இயேல் கட்டிடங்கள்

வானை முட்டும் பெட்டியடுக்குக் கட்டிடங்கள் என்னைப் பெரிதும் வியப்புற வைப்பதில்லை. நியூ யோர்க்கைச் சற்றுத் தள்ளியிருந்து பார்த்தால் என் குவியத்தின் கூர்நுனி அந்தக் கட்டிடங்களுக்கிடையில் சிக்கித் திணறுவதைப் போலிருக்கும். புதிய கட்டிடக் கலையென்ற பெயரில் பழைய அழகிய நுணுக்கங்கள் பலவற்றையும் தப்ப விட்டு விடுகிறோமோ என்று நினைப்பதுண்டு. இவ்வகையில், பழைய கட்டிடக் கலையம்சங்களை இன்றளவும் தாங்கி நிற்கும் இயேல் (Yale) பல்கலையின் கட்டிடங்களை எனக்குப் பிடிக்கும். தேவையெனில் இக்கட்டிடங்கள் மிகுந்த அக்கறையுடன் (யோசிக்க வைக்கும் செலவுடனும்!) இயல்பு/தோற்றம் மாறாமல் மீட்டுருவாக்கம் செய்யப் படுகின்றன. இத்தொடர் பதிவில் நான் எடுத்த இயேலின் சில புகைப்படங்களை, குறிப்பாக வாயில்கள் மற்றும் சாளரங்களினதைப் பகிர்ந்து கொள்கிறேன்.

(போச்சு, இதை எழுதி முடித்துவிட்டு வாசித்த போது "காலத்தின் முடிவுறா வெளியில் எது புதியது எது பழையது என்று எப்படித் தெளிவாகச் சொல்வாய், கெக்கெ?" என்ற கேள்வியுடன் உள்ளேயிருந்து ஒருவன் எழுந்து வருகிறான் (அவனுக்குக் காலத்துக்குள் வெளியா அல்லது வெளிக்குள் காலமா என்றொரு உபகேள்வியும் இருப்பதாகப் பிறகு என்னிடம் சொன்னான்), அவனிடம் "பழையதைவிடப் புதியதைப் புதியது என்போம்" என்று சொல்லிப் பார்க்கிறேன். "அப்படியென்றால் பழையதும் முன்பு புதியதுதானே?" என்றபடி என்னை இந்தப் படத்தைப் போட விடாமல் இழுத்து மௌனத்தில் தள்ளிவிடப் பார்க்கிறான். இது ஒத்து வராது, இப்போதைக்கு அவனை விட்டுவிட்டுப் படத்தைப் பார்ப்போம்!)

Image hosted by Photobucket.com

8 comments:

said...

போச்சு, இதை எழுதி முடித்துவிட்டு வாசித்த போது "காலத்தின் முடிவுறா வெளியில் எது புதியது எது பழையது என்று எப்படித் தெளிவாகச் சொல்வாய், கெக்கெ?" என்ற கேள்வியுடன் உள்ளேயிருந்து ஒருவன் எழுந்து வருகிறான் (அவனுக்குக் காலத்துக்குள் வெளியா அல்லது வெளிக்குள் காலமா என்றொரு உபகேள்வியும் இருப்பதாகப் பிறகு என்னிடம் சொன்னான்), அவனிடம் "பழையதைவிடப் புதியதைப் புதியது என்போம்" என்று சொல்லிப் பார்க்கிறேன். "அப்படியென்றால் பழையதும் முன்பு புதியதுதானே?" என்றபடி என்னை இந்தப் படத்தைப் போட விடாமல் இழுத்து மௌனத்தில் தள்ளிவிடப் பார்க்கிறான். இது ஒத்து வராது, இப்போதைக்கு அவனை விட்டுவிட்டுப் படத்தைப் பார்ப்போம்

evil influnce of t.... :)

said...

