவசாயிகள் தாமிரபரணியையே நம்பியிருப்பதால் நாளடைவில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமென அஞ்சுகிறார்கள். மேலும் கோக் தொழிற்சாலைகள் வெளியிடும் கழிவுகள் இருக்கும் சுற்றுப்புறத் தண்ணீரையும், விளைநிலங்களையும் பாழடிப்பதாகவும் உதாரணங்கள் இருக்கின்றன.

2. இதே போன்றவொரு தண்ணீர் உறிஞ்சும் மற்றும் மாசுபடுத்தும் கோக் தொழிற்சாலை, பாலக்காட்டுக்கருகிலிருப்பது, போராட்டங்களின் காரணமாகத் தற்போது மூடப்பட்ட நிலையிலும், வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையிலும் இருக்கின்றது. (இந்தியாவில் மொத்தம் 27 கோக் தொழிற்சாலைகளுள்ளன!). பெருங்கோக்குப் புள்ளிகள் இந்தியாவுக்கு விரைந்திருப்பதாக இன்றைய செய்திகள்.

3. கோக் கும்பெனி விளைவிக்கும் கேடுகள் எண்ணிடலடங்கா. முக்கியமான சில:
அ) கொலம்பியாவில் முறைகேடுகளை எதிர்த்துப் போராடிய தொழிற்சங்கக் காரர்களை, கோக் வளாகத்துக்குள்ளேயே இராணுவம் கொன்றது;
ஆ) அமெரிக்காவில் கறுப்பரினத்தின் மீது சம்பளம், பணிவுயர்வு போன்றவற்றில் பாரபட்சமாக நடந்து கொண்டது;
இ) சோடாபுட்டியுடன் மெல்ல ஒரு நாட்டின் சந்தைக்குள் ஊடுருவும் கோக், கொஞ்சம் கொஞ்சமாக அந்நாட்டின் தண்ணீர் விற்பனையைக் கையகப் படுத்துகிறது. (தசானி கோக்கோட தண்ணிதான், இதுல புற்று நோய் வர வைக்கும் ப்ரோமேட் எனும் நச்சு அளவுக்கதிகமா இருக்கு!) விளைவு? நம்ம ஊரு ஆத்துத் தண்ணியை கோக் நமக்கே விற்கும்;
ஈ) இவை தவிர கோக்கின் உலகறிந்த சுகாதாரக் கேடுகள்!

4. கோக்கின் இத்தகைய பிறழ்வுகளை எதிர்த்துப் பல நடவடிக்கைகள் எடுக்கப் பட்ட வண்ணம் இருக்கின்றன. அவற்றில் சில:
அ) கோக்கைப் புறக்கணிப்போம் என்ற பொதுமக்களின் கூப்பாடுகள் (கோக்கின் பொருட்கள் ஒரு பெரிய பட்டியலில் அடங்கும்);
ஆ) இந்திய நாடாளுமன்றம் தனது வளாகங்களில் கோக்கை விற்க அனுமதிப்பதில்லையென்ற சட்டம்;
இ) உலகெங்கிலும் பல பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் கோக்கைப் புறக்கணித்தல், உதாரணம் க்வீன்ஸ் பல்கலை, கனடா, கலிபோர்னிய மாநிலப் பல்கலை;
ஈ) அண்மையில் வாஷிங்டன் மாநில மக்களாட்சிக் கட்சி (36வது மாவட்டத்தில்) அனைத்து கோக் பொருட்களையும் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது.

இந்த கோக்கை நாம புறக்கணிக்கனுமா வேண்டாமா? கங்கை கொண்டான் தண்ணியை கோக் உறிஞ்ச விடலாமா?

தொடர்புடைய சுட்டிகள் (தலைக்கு ஒன்று மட்டும்):
கங்கை கொண்டான் போராட்டம்
பாலக்காடு கோக் எதிர்ப்பு (மேதா பட்கரும் களத்தில்)
கொலம்பியா கொலைகள்
தண்ணீர்த் தொழிலை விழுங்கும் கோக்
அமெரிக்காவில் கோக்கின் இன வெறி
பொதுவான கோக் புறக்கணிப்புகளைப் பற்றிய தளம் (அடிக்கடி புதுப்பிக்கப் படுகிறது).

ஊர்க்குறிப்பு: கோக் என்றில்லை, எல்லா சோடா ரகங்களும் உடல் நலத்துக்குக் கேடானவை, எனவே இவற்றைப் பள்ளிகளிலிருந்து அகற்ற வேண்டுமென அமெரிக்காவின் கனெக்டிகட் மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த தீர்மானத்தை அதெல்லாம் அம்மாப்பா பாடு என்று ஆளுநர் தூக்கியெறிந்து விட்டார். இந்தத் தீர்மானத்தைத் தூக்கியெறிய வைக்க சோடாக் கம்பெனிகள் செலவழித்தது 250,000 டாலர்கள்!

21 comments:

said...

நல்லபதிவு பையா.

இந்த சோடா கம்பெனிகளின் நோக்கம் உண்மையில் உலகெங்கும் உள்ள நீராதாரங்களைக் கைப்பற்றுவதுதான். இதற்காகவே உலகவங்கி போன்ற அமைப்புகள் மூலம் மூன்றாம் உலக நாடுகளின் நீர் பயன்பாட்டு கொள்கைகளில் தலையிட்டு மாற்றங்களைச் செய்கின்றன. காட்டாக தண்ணீர் என்பதை அடிப்படை உரிமைகள் என்பதில் இருந்து அடிப்படை தேவை இடத்துக்கு நகர்த்துமாறு அவை அரசுகளை நிர்பந்திக்கின்றன. உரிமைகளைக் கோரவும், பாதுகாத்துக்கொள்ளவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. ஆனால் தேவைகளை அவரவர் வாங்கும் வசதிக்கேற்ப மட்டுமே துய்க்க முடியும். இந்த இடத்தில் தண்ணீரைச் சந்தைப்படுத்த அவைகளுக்கு இடம் கிடைக்கிறது.

3ஆவது உலகப்போர் ஒன்று நிகழுமானால் அது தண்ணீருக்காகவே நிகழும் என்ரு ஒரு கருத்து உண்டு. அது மிகைப்படுத்தப்பட்டதல்ல.

said...

கோக், பெப்சி, இன்னபிற பானங்கள் தயாரிக்கும் கம்பெனிகளால் நாட்டுக்கு, முக்கியமாக, அவர்களது தொழிற்சாலைகள் இருக்கும் பகுதி மக்களுக்குக் கேடு என்று நன்றாகவே நிரூபிக்கப்பட்டுவிட்டது.

