எ யெ ஏ யே மொழிக்குழப்பியே!

நான் Yaleஐ ஏல்னுதான் நெனச்சேன். அப்புடித்தான் எழுதிக்கிட்டிருந்தேன். முந்தி பெயரிலியும் அப்புறம் சமீபத்துல பத்ரியும் யேல்னு எழுதுனதைப் பாத்ததுக்கப்புறம் யோசிச்சுப் பாக்குறேன். யேல்தான் சரின்னு படுது. நான் ஏன் யேலை ஏல் என்று எழுதினேன் என்ற கேள்வியோட எனக்குள்ளே தூங்கிக் கொண்டிருந்த மொழிக்குழப்பி எந்திரிச்சுட்டான். இதற்கு விடை காணும் பொருட்டு அவன் கடந்த சில நாட்களாகப் பகலிலும், இரவிலும், தனிமையிலும், கூட்டந்தன்னிலும் எலி, யெலி, எறும்பு, யெறும்பு, ஏணி, யேணி என்று சொல்லிக் கொண்டும், எங்கே நிம்மதீx2, எலந்தப்பயம்x2, எங்கேயெனது கவிதை என்று பாடிக்கொண்டும் திரிந்தான். இந்த ஞானத்தேடலைத் தன்னோடு நிறுத்திக் கொண்டுவிடாமல், நெடுவாரக் கடைசியில் குடும்பத்தோடு ஊர் சுற்றிக் கொண்டிருந்த தன் நண்பர்களைக் கூப்பிட்டு நடுச்சந்திகளில் வைத்து எங்கே எ, யெ சொல்லு பாப்போம் என்று பயமுறுத்தினான் (இந்த நண்பர்களிலேயொருத்தன் தன் கைப்பேசியில் ஏ, யே என்றபோது முன்னாலே நடந்து போய்க்கொண்டிருந்தவர் திரும்பிப் பார்த்துப் போனாரென்பது உபகதை).

ஆகக் கடைசியில், இல்லை இப்படிக் கடைசியில் என்று முடிவாய்ச் சொல்லிவிட முடியாது என்பதால், இதுவரை மேற்கொள்ளப் பட்ட ஆராய்ச்சிகளின் முடிவில், இந்த மொழிக்குழப்பி கண்டுபிடித்தது என்னவென்றால், நம்மில் பெரும்பாலானோர் 'எ'யை 'யெ' என்றுதான் உச்சரிக்கிறோம். அதேபோலத்தான் ஏயும் யேயும். இது தவறு என்பது மொழிக்குழப்பியின் பக்கவாதம். ஒரே உச்சரிப்புக்கா ரெண்டு எழுத்துக்களை வச்சிருப்பாங்கன்னு தன் கறுப்பு மேலங்கியை மாட்டிக் கொண்டு கேக்குறான். அப்போ எது சரி? (இந்த இடத்துல, சாம்பல் பூசியிருந்த ஒரு சன்னாசி எந்திரிச்சு, தம்பி இதெல்லாம் சரி, இதெல்லாம் தவறுன்னு எதையெல்லாம் சொல்லுவாய் என்று கேட்டுவிட்டு மறுபடியும் படுத்துக் கொண்டார். இது புதுக் குழப்பம், தனியாக வைத்துக் கொள்வோம்.) அப்ப, எயை எப்படித்தான் சொல்றதுன்னு கேட்ட மொழிக்குழப்பிக்கு ஒரு விடையை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சொல்லுது. ஒரு பி.எச். அப்துல் அமீது மாதிரி தன்னை நினைத்துக் கொண்டு எமது சேவை, எங்கள் மொழி, எந்தேயத்தவர்கள் என்று சொல்லிப் பார்க்கிறான். நல்ல வேளையாக இதையெல்லாம் நீங்கள் கேட்க வேண்டியிருக்கவில்லை. இந்த எ வித்தியாசமாயிருந்தது. யாராவது உச்சரிப்பொலிகளை/சுட்டிகளைக் கண்டால் தரலாம்!

அதனால இப்போதைக்கு எயும் யெயும் வெவ்வேறு என்பதைக் கண்டறிந்த மற்றும் இப்படி இருக்கலாமென்றொரு மாற்று உச்சரிப்பினைக் கண்டறிந்த மாபெரும் திருப்பதியோடு மொழிக்குழப்பி வேலையைக் குழப்பக் கிளம்புகிறான்!

28 comments:

said...

யென்னண்ணா சொல்றீங்க?

said...