இங்கிலாந்துப் பயணத்தின் போது செஸ்டரில் ஓரிடத்திற்கு வழி சொன்ன ஒருவர் 'புதுப்' பாலத்தைத் தாண்டிப் போகவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். "ஓ, சமீபத்தில தான் அந்தப் பாலம் கட்டினாங்களா?" என்று கேட்டேன். ஒரு அஞ்சு பத்து வருசம் இருக்குமோ என்று எண்ணியபடி. சொன்னார் - புதுப்பாலம் என்பது கட்டி ஒரு முன்னூறு நானூறு வருடம் இருக்கும் என்பதை!

said...

//போச்சு, இதை எழுதி முடித்துவிட்டு வாசித்த போது "காலத்தின் முடிவுறா வெளியில் எது புதியது எது பழையது என்று எப்படித் தெளிவாகச் சொல்வாய், கெக்கெ?" என்ற கேள்வியுடன் உள்ளேயிருந்து ஒருவன் எழுந்து வருகிறான் (அவனுக்குக் காலத்துக்குள் வெளியா அல்லது வெளிக்குள் காலமா என்றொரு உபகேள்வியும் இருப்பதாகப் பிறகு என்னிடம் சொன்னான்),//

எப்படி நீ எப்பொழுதும் இப்படியே!!!!!!!!!
ஆ.......

ரவி,

எவில் இன்fலுன்cஎ ஒf ட்.... :) - தங்கமணியா!!!!!!!!!!!!

ஆகா!, கறம்பக்குடியான்ஸ்


சாரா

said...

ஆகா!, கறம்பக்குடியான்ஸ் :-)

//(அவனுக்குக் காலத்துக்குள் வெளியா அல்லது வெளிக்குள் காலமா என்றொரு உபகேள்வியும் இருப்பதாகப் பிறகு என்னிடம் சொன்னான்)//

பிறகு ??? :-)

said...

குண்டா,

மாடர்னிச கட்டிடங்கள் சில சமயம் வெறுமையைத் தரத்தான் செய்கின்றன. நிறைய வெளியை (space) தருகிற மாதிரியான கட்டிட அமைப்புகள் பொதுவாக நல்ல உணர்வைத்தருகின்றன என்று நினைக்கிறேன்.

சரி, நல்லா படங்களை போடு.

said...

தங்கமணி, குண்டா! என்று முன்பு சொல்லியிருந்தால் நாம் சுந்தரவடிவேலை வேறுமாதிரிக் கற்பனை பண்ணியிருப்போம்.. இப்போது சொல்லும் போது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.

said...

ரவி: //evil influnce of t.... :)// அதான் பேரைச் சொன்னா வழக்குப் போடமாட்டேன்னு ஏற்கெனவே மூக்கர் பதிவுல T சொல்லிருக்காரே அப்புறமென்ன?:))

செல்வராஜ்: //புதுப்பாலம் என்பது கட்டி ஒரு முன்னூறு நானூறு வருடம்// இப்படியே போய் நாம் 1600களில் முளைத்த New York, New Haven எல்லாம் நியூவான்னு கேப்போம்:))

சாரா: //எப்படி நீ எப்பொழுதும் இப்படியே!!!!!!!!!// காசா பணமா, சும்மாயிருக்க மனசுதானே, குழப்பி வச்சா கறிக்காகுது, என்ன!

கா.ரா: //
பிறகு ??? :-)// பிறகென்ன, "எவன் முதலில் மிக அதிகமான சத்தமிடுகிறானோ அவனே பின்னர் அமைதி அடைகிறான்" :))

தங்கமணி: மாடர்னிசத்தைக் கட்டிடங்களில் நுழைத்துத் தவறு செய்துவிட்டோம் என்பதாக இயேலின் கட்டிடவியலாளர் ஒருவர் சொல்லியிருந்ததைப் படித்தேன்.

கறுப்பி: அதுவா, அது சும்மா ஒரு பேருக்கு :))

said...

//பிறகென்ன, "எவன் முதலில் மிக அதிகமான சத்தமிடுகிறானோ அவனே பின்னர் அமைதி அடைகிறான்" :))//
எப்படி , நான் மதுரை மல்லியிடம் அடைஞ்சாப்பிலியா? :-))

அது சரி , யார் உங்க கிண்ணத்தை பறித்தது.