முதலில் மொரார்ஜி தேசாய் காலத்தில் கோக் இந்தியாவை விட்டுத் துரத்தப்பட்டது தவறு என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் இன்று அதுபற்றி யோசிக்கும்போது மீண்டும் சட்டம் இயற்றி இவர்களை இந்தியாவை விட்டுத் துரத்துவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். அதுவும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்யவேண்டும்.

said...

//தண்ணீர் என்பதை அடிப்படை உரிமைகள் என்பதில் இருந்து அடிப்படை தேவை இடத்துக்கு நகர்த்துமாறு//
முதலாளித்துவக் காய் நகர்த்தல்!
பத்ரி, அந்த நேரத்தில் இந்தியா கோக்கின் செய்முறையைக் கேட்டதாகவும் அதற்கு கோக் இணங்காததாலுமே கிளப்பப் பட்டதாகவும் அறிகிறேன். அப்போது இணங்கியிருந்தால் விளைவுகள் இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

said...

சுந்தரவடிவேல்,
நல்லபதிவு. தங்கமணி சுட்டிக்காட்டிய, "3ஆவது உலகப்போர் ஒன்று நிகழுமானால் அது தண்ணீருக்காகவே நிகழும் என்ரு ஒரு கருத்து உண்டு" என்பதை அண்மையிலே சியாவின் முன்னைய செயலர், புட்ரோஸ் புட்ரோஸ் காலி எதியோப்பியா-சூடான் - எகிப்து இடையே நைல்நீருக்காக நிகழும் இழுபறியினைச் சுட்டிச் சொல்லியிருந்தார். Water Wars என்று புத்தகம் மாதத்துக்கொன்றாவது ஏதாவதொரு நாட்டிலிருந்து வருகின்றது. எரிபொருளினைவிட மோசமான தேவையும் போர்முனைக்கும் தன்(ண்)மையும் கொண்டது தண்ணீர் தண்ணீர் தண்ணீர். தண்ணீர் பல தேவைகளோடு சம்பந்தப்பட்டிருக்கின்றது. *ஆறு, கடல் என்று தொடர்புபண்ணும் ஊடகம் தொடக்கம் மின்வலு உருவாக்கும் நீர்வீழ்ச்சி, நீரோட்டம், உணவுக்காக மீன்பிடிப்பு, பயிர்ச்செய்கைக்காக நீர்ப்பாசனம், மேலும் குளித்தல், துவைத்தல், நீர்விளையாட்டு என்று பல. நீரால் மேயப்பட்ட ஓர் உயிர்வலையே இருக்கின்றது. ஆனால், இங்கும் பலவான் பெற்றுக்கொள்கிறான்.

கோக், பெப்சி இவற்றின் நீர்த்தேவை தமிழ்நாட்டிலே சிக்கலாவது இதுவல்ல முதற்றடவை என்பதாக ஞாபகம். இதற்கு முதலும் பொள்ளாச்சியிலோ எங்கோ நிலத்தடிநீரினை உள்ளிழுத்து, குளிர்பானம் தயாரிக்கப்பயன்படுத்தும் திட்டமிருந்ததும் அங்கும் இதேபோல நீர்வரட்சி ஏற்படும் நிலையும் குறித்துப்பேசப்பட்டிருக்கின்றது. கேரளாவிலே இன்னொரு வகைச்சிக்கல் ஈராண்டுகளுக்குமுன்னால் ஏற்றபட்டதென ஞாபகம்; அடைக்கப்பயன்படும் நீரிலே இருக்கக்கூடிய மாசுகளின் அளவு சம்பந்தப்பட்டது. தாமிரபரணித்தண்ணீரினை எடுப்பது, நீரின் ஊற்றாகும் ஓடும் சமநிலையைக் குலைப்பின், தனியே விவசாயிகளுக்குமட்டும் அது சிக்கலாகாது. நிலத்தடி நீருக்கும் நிலமேல்நீருக்குமிடையே மண்ணின் கண்களோடாக தொடர்பு நெய்யப்பட்டிருக்கின்றது. அடாவடித்தனமான அளவில் நிலமேல்நீர் முகரப்பட்டால், சுற்றுப்புற நிலத்தடி நீரளவு குறையக்கூட வாய்ப்புண்டு. அதுமட்டுமல்ல, இன்னொரு சிக்கலும் உண்டு. மூவாயிரம் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், மத்தியகிழக்குப்பகுதிகளிலே சில இடங்களிலே நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் சிக்கல். வேதியலின் அடிப்படையிலும் உயிர்நச்சியலின் அடிப்படையிலும் ஒரு (பார)மூலகம், நீரிலோ வளியிலோ "சும்மா" இருப்பதுக்கும் மாசாவதற்கும் வித்தியாசம் செறிவே.மத்தியகிழக்குப்பகுதிகளிலே கோதுமை மிகச்செழிப்பாக விளைந்திருந்தது. நிலத்தடிநீரே விவசாயத்துக்காக மொண்டு கொள்ளப்பட்ட, அதன் அளவு குறைய இருந்த நீரிலே அகலாத உப்புகளின் செறிவு அதிகரித்து வந்து, இறுதியிலே உள்ளநீர் உப்புநீராகி பயீருக்காகாத நீராகிப்போனது. நிலத்தடி நீர், சமநிலை குலைவுற்ற நிலமேல்நீரை நிரப்ப மண்ணூடு ஓடும்போதும் இதே சிக்கல் உருவாக வாய்ப்புண்டு (அதீதமான நிலைகளிலே). நீர்மூலக்கூறுகளைப் போகவிடும் மட்டுளைகள், எந்தவகையான உப்புமூலக்கூறுகளையோ, பாரமூலகங்களையோ போகவிடும்வண்ணம் பெரிதாக இருக்குமெனச் சொல்லமுடியாது. விளைவாக, நீரகல, இருக்கும் நிலத்தடிநீரிலும் சுற்றிய மண்ணிலும் எந்தவகையான உப்பு, பாரமூலங்கள் ஆகியவற்றின் செறிவு அதிகரிக்கலாம். இதன் விளைவான கேடுகள் உண்டு. சீனாவின் பல இடங்களிலே நீரிலே புளோரைட்டின் சிக்கலுக்கு இந்தச்செறிவே ஒரு காரணம்.