யெனக்கு யொன்னுமே புரியில்ல..

ரவியா

said...

சுதர்சன், ரவியா, குழப்பிட்டனா? :)
அதாவது நாம் 'எ'யை உச்சரிப்பது 'யெ'யை உச்சரிப்பதை விட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்கிறேன். இரண்டையுமே 'யெ' என்பது போலத்தான் தற்போது உச்சரித்து வருகிறோம். 'எ' என்பதை ஈழத்தமிழர்கள் வித்தியாசமாகவே உச்சரிக்கிறார்கள், குறிப்பாக வார்த்தைகளில் பயன்படுத்தும்போது. ஈழ வானொலிகளில் இவ்வித்தியாசத்தை நாம் உணரலாம். ஒலிப்பதிவுகள் கிடைத்திருந்தால் சுலபமாக இருந்திருக்கக் கூடும்.

ரவியா, 'ஒ'வில ஒன்னும் குழப்பலையே! இன்னும் சொல்லப் போனா, உங்க 'யொன்னுமே' இன்னொரு புது யோசனையைத் தருது. அதாவது, தமிழில் இருக்கும் உயிரெழுத்துக்களில் இ, ஈ, எ, ஏ, உ, ஊ, ஒ, ஓ ஆகியவற்றுக்குத்தான் ஒத்த ஒலியையுடைய உயிர்மெய் எழுத்துக்கள் இருக்கின்றன, அவை யி, யீ, யெ, யே, வு, வூ, வொ, வோ. இவற்றிலே வு, வூ, வொ, வோ ஆகிய நான்கையும் எடுத்துக் கொண்டால் இவை உ, ஊ, ஒ, ஓ ஆகியவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு வேறுபாட்டுடனேயே உச்சரிக்கப் படுகின்றன. இந்த வேறுபாட்டை இன்றளவும் நம்மால் காப்பாற்ற முடிந்திருக்கிறது. ஆனால் இ, ஈ, எ, ஏ போன்றவற்றை யி, யீ, யெ, யே போன்றதாக உச்சரிக்கும் திரிபு காலப் போக்கில் நம்மிடம் ஏற்பட்டிருக்கிறதென்று நினைக்கிறேன். இவற்றைப் பற்றி யாரேனும் 'உருப்படியாக' எங்கேனும் சொல்லியிருக்கலாம், கிடைத்தால் சொல்லுகிறேன்/சொல்லுங்கள். நன்றி.

said...

ஏலே மக்கா இந்த ஆளு சொல்றத பாருங்க
நாம ஏலேன்னு கூப்பிடக்கூடாதாம்......
யேலே.... யேலேன்னு தான் கூப்பிடனுமாம்.....

said...

Ale vs Yale - இவை இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம்தான் தமிழ் உச்சரிப்பில் ஏல் - யேல் என நினைக்கிறேன்.

இங்கு இகர, ஈகார, எகர, ஏகாரத்தில் மட்டும்தான் பிரச்னை. பிறவற்றில் அல்ல என்பதை கவனிக்கவும். யா - ஆ; யோ - ஓ; யை - ஐ ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் உள்ளன என்பதையும் கவனிக்கவும்.

said...

அடப்போப்பா. நம்ம ஊருல தொலைக்காட்சி ஸ்டாரினிகள் யெல்லாம் இப்ப செந்நாய் நகரில்-ன்னுதானே சொல்றாங்க. அதெல்லாம் என்னன்னு சொல்றது.

நம்ம ஊருல 99 சதவீத இளங்கோக்கள் Elango என்றுதான் எழுதுவார்கள். (என்ன செய்றது, Ilango என்று எழுதினால் 'இல்லாங்கோ' என்று படிக்கிறார்களே, அதுக்கு எளங்கோ பரவாயில்லை என்று சொல்வான் என் நண்பன்).

said...

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு போவதால் 'யேல்' ஏற்றுக்கொள்ளப்படலாம்.
அப்படியென்றால் 'yellow' என்ன 'யெல்லோ' -வா? மொழிக் குழப்பிஏ ;-)

said...

வருவாய் வடிவேலா, செலவு என் கணக்கில்;

இயேல் என்றே இயம்புவதுதான் இம்மைக்கும் மறுமைக்கும் மறுவற்ற சாலச்சிறப்பூஊ. ;-)


இனிச் செல்வாய் வடிவேலா (பார்த்தாயா பதூதா, அந்தக்காலத்திலேயே, எம் தமிழர் செல் கொண்டு பேசப்போகும் வாயென்பதை உணர்ந்து செல்வாய் என்றே சொல்லியிருப்பதினையும் ;-))

said...

