படங்களைப் பரிமாறப் புதுவழி - photoleap

Image hosted by Photobucket.com

எடுத்த படத்தை யாருக்காச்சும் அனுப்பனும்னாலே பின்வாங்குற ஆளு நான். படத்தை எடுக்கனும், சைஸை குறைக்கனும், மின்னஞ்சல் கோப்புல இணைக்கனும், அது முக்கி முக்கி இணைச்சதுக்கப்புறம் அனுப்ப அது படுற பாடு, அப்புறமா போற எடத்துல எடம் இருக்குமோ இருக்காதோ...இதெல்லாம் காரணங்கள். ஆன்லைன் ஆல்பத்துல போடுறதுல பெரிய விருப்பமில்லை.

அன்றைக்கு கூகுள் photoleap தளத்தைக் காட்டுச்சு. பயன்படுத்திப் பாத்தேன். நல்லாவே இருக்கு. மின்னஞ்சல் மாதிரியேதான் வேலை செய்யுது. ஆனா இணைக்கும் தொல்லையோ, அனுப்ப/இறக்க முக்குவதெல்லாமோ இல்லை. இந்தப் பக்கம் படக்கோப்பைத் திறந்து வச்சுக்கங்க, வேணுங்கற படத்தை இழுத்து இழுத்து பொட்டில போடுங்க, அனுப்புங்க. வர்ற படத்தை சும்மாவும் பாக்கலாம், ஸ்லைடா ஓட்டிப் பாக்கலாம், சேமிச்சுக்கலாம் இத்யாதி. 100, 200 படங்களெல்லாம் சர்வ சாதாரணமாப் போகுது வருது.

அந்தச் செயலி படத்தைத் தரம் குறையாம சுருக்கி அனுப்புதாம். அதுக்கு மேல அந்தத் தொழில் நுட்பத்தைப் பத்தி எங்கிட்ட கேக்காதீங்க. முயன்று பாருங்களேன்!
(இதப் பத்தி யாராச்சும் எழுதிருக்காங்களான்னு தெரியல.)

6 comments:

said...
This comment has been removed by a blog administrator.
said...

பார்க்கிறேன்பா! நீ எடுத்த படத்தையெல்லாம் அனுப்பு.

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

sundar,

try picasa2 from google.

photos ethirpaarkkiREn. palaappazaththaik kaatti romba loLLu paNNureenga. innum niraiya anuppi vaiyunga. sariyaa.

said...

பிக்கஸோ இறக்கியிருந்தேன் பயன் படுத்த வில்லை. போட்டோ லீப்பையும் என் விட வேண்டும். பயன்படுத்தின போச்சி. வடிவேல் அய்யா நீங்கள் எடுத்த படங்களை பகிர்ந்துக் கொண்டாலும் நல்ல இருக்கும். பதிவிலிருந்த படமும் சூப்பர்.