நீர்பயன்படுகொள்கைகளிலே அரசியல், பொருளாதாரம் என்பவற்றோடு இன்னும் சமூகப்பண்பாடு, சுகாதாரம் என்பன குறித்தும் கொஞ்சம் கூடக்கவனம் செலுத்தப்படவேண்டுமெனத் தோன்றுகிறது. இது அமெரிக்கா முதல் அரசடிவரை பொருந்தும். வெறுமனே "அப்துல் கலாமும் தலைவர் ரஜனியும் ஆறுகளை இணைப்போம்" என்று சொன்னார்கள் என்பதற்காக, ஆறுகளை இணைப்பது நல்ல திட்டமென்று மந்திரம்போலச் சொல்லிக்கொள்கின்றவர்களைக் காணுகின்றபோது, தலையிலே அடித்துக்கொள்ளத்தான் தோன்றுகிறது.

ஆனால், பெரும் குளிர்பானத்தயாரிப்பாளர்களினை நீரின் பொருட்டு அழுத்தும்போது, உள்ளூர்தயாரிப்பாளர்களினையும் வேறு காரணங்களினாலே கவனித்துக்கொள்ளவேண்டும். குளிர்பானக்கோலாக்கள் இப்போது ஒரு நாகரீக அடையாளச்சின்னமாத்தான் தோற்றுகிறன. இலங்கையிலே இருக்கும்வரையில் பெருவர்த்தகநிறுவனங்களின் கோக் போன்றவற்றினை நான் பயன்படுத்தாமல் விட்டதற்கு உள்ளூர் உற்பத்தியினை ஊக்குவிக்கிறோம் என்ற உந்தல் இருந்தது. ஆனால், இப்போது, பதினைந்து ஆண்டுகள் கழிந்து நாட்டின் நிலைவரத்தினைப் பார்க்கும்போது, எந்தத்தலைமுறையிடமும் அந்தவிதமான பார்வை இருப்பதாகத் தெரியவில்லை. உலகமயமாக்குதலுக்கும் திறந்த பொருளாதாரத்துக்கும் இடம் கொடுக்கும்போது, அந்த உந்தல் வெள்ளத்துக்கு நிற்கமுடியாத நாற்றாக மடிந்துபோய்விடுகின்றது. இதற்குச் சிந்திக்கவேண்டியது மாற்றுச்செயல்வழிகள்.

said...

/பாலக்காடு கோக் எதிர்ப்பு/

ஏற்கனவே சுட்டியிருக்கின்றீர்கள்.

said...

மிகத்தேவையான பதிவு சுந்தரவடிவேல்.

// இந்த சோடா கம்பெனிகளின் நோக்கம் உண்மையில் உலகெங்கும் உள்ள நீராதாரங்களைக் கைப்பற்றுவதுதான். //

நீராதாரங்களை மட்டுமல்லாமல், நீராகாரங்களையும் கைப்பற்றுவதுதான். நம்முடைய பாரம்பரிய மற்றும் உடலுக்கு உகந்த நீராகாரங்களாகிய மோர், பதனீர், இளனீர், கரும்புச்சாறு, பழச்சாறு வகைகள் போன்றவை கோக், பெப்சியின் வருகைக்குப் பின் அறுகிப் போய்க் கொண்டிருக்கின்றன. மேப்பூச்சுக்கும், மேனாமினுக்கித்தனத்துக்கும் அடிமையாகிப் போய்விட்ட நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கம் இளனீர் விற்கும் கிராமத்து ஏழையிடம் முன்பெல்லாம் பேரம் பேசிக்கொண்டிருப்பர், இன்று நச்சுப் பானங்களை சொன்ன விலைக்கு வாங்கிக் குடித்து தங்களையே அழித்துக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் தண்ணீரையே குடிக்காமல் இந்தப் பானங்களையே குடித்து வளரும் ஒரு வர்க்கத்தை உருவாக்கி விட்ட இந்த கம்பெனிகள், அந்த வர்க்கம் தற்பொழுது விழித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், வளர்ந்து வரும் நாடுகளில் தங்களுடைய இராஜ்ஜியத்தை நிறுவிக் கொண்டிருக்கின்றன. சிகரெட்டுக் கம்பெனிகளும் இதையே செய்து வருகின்றன.

எங்கெல்லாம் இதையெதிர்த்து மக்கள் போராட்டங்களாக நடக்கின்றனவோ, அவற்றை நாமெல்லாம் விளம்பரப் படுத்தியாவது ஆதரவு தெரிவிக்க வேண்டும். முடிந்தால் மற்ற வலைப்பதிவர்களும் இதை ஒரு பெரிய பிரச்சினையாக மாற்றி வலைப் பதிவு உலகத்தின் மூலம் ஒற்றுமையாக ஏதாவது செய்தால் நல்லது. திருநெல்வேலி மாவட்டத்தில் நடக்கும் இந்த மக்கள் போராட்டத்தை பிரபலப் படுத்த அல்வாசிட்டி நண்பர்கள் பெரு முயற்சி செய்யவும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். அல்வாசிட்டிக் காரனாகிய என்னுடைய உதவியும் கட்டாயம் உண்டு.

நன்றி - சொ. சங்கரபாண்டி

said...

சுந்தரவடிவேல்: நீங்கள் சொல்றது முக்கால்வாசி சரிதான். எது எப்படி இருந்தாலும், நுகர்வோர் பைத்தியம் பிடித்து அலையாமலிருந்தால், தேவை ( demand) என்பது வெகு குறைவாக இருந்தால் கோக்,பெப்சி எல்லோரும் வந்த வழியே திரும்பி வர வேண்டியிருக்கும். இதற்கான விழிப்புணர்வு வர, இந்திய மக்களிடையே, உண்மையாக 'கவலைப்படும் இந்திய குடிமகன்கள்' பிரச்சாரம் செய்ய வேண்டும்..


வாசன்

said...

சுந்தரவடிவேல்
கோக் இப்போது சோடாக்களை குறிப்பதக்பலர் உபயோகிக்கிறார்கள்.இதை எல்லாம் எதிர்பார்த்தே இவை ஒரு பழரச நிறுவனத்தை வாங்கி உள்ளது.
பாச்பாரிக் அமிலம் பற்களை எழும்புகளள உருக்கி விடும். பல சிறு குழந்தைகள் தங்கள் பால் பற்களை இழந்து தவிப்பது உண்மை. பெண்கள் இதனால் ஆச்டியோபோராஸிஸ் மிக குறைந்த வயதில் வந்து அவதிப்படுகிறார்கள். இப்போது அமெரிக்காவில் தண்ணீர் அருந்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியா போன்ற இடங்களில் கோகும் இன்ன பிற பானங்களும் தலை எடுத்துள்ளது வருந்த தக்க செய்தி.ஒரு கோக் டின்னில் சுமார் 4 மேசைக் கரண்டி சர்க்கரை சேர்க்க படுவதும் உடல் உபாதைகள் பற்கள் குறைபாடுகளுக்கு இதுவும் காரணம். அமெரிக்க நிறுவனங்கள் பொருட்களை விற்பனை செய்வதைவிட "அமெரிக்கானா"வை விற்க முயலுவதாக உலக பொருட்கள் சந்தை பற்றி படிக்கும் போது படித்திருக்கிறேன். இ த ன் தாக்கம் தான் மெக்டனோல்டுகளும் கோகுகளும், இன்ன பிறவும்.