//செல் கொண்டு பேசப்போகும் வாயென்பதை உணர்ந்து செல்வாய் என்றே சொல்லியிருப்பதினையும் //
வெல்வாய் என்றால் வெல்லம் சாப்பிடும் வாய் என்பதையும் புரிந்து கொண்ட் ஓம்!!

said...

எழுத்தின் ஒலியென்பது தனியே அவ்வெழுத்தில் மட்டும் தங்கியில்லாது அதன் அருகிருக்கும் எழுத்திலும் தங்கியுள்ளது.
எல் - எள்
என் - எண்
இவற்றில் இரு இடத்திலுமே 'எ' க்குரிய ஒலி தீர்க்கமாக வேறுபடுகிறது.
அதுபோலவே
ஏற்றம் - ஏக்கம்
இரு - இறு
அல் - அள்

'யேல்' என்பதும் 'யேள்' என்பதும் வேறுபாடான 'எ'கர ஒலியைக் கொண்டிருக்கும்.

பக்கத்தில் வரும் எழுத்தைப்பொறுத்தும் ஒலிகள் மாறுபடும். ஆனால் மிக இலகுவான விதிகளுக்குள் இம்மாற்றங்களை அடக்கலாம்.
'உ' என்று முடியும் பல சொற்களில் நாம் 'உ' உச்சரிப்பைச் சொல்வதில்லை.
படுத்து
எழுந்து
முடித்து
வருகிறது
போகிறது
இவற்றிலெல்லாம் 'உ' ஒலியில் நாம் முடிப்பதில்லை. 'உ' மற்றும் 'இ' இணைந்ததுபோன்ற ஓர் ஒலியல்தான் முடிக்கிறோம். அந்த ஒலி 'இறப்பு', 'இளமை' போன்ற சொற்களைச் சொல்லும்போது முதலில் வரும் 'இ' ஒலியை ஒத்தது.

யேல் விதயத்தில், பெயரிலியின் 'இயேல்' எனக்கு உவப்பானது.

said...
This comment has been removed by a blog administrator.
said...

/வெல்வாய் என்றால் வெல்லம் சாப்பிடும் வாய் என்பதையும் புரிந்து கொண்ட் ஓம்!!/

தம்பீ ஈ, அது நல்லது சொல்லும் வாய் well+வாய் என்பதுதான் தங்கிலீஸ் காலத்தின் புழக்கமாம்; பாசியும் சுரியும் சேர் பாழ்கிணற்றுவாய் என்று அர்த்தம் கொண்டாயானால், அது நீ இன்னும் சரியான தங்கிலீஷ் பீட்டராக உருவாகவில்லை என்று காட்டுகிறது; அடிக்கடி தமிழ்த்தொல்லைக்காட்சிகளிலே வெங்கட் சுட்டும் செந்நாய்களை ஆண்-பெண் பேதமின்றிக் கவனித்துவா. மூன்று திங்கள்களிலே நீ முழுக்கவே திருந்தி மூன்றாம்பிறை முழுநிலவானதுபோலாகி விடுவாய்; இப்போதைக்கு, என்னை விடு, வாயே;-)
(ஆறுமுகவேலன் தலையிலிருந்து தமிழ்வாலைத் திருப்பாதே, ஆறுமுகசாமியே திருப்பாதே!!)

said...

கோ.கணேஷ்: ஏலே, யேலே எப்படிக் கூப்பிட்டாலும் வித்தியாசப் படுத்திக் கூப்பிடுங்க. (நீங்க யோசிச்சு சொல்லிப் பாத்துக்கிட்டு கூப்பிடறதுக்குள்ள ஆளு போயிருச்சுன்னா நான் பொறுப்பில்ல:))

பத்ரி, //Ale vs Yale// இது தோணல பாருங்க எனக்கு.

வெங்கட்: 'இல்லாங்கோ'ன்னு சொன்னா இவரு இல்லங்கோ இளங்கோன்னு 'அடிச்சு' சொல்லனும்!

கா.ரா: யெல்லோவுக்கு மஞ்சள்னு சொல்வாங்கோ:)

பெயரிலி: //வருவாய் வடிவேலா// செல்வாயா, வெல்வாயா இருக்கதை விட 'வருவாய்' வடிவேலனா இருந்தா நல்லாத்தானிருக்கும்:)) இயேல் என்று ஆரம்பித்தீர்களோ பிறகு பெருங்குழப்பமாகிவிடும்!

