"இணையத்தில் தமிழ்" குறுந்தகடு வேண்டுமா?

Image hosted by Photobucket.com

தமிழ்ல கிறுக்கிக் கீறி நோட்டு நோட்டாவும், தாள் தாளாகவும் சேத்து வச்ச நானெல்லாம் இன்னிக்கு லொட்டு லொட்டுன்னு பொட்டிதட்டி வலையேத்துறேன்னா அதுக்கெல்லாம் காரணம் எத்தனையோ ஆர்வலர்களோட உழைப்பு. தமிழ் இணைய வரலாற்றைத் திரும்பிப் பார்க்கிறேன் அப்படின்னு செருமிக்கிட்டு ஒரு உரை நிகழ்த்துமளவு எனக்கு இதில் படிப்பினை இல்லை. நம்மில் பலரைப் போலவே எனக்கும் உரித்துக் கொடுத்தால் தின்னத் தெரியும். நிற்க!

எழுத்துருக்கள், தேடுபொறிகள், உலாவிகள், இலக்கியங்கள் என்று பரந்து கிடக்கும் தமிழ் இணைய உலகி்ன் முக்கியமான ஆக்கங்களை வெங்கட், டிசே மற்றும் மதி ஆகியோர் ஒரு குறுந்தகட்டில் திரட்டி வைத்திருக்கிறார்கள். "இணையத்தில் தமிழ்" எனும் இந்தக் குறுந்தகடு டொராண்டோவில் கடந்த வாரம் நிகழ்ந்த சந்திப்புகளின்போது புதியவர்களுக்கும், வேண்டுவோருக்கும் அளிப்பதற்காகத் தயாரிக்கப் பட்டது. என்னிடமும் சிலவற்றைக் கொடுத்து அமெரிக்காவிலிருப்போரிடம் பகிர்ந்து கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். எனவே அமெரிக்கவாழ் ஆர்வலர்கள் எனக்கு ஒரு மின்னஞ்சல் (sundarappaa yahoo com) அனுப்பி இக்குறுந்தகட்டினைப் பெற்றுக் கொள்ளலாம் (இலவசம்).

குறுந்தகட்டில் இருக்கும் கோப்புகள்:
கேட்பி (audio tool, audacity)
எ-கலப்பை
மின்னஞ்சல் (Chanakya, Columba Linux)
தமிழ் எழுத்துருக்கள்
காசியின் நியூக்ளியஸ் பற்றிய கோப்புகள்
மதுரை மின் தொகுப்புத் திட்டத்திலிருக்கும் நூற்கள் (இது ஒன்னே பத்தாதா?!)
சுரதாவின் செயலிகள் (எழுத்துருமாற்றிகள், தேடுபொறிகள்...)
உமரின் தமிழ் ஒருங்குறி

இவற்றையெல்லாம் உருவாக்கி நமக்களித்தவர்களுக்கு மீண்டுமொரு முறை நம் நன்றி!

11 comments:

said...
This comment has been removed by a blog administrator.
said...

சுந்தரவடிவேல், குறுந்தகட்டின் முகப்புப்படத்தைப் இந்தப்பதிவில் போட்டு பெயரிலிக்கு நாம் கொடுக்க இருந்த suprise ஜ உடைத்துவிட்டீர்களே :-(. எந்தபடங்கள் பயன்படுத்தபட்டது என்று மின்னஞ்சலில் அனுப்பப்பட்டா என்று மற்ற நண்பர்களிடம் கேட்டபோது, அவருக்கு குறுந்த்கடுகளை(அப்படியே புளியோதரையும்) பார்சலில் அனுப்புவதாய் உத்தேசித்திருந்தோம். எனவே எங்கள் திட்டத்தைக் குழப்பியதால், புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டதிற்கான சன்மானத்தை, பெயரிலிக்கு சுந்தரவடிவேல் வழங்கவேண்டுமென்று நான் 'எச்சரிக்கை' விடுகின்றேன் :-)

said...

அச்சச்சோ! சிங்காரத்துக்கிட்ட முந்தியே சொல்லிருக்கப்படாதா?:)
அப்பா தன் காலால புளியைத் தரையோ தரைன்னு தேய்ச்சுப் புளியோதரை கிளறினா, பிள்ளை காலால அப்பாவைக் கிளறுறார்!

said...

thambi eanakku onnu.

nee oru copy vachiruntheennaa, maththavungalukku anuppidu. appurama vaangikkuren.

said...

சுந்தரவடிவேல்,
ஏதாவது தளத்தில் அந்த சிடியை ஜிஃப் கோப்பாய் ஏற்றிவைத்தால் நாங்களும் இங்கிருந்து இறக்கிக்கொள்வோம்.

said...

நீங்கள் அனுப்பும் புளியோதரைக்கு குறுந்தகடு இலவசமா இல்லை குறுந்தகட்டிற்கு புளியோதரை இலவசமா. எப்படியாயினும் புளியோதரை நல்ல நிலையில் இருக்கும் போது அனுப்பிவிடவும்- இப்படிக்கு விசிதா, போர்ட் பவுன்டேஷன் பேராசிரியை,சர்வதேச புளியோதரை ஆராய்ச்சி அமைப்பு, PB NO 89801, யேல் பல்கலை, நியு காவேன், கனக்டிகட்,

said...

Muthu and others,

I will upload it today itself.

-Mathy

said...

you can use yousendit.com to send big files including zipped ones

said...

சுந்தர் - இதை அஞ்சலில் அனுப்பத் தேவையில்லை. இதற்காக நான் தொகுத்தவை எல்லாம் நேரடியாகத் தரவிறக்கம் செய்யவல்ல தளத்தில் போட்டுவைத்திருக்கிறேன். வேண்டியவர்களுக்கு இந்தச் சுட்டியைக் கொடுத்த
ால் போதும்.

ftp://abbe.optics.utoronto.ca/pub/venkat/tamil_cd/

மேலதிக விபரத்திற்கு

http://www.domesticatedonion.net/blog/?item=519

said...

சின்னக்குறிப்பு: 'இணையத்தில் தமிழ்'
வெளியிடப்பட்டதற்கான முக்கிய நோக்கம்: இணையப் பரீட்சயமில்லாதவர்களை எழுதச்செய்ய ஊக்குவிப்பது.
....
'இணையத்தில் தமிழ்' என்ற குறுந்தகட்டில் உள்ளடக்கப்பட்ட கோப்புக்கள் வெங்கட்டினதும், மதியினதும் உதவியுடன் பெறப்பட்டன. இதற்கான செலவை (200 குறுந்தகடுகள்)மதியும், சுந்தரவடிவேலும், இன்னுமொரு இலாயக்கில்லாததும் ஏற்றுக்கொண்டனர். முகப்பு மற்றும் பின்புறத்தில்,பெயரிலி இணையத்தில் எடுத்துப்போட்ட புகைப்படங்கள்
பயன்படுத்தப்பட்டன. இதற்கான மதி, வெங்கட், சுந்தரவடிவேல், தான்யா போன்றோரின் உழைப்பு குறிப்பிட்டுச்சொல்ல வேண்டியது. என்னை விடுப்புப் பார்க்க இவர்கள் சேர்த்துக்கொண்டமைக்கும் நன்றி.

said...

நன்றி மதி, வெங்கட், டிசே!
குதம்பாய், உங்களுக்கு Campus Mailல் வருகிறது!