இந்தியாவில் right to know போன்ற திட்டங்கள் இல்லையா? இது அமெரிக்காவில் ஒரு நிறுவனம் ஆரம்பிக்க படும் போது அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு அதன் கழிவு பொருட்களை அகற்றும் முறைகள், புகை போக்கிகள் அதனால் உண்டாகும் கெடுதல்கள், போன்றவற்றை மக்களுக்கு எடுத்து சொல்லவும், தேவையான படிவங்களை மக்கல் பெறவும்ம், சமூக த்தில் சில மூத்தவர்கள் பங்கு கொண்டு பேசுவதையும் சட்டப்படுத்துகிறது. இதனால் வேலை வாய்ப்பு போன்றவற்றை பற்றி அறியவும் அது வீடுகளை மக்களை எப்படி பாதிக்கும் என்பதையும் தெரியப்படுத்த இயலுகிறது.

said...

இந்தியாவில் நான் கோக் குடிப்பதில்லை. இனியும் குடிக்க மாட்டேன் என்று சொல்லிக்கொள்கிறேன்.

said...

மிக அவசியமான பதிவு. இக்கும்பெனிப் பொருட்களைப் புறக்கணிப்பதுதான் மக்கள் முக்கியமாகச் செய்யவேண்டியது. உள்ளூர் நீரை எடுத்துக் குப்பிகளில் அடைத்துப் பலமடங்கு விலைக்கு உள்ளூர் மக்களுக்கே விற்பதுதான், இல்லை அதை வாங்கிக் குடிப்பதுதான் கொடுமை.

இக்கும்பெனிகளின் பானங்களைக் குடிப்பதைப் 'பெருமை'யாகக் கருதும் கூட்டமொன்றும் உள்ளது! :-(

said...

வெளிநாட்டில் பல வருடங்களாக வாழ்ந்துவரும் தமிழர் பலரும் (இதில் என்னையும் என் பல நண்பர்களையும் சேர்த்துக்கொள்ளவும்) சுத்திகரிக்கப்பட்ட தண்ணிரே வேண்டும்.ல் எங்களைப் போன்றோர்க்கு aqua minerale (இல்லை bon aqua) மற்ற தண்ணீரைக் காட்டிலும் நம்பக்கூடிய தண்ணீராய் இருந்தது. ஒரு சாதாரண ஹோட்டலிற்கு சென்றால் அவர்களின் தண்ணிரைக் குடிப்பதைவிட கம்பெனி தண்ணிரைக் குடிப்பதுமேல் என்பது எங்கள் அக்கால நம்பிக்கை.

மற்றபடி fanta மற்றும் நம்மூர் கோலா வெளிநாடுகளுடன் ஒப்பிடுகையில் "horse piss" அல்லது டயட் versions-களாகவே பட்டது தம்ஸ் அப் இல்லை லிம்கா மட்டும்ந்ந் இந்தியாவின் சிறந்த குளிர்பானங்கள் என்பது என் கணிப்பு.

said...

இந்திய மக்களே, எச்சரிக்கை!
மீண்டும் வருகின்றது என்ரான்
வாங்கிய கடனை அடைக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை வெய்து கொள்ளும் நாட்டில், மக்களின் வரிப் பணத்தில் இருந்து என்ரானின் அந்தியக் கடனை அடைக்கத் துடிக்கம் காங்கிரசு ஆட்சி
''என்ரான்'' என்ற பெயரை இந்திய மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. தாராளமயத்தால் இந்தியாவிற்குக் கிடைக்கப் போகும் நன்மைகளின் குறியீடாக, என்ரான் இந்திய மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், என்ரானின் கதையோ, ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பார்களே, அந்தப் பழமொழிக்கேற்ப அவலமாக முடிந்து போனது.

அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான என்ரான், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பித்த தபோல் மின் உற்பத்தி நிலையம் மிகப் பெரும் அந்நிய முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் என இந்திய ஆட்சியாளர்கள் பீற்றிக் கொண்டார்கள். ஆனால், என்ரான் இந்தியாவில் போட்ட 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஏறத்தாழ 40 சதவீதம் (3,600 கோடி ரூபாய்) இந்திய நாட்டு வங்கிகளிடமிருந்து கடனாகப் பெறப்பட்டது. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாகத்தான், என்ரான் இந்தியாவில் தொழில் தொடங்கியது.

மேலும், என்ரான் தயாரிக்கும் மின்சாரம் முழுவதையும் மகாராஷ்டிரா மாநில மின்சார வாரியம் வாங்கிக் கொள்ளும்படி ஒப்பந்தம் போடப்பட்டு, அந்நிறுவனத்திற்கு உத்திரவாதமான சந்தை ஏற்படுத்தித் தரப்பட்டது. என்ரான் போட்ட 'மூலதனத்திற்கு' 16 சதவீத இலாபம் கட்டாயம் கிடைக்கும்படி ஒப்புக் கொண்டு, மைய அரசு பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தது. இதற்கு ஏற்ப, அந்நிறுவனம் தயாரித்த மின்சாரம், யூனிட் ஒன்றுக்கு ரூ. 7.00 என்ற விலையில் மகாராஷ்டிரா அரசின் தலையில் கட்டப்பட்டது. அதேசமயம், டாடா போன்ற தனியார் நிறுவனங்கள் யூனிட் ஒன்றுக்கு ரூ. 2.00 என்ற விலையில்தான் மின்சாரத்தைத் தயாரித்து, மகாராஷ்டிரா அரசிற்கு விற்று வந்தன. என்ரானின் இந்தக் கட்டணக் கொள்ளை ஒருபுறமிருக்க, திறன் கட்டணம் என்ற பெயரில் மாதாமாதம் 95 கோடி ரூபாயை மானியமாக மகாராஷ்டிரா அரசு என்ரானுக்குக் கொடுத்து வந்தது.