வசந்தன்: நன்றி, மேலும் 'சோதனை'க்குள்ளாக்கி விட்டீர்கள் :))

said...

சுந்தரவடிவேல், நீஙகள் ரொரண்ரோ வரும்போது தயவுசெய்து இந்த மொழிக் குழப்பனைக் கூட்டிக்கொண்டு வந்துவிடாதீர்கள். எனெனில் நாங்கள் எல்லோரும் இந்தக் குழம்பனோடு குழம்பத்தொடங்கினால், நான் சனிக்கிழமை சமைத்துப் பரிமாறப்போகும் 'குழம்பின்' உருசியை அனுபவிக்கமுடியாமல் போயிவிடும்!

said...

/நான் சனிக்கிழமை சமைத்துப் பரிமாறப்போகும் 'குழம்பின்' உருசியை அனுபவிக்கமுடியாமல் போயிவிடும்!/

கடவுளே! டிஜே சமைத்துப் பரிமாற, போகுமாம் ....குழம்பு இல்லை, குழம்புகிறேன் ;-)

said...

//நான் சனிக்கிழமை சமைத்துப் பரிமாறப்போகும் 'குழம்பின்' உருசியை அனுபவிக்கமுடியாமல் போயிவிடும்!//

டிஜே. நாங்கள் வரவேணாம் எண்டு நினைச்சா, நேராச் சொல்லும். அதைவிட்டுட்டு இப்படியெல்லாம் பயமுறுத்த வேணாம்.

இப்படியெல்லாம் சொல்லி உம்மட 'கார்டை' கவனமாக பத்திரமாக வைக்க நினைக்காதீரும்.

-மதி

said...

சுந்தரவடிவேல்,

முதலில் நானும் இவர் ஏன் 'ஏலே ஏலேலே'ன்னு சொல்றார்னு குழம்பினேன். இப்படியெல்லாம் ஆராய்ச்சி போகுதா? :ஓ

செர்ரி...
யெல்லோ எண்டு இங்கிலிஷிலை சொல்லிப் பழக்கம். ஆனா, தமிழிலை நான் யெல்லோ எண்டு சொல்லுறேல்ல. மஞ்சள் எண்டு சொல்லுறனான். ;)

said...

பெயரிலி, என்ன நக்கலா? எனக்குச் சமைக்கவும் தெரியும், பிறர் சமைத்ததை அனுபவித்துச் சுவைக்கவும் தெரியும். பல நண்பர்கள் தொலைதூரங்களிலிருந்து வருவதால், இந்த முறை மதி ஏற்கனவே தனது பதிவுகளிட்ட சில ரெசிப்பிகளிலிருந்து, புது வகையான உணவுகளைத் தயாரிப்பதாய் உத்தேசித்துள்ளேன். ரெசிப்பிகள் காணாதபட்சத்தில், தானும் சில ரெசிப்பிப் புத்தகங்களைக் கொண்டுவருவதாக மதி உறுதி அளித்துள்ளார்.. அவருக்கு என்னைவிட நன்கு சமைக்கத் தெரியும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா :-) ? மற்றும் எனது உணவை சுவைக்கப்போகும் நண்பர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். தயவு செய்து வலைப்பதிவர் சந்திப்புக்கு வரும்போது, நீஙகள் ஆயுட்கால காப்புறுதி செய்துவிட்டு வரவும். பின்விளைவுகளுக்கு நானோ, எனது உணவோ பொறுப்பல்ல.

said...

/பெயரிலி, என்ன நக்கலா? எனக்குச் சமைக்கவும் தெரியும், /
எல்லோரும் நல்லபடியா இலக்கிய கூட்டத்தை முடித்து திரும்பிவர அந்த எல்லாவல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.(மக்களே எல்லோருக்கும் புளியோதரை செய்யத் தெரியும்தானே?)

said...

//மக்களே எல்லோருக்கும் புளியோதரை செய்யத் தெரியும்தானே?)//
கார்த்திக், இது எப்படிச் செய்வதென்று செயல்முறை விளக்கம் தரமுடியுமா :-) ?

said...