இந்தப் பகற்கொள்ளையின் ஒரு கட்டத்தில், 920 கோடி ரூபாய் வருமானம் பெற்று வந்த மகாராஷ்டிர மின்சார வாரியம், அதில் ஏறத்தாழ 80 சதவீதத்தை 725 கோடி ரூபாயை என்ரானுக்கு மின் கட்டணமாகவும், மானியமாகவும் கொடுக்க வேண்டிய நிலை வந்தபொழுது, அம்மின்சார வாரியமே திவாலாகிவிடும் அபாயத்தை எட்டியது. இந்த நிலையில்தான் மகாராஷ்டிரா அரசு என்ரானிடமிருந்து மின்சாரம் வாங்குவதில்லை என முடிவெடுத்தது. இதே சமயத்தில், என்ரான் அமெரிக்கப் பங்குச் சந்தையில் நடத்திய மோசடியின் காரணமாகத் திவாலாகி விட, என்ரானின் துணை நிறுவனமான தபோல் மின் உற்பத்தி நிலையம் இழுத்து மூடப்பட்டது.

''மம்மி ரிடர்ன்ஸ்'' என்ற திரைப்படக் கதையைப் போல, இப்பொழுது மீண்டும் என்ரானின் மின்சார நிறுவனத்திற்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது, மைய அரசு. என்ரான், தபோல் மின்சார நிலையத்தை அமைப்பதற்கு அந்நிய நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனை முதலில் அடைப்பது; பிறகு, ஒரு 1,500 கோடி ரூபாயை மீண்டும் மூலதனமாகப் போட்டு, மூடிக் கிடக்கும் மின் நிலையத்தைத் திறந்து நடத்துவது என்ற திட்டம் இதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

எத்தனையோ பொதுத்துறை நிறுவனங்கள் போதிய மூலதனம் கிடைக்காமல், அரைகுறையாக இயங்கி வருகின்றன் அல்லது இழுத்து மூடப்பட்டுக் கிடக்கின்றன. அந்த அரசு நிறுவனங்களை மீண்டும் இயக்குவது பற்றி அக்கறை காட்டாத மைய அரசு, தனியார் நிறுவனமான என்ரானின் மீது திடீர் கரிசனம் காட்டும் பின்னணியைக் கேட்டால், காங்கிரசு கும்பலின் மீது காறி உமிழத்தான் தோன்றும்.

என்ரானுக்குக் கடன் கொடுத்த அந்நிய நிதி நிறுவனங்கள், அசலையும், வட்டியையும் கேட்டு மைய அரசை நிர்பந்தித்து வருகின்றன. தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் கடைசி நாட்களில், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பிரதமர் வாஜ்பாயிடம் என்ரானின் அந்நியக் கடன் பிரச்சினை குறித்துப் பேசியிருக்கிறார். வாஜ்பாயால் செய்ய முடியாமல் போனதை, காங்கிரசு ஆட்சி நிறைவேற்றத் துடிக்கிறது.

நியாயமாகப் பார்த்தால், மைய அரசு கடன் கொடுத்த நிறுவனங்களிடம், ''உங்க கடனை என்ரான் முதலாளியின் கூட்டாளி ஜார்ஜ் புஷ்ஷிடம் கேட்டு வாங்கிக் கொள்'' என்று கூறியிருக்க வேண்டும்; என்ரானுக்கு கடன் கொடுத்த இந்திய அரசு வங்கிகளின் அசலையும், வட்டியையும் திருப்பிக் கொடுக்கும்படி அமெரிக்க அரசிற்கு நிர்பந்தம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், காங்கிரசு கும்பலோ ஊரான் கடனை நம் தலையில் சுமத்தப் பார்க்கிறது.

இந்திய அரசிற்கும், என்ரானுக்குக் கடன் கொடுத்த அந்நிய நாட்டு வங்கிகளுக்கும் இடையே சிங்கப்பூரில் கடந்த சனவரி மாதம் நடந்த இரகசிய பேச்சுவார்த்தைகளின்படி, இந்த வங்கிகளுக்குத் தர வேண்டிய 1,150 கோடி ரூபாய் அசலை ஏப்ரல் மாத இறுதிக்குள் திருப்பித் தருவதாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

''சர்வதேசக் கூட்டுறவுக்கான ஜப்பானிய வங்கி'' உள்ளிட்ட சில அந்நிய நிதி நிறுவனங்களுக்குத் தர வேண்டிய 2,250 கோடி ரூபாய் கடனை டிசம்பர் முதல் தேதிக்குள் அடைத்துவிட இந்திய அரசு சம்மதித்திருக்கிறது.

அமெரிக்க அரசுக்குச் சொந்தமான ''ஓ.பி.ஐ.சி.'' என்ற நிதி நிறுவனம் என்ரானுக்குக் கொடுத்துள்ள 690 கோடி ரூபாய் கடனில், 103.5 கோடி ரூபாயை ஜூலை மாத முதல் வாரத்திற்குள் கொடுப்பதாகவும், மீதிக் கடனை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அடைப்பதாகவும் இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

இந்தக் கடன்கள் ஒருபுறமிருக்க தபோல் மின் நிலையத்தின் பங்குகளை இப்பொழுது ஜி.இ. மற்றும் பெக்டேல் என்ற இரு அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் வாங்கியுள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களும், ''மகாராஷ்டிரா மாநில அரசு தபோல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வாங்கும் ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்ததால், தங்களுக்கு நட்ட ஈடாக 26,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும்'' எனக் கோரி இலண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இந்திய அரசுக்கும் மார்ச் 17 ஆம் தேதியன்று நியூயார்க் நகரில் நடந்த பேச்சு வார்த்தையில் 1,750 கோடி ரூபாய் வரை நட்டஈடாகத் தர இந்திய அரசு சம்மதித்துள்ளது.

மொத்தமாகப் பார்த்தால், திவாலாகிப் போன என்ரானுக்காக இந்திய அரசு 5,250 கோடி ரூபாயை அந்நிய நிறுவனங்களுக்குத் தூக்கிக் கொடுக்கப் போகிறது. ஏற்கெனவே பற்றாக்குறை பல்லவி பாடிக் கொண்டிருக்கும் ப.சிதம்பரம், இவ்வளவு பெரிய தொகையை எங்கிருந்து சுடப் போகிறார் தெரியுமா? மைய அரசிடம் உள்ள தொழிலாளர் வைப்பு நிதியில் இருந்தும், ஆயுள் காப்பீட்டுக் கழக சேமிப்பு நிதியில் இருந்தும் பணத்தை எடுக்கத் திட்டம் போட்டுள்ளனர்.

தொழிலாளர் வைப்பு நிதிச் சட்டத்தின்படி, அந்நிதியை அரசுத்துறை ஃ பொதுத்துறை நிறுவனங்களில்தான் முதலீடு செய்ய முடியும்; என்ரான் போன்ற தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியாது. அதனால் தொழிலாளர் வைப்பு நிதியைத் தனியார்மயமாக்கும் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது, காங்கிரசு ஆட்சி.
தொழிலாளர் வைப்பு நிதிக்கு வழங்கி வரும் வட்டியை உயர்த்துவதை எதிர்த்து ஆயிரம் நொண்டிக் காரணங்களை அடுக்கிய காங்கிரசு ஆட்சி, முதலாளிகளுக்காக சட்டத்தையே மாற்றுகிறது.

இது ஒருபுறமிருக்க, தேசிய அனல் மின் நிலைய கார்ப்பரேசன், இந்திய இயற்கை எரிவாயு ஆணையம், பொதுத்துறை வங்கிகள் இணைந்து, தபோல் மின் நிலையத்தை மீண்டும் நடத்துவதற்கு 1,500 கோடி ரூபாய் மூலதனம் போட வேண்டும் என மைய அரசு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. தபோல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்கிவிட்டால், போட்ட பணத்தை சீக்கிரமே எடுத்துவிடலாம் என நப் பாசை காட்டுகிறது, காங்கிரசு ஆட்சி.

ஆனால், இந்தியாவில் என்ரானின் 'தொழில் திறமையை' ஆய்வு செய்துள்ள நிபுணர்களோ, தபோல் மின் நிலையத்தில் பணத்தைப் போடுவதும்; பணத்தைக் கிணற்றுக்குள் போடுவதும் ஒன்றுதான் என்கிறார்கள். தபோல் மின் நிலையத்தை இயக்குவது என்பது யானையைக் கட்டித் தீனி போடுவதற்குச் சமமானது என்பதால்தான், மூடிக் கிடக்கும் இம்மின்நிலையத்தை எந்தவொரு தனியார் முதலாளியும் வாங்கி இயக்க முன் வராமல், அதை நைச்சியமாக அரசின் தலையில் கட்டப் பார்க்கிறார்கள் என இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

என்ரானின் அந்நியக் கடனை அடைத்துவிட்டு, தபோல் மின் நிலையத்தை மீண்டும் இயக்குவதற்காக ஒரு கமிட்டியை அமைத்திருக்கிறது, மைய அரசு. இக்கமிட்டியில் திட்டக் கமிசனின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும், விவசாயத் துறை அமைச்சர் சரத் பவாரும் இடம் பெற்றுள்ளனர்.

பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி, என்ரான் தபோல் மின் நிலையத்தை அமைக்கவும்; அதற்குப் பல்வேறு சலுகைகளை வாங்கித் தரவும் தரகனாகச் செயல்பட்டவர் சரத்பவார்.

மைய அரசின் கீழுள்ள மின்சார ஆணையம், தபோல் மின் நிலையம் மின்சார உற்பத்தியைத் தொடங்குவதற்கு அனுமதி கொடுக்க மறுத்த பொழுது, அம்முடிவுக்கு எதிராக வரிந்துக் கட்டிக் கொண்டு வேலை செய்தவர், உலக வங்கி கைக்கூலியான மாண்டேக் சிங் அலுவாலியா.

இந்த கமிட்டியில் நேரடியாகப் பங்கு பெறாமல், மறைமுகமாக இக்கமிட்டியை இயக்கிக் கொண்டிருக்கிறார், நிதியமைச்சர் ப.சிதம்பரம். அவர் திவாலாகிப் போன என்ரானின் முன்னாள் வக்கீல் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார்மயம் தாராளமயத்தின் பின், அரசிடம் உள்ள மக்களின் வரிப்பணத்தை, வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்பை தனியார் முதலாளிகள் சு10றையாடுவது அடுத்தடுத்து நடக்கத் தொடங்கியுள்ளன. அர்சத் மேத்தா தலைமையில் நடந்த பங்குச் சந்தை ஊழலில் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான பொதுப் பணம் சு10றையாடப்பட்டது.

பங்குச் சந்தை மோசடியால் யூனிட் டிரஸ்ட் நிறுவனம் கவிழ்ந்த பொழுது, அந்நிறுவனம் திவாலாவதைத் தடுக்க, மக்களின் வரிப் பணத்தில் இருந்து 15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
தரகு முதலாளி டாடா, ''வீ.எஸ்.என்.எல்.'' நிறுவனத்தை வாங்கி, அந்நிறுவனத்தில் இருந்த 1,200 கோடி ரூபாய்க்கும் மேலான சேமிப்பை, தனது சொத்துக் கணக்கில் சேர்த்துக் கொண்டார்.

ரிலையன்ஸ் நிறுவனம், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை ஏமாற்றி, 1000 கோடி ரூபாய்க்கு மேலாகச் சுருட்டிக் கொண்டது.
ஏற்கெனவே 3,600 கோடி ரூபாய் வங்கிப் பணத்தை விழுங்கிவிட்ட என்ரான், இப்பொழுது 7,000 கோடி ரூபாயைச் சுருட்டப் பார்க்கிறது. பொதுப் பணத்தை, பொதுச் சொத்தைச் சட்டபூர்வமாகச் சு10றையாடுவதன் மறுபெயர்தான் தனியார்மயம் தாராளமயம் என்பதற்கு இன்னுமா ஆதாரங்கள் வேண்டும்?
· ரஹீம்

said...

இன்றைய தி ஹிந்துவில் செவ்வந்தி நினன் பத்தியில் The Plachimada saga

said...

நல்ல பதிவு சுந்தரவடிவேல்.
//எல்லா சோடா ரகங்களும் உடல் நலத்துக்குக் கேடானவை, எனவே இவற்றைப் பள்ளிகளிலிருந்து அகற்ற வேண்டுமென //
இதை ரொரண்ரொ மாநகரிற்குட்பட்ட பாடசாலைகளில் இந்த வருடத்திலிருந்து (அல்லது சென்ற வருடத்து பின்பகுதியில்) அமுல்படுத்தியுள்ளனர். பாலர் வகுப்பிலிருந்து 9ம் வகுப்பு வரையுள்ள பாடசாலைகளில் இது அமுல்படுத்தப்பட்டிருந்து உறுதியாய்த் தெரிந்தாலும், உயர்கல்லூரிகளில் (9ம் வகுப்புக்கும் மேற்பட்ட) என்ன நிலையென்று சரியாகத் தெரியவில்லை. எதுவெனினும் அதை நடைமுறைப்படுத்திய ரொரண்ரோ மேயர் பாராட்டுக்குரியவர். அவ்வாறே (fast food) உணவுகளுக்கும் என்று நினைக்கின்றேன்.

said...