/பெயரிலி, என்ன நக்கலா?/
சேச்சே குழம்பையெல்லாம் நக்குறதோ? வேணுமெண்டால், ஸ்ரோ வைக்கோல் போட்டு உறுஞ்சிக் குடிப்பனாக்கும் ;-)

/கார்த்திக், இது எப்படிச் செய்வதென்று செயல்முறை விளக்கம் தரமுடியுமா :-)?/
அதுதானே சொல்லியிருக்கிறார். புளியை எடுத்துத் தரையோ தரையெண்டு போட்டுக் காலாலே தேச்சால், ஆகுது. ரெஸப்பிக்கு, அந்த ஸ்ரீரங்கப்பெருமானுக்கு நன்றி. :-)

said...

வேண்டாம் நண்பா, இந்த ஒரு உணவையாவது விட்டுவையுங்களேன். உம்மிடமிருந்து தப்பிக்கத்தான் புளியோதரை , அதை நீரே செய்வது எண்டால் அதுக்கு பதிலாய் 'எலியோதரை' வாங்கி எல்லோருக்கும் கொடுத்துவிடலாமே? ;-)

said...

/புளியை எடுத்துத் தரையோ தரையெண்டு போட்டுக் காலாலே தேச்சால், ஆகுது./

இலங்கையிலே புளியோதரைக்கு என்ன பேரோ? புலியோதரையா?
(பதிவோட கருத்திலே இணைஞ்சுட்டேன், ல ள மொழிக்குழப்பி )

தமிழகத்திலே புளியாவரை என்றும் ஆங்கிலகத்திலே புளியொகரே என்று சொல்வார்கள்.

said...

நோக்கர்,
முயற்சியெடுத்து தொல்காப்பியத்திலிருந்து விளக்கமளித்தமைக்கு நன்றி. முடிந்த வரை எழுத்திலாவது பயன்படுத்தப் பார்க்கிறேன்!

மக்களே,
நல்ல காலம் கதிர்காமாஸ¤ம், புளிதரைத்தேயரும் சமையலோடு வரப் போறதில்லை! டிசே, இவந்தானே அந்த மொழிக்குழப்பியென்று உங்க குழம்பை ஊத்தி முழி கலங்கவிடாம இருந்தாச் சரிதேன்:)) எங்க ஊர்ல இருந்தாலாச்சும் நானும் எதையாச்சும் சமைச்சுக்கிட்டு வந்து பழி தீர்த்துக்குவேன் :))

said...

டி.சே!
எதுக்கும் ஆணம் வைக்கிறதா இப்பவே சொல்லி வையும்.
ஏதும் பிசகெண்டா ஏதாவது ஒரு சொல்லை முன்னொட்டாச் சேத்து ஆணம் ஆக்கிப்போடலாம்.

புளி கூடினா புளியாணம்.
உறைப்புக் கூடினா மடியாணம். (கரைவலை இழுத்தவுடன் அவசர அவசரமாக வைப்பார்களே ஓர் ஆணம்.)
உப்புக் கூடினாலும் புளியக் கூட்டிப்போட்டு புளியாணம் ஆக்கிப்போடும்.

ஆனா வெளிநாட்டில இருக்கிற ஆக்களுக்கு இந்த ஆணங்கள் ஒத்துவராது. எப்பிடியும் ******ல போகும். கவனம்.

said...

சுந்தரவடிவேல்!
பாடல்களில் 'எ'கரம் 'யெ'கரமாக பல சந்தர்ப்பங்களில் ஒலிப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?

said...

இங்க, 'எ' யிலிருந்து புளி வரைக்கும் அலசப்படுதா?

//புளியை எடுத்துத் தரையோ தரையெண்டு போட்டுக் காலாலே தேச்சால், ஆகுது.//

இப்படி ஒரு வழி எனக்கு தெரியல. நான் MTR புளியோதராவை (தெலுங்கிலும், குஜராத்தியிலும், மராட்டியிலும் புளியோதரைக்கு சொன்னால் நன்றியுடையோ நாய் இருப்பேன் கார்த்திக்) போட்டு சாதத்தைக் கொட்டிக் கிளறினால் வந்துவிடும் என்று நினைத்தேன்..

டி.சே யும் மதியும் இந்தளவுக்கு அபாயகரமானவர்களா? கடவுளே! :)

said...

நோக்கர் அய்யா,

என் தமிழ் ஆசிரியரும் தாங்கள் சொன்னதைத்தான் கற்றுக்கொடுத்தார். ஆனால் சில விலக்குகளாக உள்ள சொற்களுக்கு என்ன சொன்னார் என்று நினைவில்லை - யவனம் / யட்(சன் / சினி / சகானம்)