கோலி சோடா, பன்னீர் சோடாவை மிக்ஸ் பணி 7 Up ன்னும், ஜிஞ்சர் சோடாவை Sprite ன்னும் வித்துட்டு நம்ம சில்வர் கப்புக்கு ஆப்பு வச்சுட்டாங்கப்பா. என்னதான் இருந்தாலும் நம்ம முனியாண்டி விலாஸ் சாப்பாட்டுக்கு ஒரு காளி மார்க் சோடா குடிச்ச திருப்தி Pepsi, Coke இல்லேங்கிறேன். (சோடா ப்ளிஸ்)

said...

நண்பர்களின் செறிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி. இம் மறுமொழிகளிலிருந்து நுட்பமான பல தகவல்களைப் பெற முடிந்திருக்கிறது.
காணும் பொருளெல்லாம் எனக்கு என்ற ஆணவ முதலாளித்துவ சித்தாந்தத்தின் விளைவே கோக்கின் இந்த மாற்றான் வயிற்றில் அடித்துப் பிழைத்தல். ப்ளேச்சிமடா விவகாரத்தில் (மேலே பத்ரியின் சுட்டி) குறிப்பிடப்பட்டிருப்பது போல அச்சிதழ்கள் இது பற்றி வாய் திறக்கப் போவதில்லை. வாயைத் திறந்தாலும் அவுட்லுக் மாதிரியான "ப்ரொபஷனல்" வாயைத்தான் திறக்கும். இதற்கு நேரெதிராகக் கேரளத்தின் மாத்ருபூமி கோக்கின் மானநட்ட வழக்கையும் மீறி மக்களோடு இணணந்து செயல்படுவது பாராட்டுக்குரியது. கங்கைகொண்டான் மக்களுக்குத் தமிழகத்தின் அச்சிதழ்கள் எவ்வாறான ஆதரவையளிக்கப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்பதற்குள் கோக் தனது புட்டிகளை நிரப்பவாரம்பித்திருக்கும், வரும் ஆகஸ்ட்/செப்டம்பரில் உற்பத்தி தொடங்குமெனப் படித்தேன். உடனடியாக இணையத்தின் வலிவுடன் இதனை எதிர்ப்பது தமிழர்களின் கடமையெனக் கருதுகிறேன். அந்தளவில் பெட்டிஷன் ஆன்லைனில் ஒரு மனுவையாவது போட்டு வைக்கலாம் என்பது என் எண்ணம். வேறு என்ன செய்ய முடியுமென்று நண்பர்கள் சொல்லவும். தமிழக வலைப்பதிவர்களில் நெல்லைக்கருகிலிருப்பவர்கள் அவ்வப்போது கங்கைகொண்டானின் விபரங்களைப் பதிந்து கொண்டிருந்தால் அனைவருக்கும் உதவியாயிருக்கும். நன்றி.

said...

சுந்தர வடிவேல், இப்போதுதான் இந்த பதிவை பார்த்தேன். மிகவும் தேவையான பதிவு. தொடர்ந்து இது குறித்து எழுதுங்கள். பத்ரி 'கோகோ கோலாவை தடைசெய்ய வேண்டும்' என்று சொல்வதை நானும் ஏற்கிறேன். நான் மேலே சொல்ல விரும்பும் சில விடயங்களை முன்பு நண்பர் ஒருவரிடமிருந்து வந்த இந்த மின்னஞ்சல் சொல்லும். நன்றி!

Please boycott Coco Cola, Pepsi ....

Noted human rights' activist Sandeep Pandey severely beaten up by Coca
Cola security

Shame on the Government : Instead of protecting public interest, they
are
more of vanguards of corporations!!!

Today in Mehndiganj Varanasi, noted social activist and recepient of
Ramon
Magsaysay Award 2002 Dr Sandeep Pandey was severely beaten up by
security
personnels of COCA COLA and Varanasi police when he was staging a
peaceful
protest demonstration outside Coca Cola bottling plant.

It is indeed a matter of shame and disgust that our Government agencies
protect and promote the interest of multinational corporations and turn
a
blind eye to the interest and welfare of common people.

Sandeep Pandey's right toe received heavy impact injuries when security
personnel banged an iron rod on it. Sandeep has received many lathi
injuries on his back apart from a head injury from a rifle butt.

National convenor of NAPM (National Alliance of People's Movement)
Sandeep
Pandey was staging a peaceful demonstration against Coca Cola company
for
misleading our people and trampling over their welfare. Coca Cola has
been
taking out more than 150,000 liters of water everyday in this
Mehndiganj
Coca Cola plant and as a result of which the water table has gone down
quite low, leaving the hand pumps and irrigation mechanisms non
functional. Farmers are left with not even a drop to irrigate their
fields
and forced to go for deep borings to survive and fight for water.

Coca Cola on the other hand has no role to play at all in water
conservation or harvesting, and is selling our own water at a price
which
competes with that of milk. It is indeed shameful the manner in which
our
elected representatives gave them a clean chit even after a reputed
agency
like CSE brought out a report against their soft drinks.

The choice has to be made clear, whether public interests weigh more
than
corporate interests or is it vice versa.

Many other activists and village based farmers have sustained injuries
from Coca Cola security & police brutalities, and the injuerd include :
state convenor of NAPM Nandlal, Rekha (whose abdomen received countless
blows of lathi by Mahila Police), another villager lady whose head
ripped
open due to police atrocity.

Sandeep Pandey, who heads the largest coalition of grassroot
organizations
in this Indian Sub continent (NAPM), said before leaving that 'it is
high
time to defy corporate domination. Giant corporations govern our people
and land. This rule by corporations violates the fundamental democratic
principle of consent of the governed. We need to usher in the change to
bring in a just and social order'.

====================================================================================

Coca-Cola is in trouble in India. Ever since the first allegations
arose
in Kerala, India, of water scarcity and polluted water resulting from
its
bottling operations, Coca-Cola's public relations department has
churned
out denials, insisting that the charges are false and that it is the
"target of a handful of extremist protesters."

Coca-Cola's global website carries their position on the issue and
claims
that the "local communities have welcomed our business as a good
corporate
neighbor."

Nothing could be further from the truth.

It is time for Coca-Cola to seriously examine and address the adverse
impacts of its operations in India. In fact, Coca-Cola needs to stop
treating the issues in India as a public relations problem and assign
it
to the appropriate department that will genuinely address the issues of
over-exploitation of water (leaving the community with scarce water
resources) and pollution of water sources as a result of its
operations.
Hindustan Coca-Cola and Bharat Coca-Cola are the Indian subsidiaries of
Coca-Cola.

To highlight these issues, we are profiling a series of community
struggles against Coca-Cola in India, all of which point to a pattern
in
the company's operations. The communities are left thirsting as
Coca-Cola
draws water from the common water resources. Its operations are
polluting
the scarce water that remains. The emergence of local, grassroots
struggles against the cola giant's operation in India should also serve
as
a reminder to Coca-Cola's bosses in Atlanta that this is not a public
relations problem that one can just "spin" and wish away. Rather, the
heart of the issue is a serious concern about control over natural
resources and the right of communities to determine how business is
done
in their communities.

Close to a year after our report on Coca-Cola's operations in
Plachimada,
Kerala, the communities in and around Coca-Cola's facility continue to
hold the factory responsible for their water woes. In fact, the local
panchayat (elected body at the village level) decided in April NOT to
renew the license issued to the Coca-Cola factory, on the grounds of
"protecting public interest." Protests, led primarily by Dalits
(formerly
untouchables) and Indigenous Peoples, have continued for over a year
against the factory, and new data validates the charges that
Coca-Cola's
bottling operations have depleted and contaminated the ground water.
Surendranath C visited the area and filed a report on the latest stage
of
the struggle in Plachimada, Kerala.

Local residents in Mehdiganj, near the holy city of Varanasi, are also
gearing up for a struggle against Coca-Cola. Coca-Cola has illegally
occupied a portion of the common property resources of the village and
was
found guilty of evading payment of land revenue by a local court.
Protesters were met at Coca-Cola's factory gates by about 200 police
personnel, sent to "protect" the plant along with 50 gun-toting private
security guards. This was not all for show-- the demonstrators were
beaten
up. The Coca-Cola plant in Mehdiganj enjoys heavily subsidized
electricity
and is accused of spewing toxics into surrounding agricultural fields
as
well as causing serious water shortage as a result of its operations.
We
have a report from Mehdiganj.

In yet another community, this time in Kudus village in Thane district,
villagers are forced to travel long distances in search of water which
has
dried up in their area as a result of Coca-Cola's operations. Villagers
are questioning the subsidized water, land and tax breaks that
Coca-Cola
receives from the state, only to leave them thirsting for water.
Coca-Cola
has built a pipeline to transport water from a river to its plant, and
an
activist opposing the pipeline was detained by police authorities for a
week. We carry a story from the Times News Network.

And in a proactive move, more than 7,000 people, mostly women, turned
out
to protest a proposed Coca-Cola factory in Sivaganga, Tamil Nadu.
Residents are justifiably worried that Coca Cola's operations in the
area
would lead to scarcity of water and contamination of water. We carry an
article from Frontline.

For Coca-Cola to claim, after being made aware of the community
protests
all over India, that "local communities have welcomed our business as a
good corporate neighbor," is nothing short of arrogance. But then,
Coca-Cola's arrogance should come as no surprise as it is accustomed to
having its way with governments.

Under the rules of entry for Coca-Cola into India, it was agreed that
Coca-Cola would divest 49% of its equity stake in India within 5 years.
In
an unprecedented move, the government of India seems to have given in
to
Coca-Cola's pressure, and is on the verge of changing its policy in
this
regard to suit Coca-Cola's interest. We are faced with a situation
where
Indian investors will own 49% of Coca-Cola's Indian operations, but
have
no vote whatsoever! Just like in the Enron case, the US government
played
a significant role. Robert Blackwill, the US ambassador to India, in a
letter to Brajesh Mishra, Principal Secretary to the Prime Minister of
India, stated that, "I would like to bring to your attention, and seek
your help in resolving, a potentially serious investment problem of
some
significance to both our countries. The case involves Coca-Cola, one of
the largest single foreign investors in India."

For a company that has had its way and has access to top US officials,
things are not so rosy after all. Coca-Cola may very well be the most
recognizable brand name in the world but it is also increasingly
becoming
the target of ire of local communities around the world as a result of
its
disregard for communities and the environment. Community struggles in
India against Coca-Cola are just a few of many that exist and are
emerging. Coca-Cola was also identified as a target of boycott to
protest
the US led invasion of Iraq. Sales of Coca-Cola plummeted in certain
areas
in India, such as Kerala.

In an extremely significant case, Coca-Cola's main Latin American
bottler
is facing trial for allegedly hiring right wing paramilitary forces
(aka
death squads) to murder and intimidate trade union organizers,
especially
from the union, Sinaltrainal. The suit has been brought under the Alien
Tort Claims Act, which allows corporations to be sued in the US for
crimes
committed overseas.

Coca-Cola is also the target of an international campaign demanding
that
Coca-Cola guarantee access to care and treatment for all their
employees
and their families living with HIV/AIDS, especially in the African
continent where Coca-Cola is a major employer.

Holding Coca-Cola accountable for its pollution, as various communities
in
India are trying to do, will not be the first such instance. In May
2003,
Coca-Cola de Panama was fined US$300,000 for polluting Matasnillo River
in
Panama.

Coca-Cola, it seems, is on its way to soon earning the reputation that
Enron enjoyed in India. Both Enron and Coca-Cola top the Foreign Direct
Investment list from the US in India. Enron's Indian operations (Dabhol
Power Corporation, a joint venture with Bechtel and General Electric,
among others) was the single largest foreign direct investment in India
and became the target of activists across the country due to
irregularities in its manner of carrying out its business, including
the
use of armed thugs to suppress opposition. Indians had shut down Enron
long before the financial scandal in the US brought the entire company
down.

Coca-Cola could soon join that list.

The India Resource Center will focus on supporting community struggles
against Coca-Cola in India. Check back regularly for updates.

said...

http://www.indiaresource.org/campaigns/coke/2005/gangaikondan.html

said...

ரோசாவசந்த், தங்களது மேலதிக செய்திகளுக்கு நன்றி. முழுமையாய்ப் படித்துவிட்டுத் தொடர்கிறேன்.

said...

hi just made my blog today:
http://niroshantk.blogspot.com/

said...

வாங்க நிரோசன்,

வாழ்த்துக்கள்.

-மயூரன் அண்ணா.