வலம்புரி ஜானுக்கு...

அமெரிக்க வலைப்பதிவு நண்பர்களுக்கு,
எனக்கு வலம்புரி ஜானைப் பற்றி அதிகம் தெரியாது. அவரது பேச்சாற்றலைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேனேயொழிய ஒரு முறையும் கேட்டதில்லை, பார்த்ததில்லை. ஆனால் இலக்கியத்துக்காக என்னென்னவெல்லாமோ செய்ததாகச் சொல்கிறார்கள். அவரது விமர்சனங்கள், சொல்லாக்கங்கள் ஆங்காங்கே மேற்கோளிடப்படுகின்றன.

அவருடைய தற்போதைய உடல்நல மற்றும் பொருளாதாரச் சீர்கேடுகளை முன்னிறுத்தி மன்னை மாதேவன் நேற்று ஒரு பதிவினை இட்டிருந்தார். சென்ற மாதத்தில் ஜோ (கணியம்) என்பவரும் ஒரு பதிவினை இட்டிருந்ததைக் கண்டேன். ம்யூசிக் இந்தியா.காம் இணையதளத்திலும் ஒரு செய்தி காணக்கிடைக்கிறது. நானறிந்திராத அவருடைய அரசியல் வாழ்வைத் தாண்டித் தமிழுக்காகத் தொண்டு செய்தவர் என்ற ரீதியில் அவருக்கு உதவ நமக்கொரு (வலைப்பதிவாளர்கள்) கடமை உண்டு என நினைக்கிறேன். அதிமுக்கா திமுக்கா தமுக்கா கட்சிகளெல்லாம் செய்யாது, அவர்களுக்கு இன்றைக்கு வாயடிக்க வண்ணையோ காலில் விழக் காளிமுத்தோ போதும், வலம்புரி ஜான் இனித் தேவையில்லை. நாமும் அப்படி இருக்க முடியாது.

அமெரிக்காவில் இருக்கும் வலைப்பதிவர்கள் யாருக்கேனும் கொடுக்கும் ஆவல் இருந்தால் என்னிடம் தெரிவிக்கவும் (sundarappaa@yahoo.com). நீங்கள் சொல்லும் பணத்தை மொத்தமாக அனுப்பி விடுகிறேன், நீங்கள் இன்றோ நாளையோ எவ்வளவு என்று சொல்லிவிட்டு வரும் வாரத்தில் அனுப்பினால் போதும். நம் 10 டாலர் கூட அவருக்கு உதவியாயிருக்கும் என நம்புகிறேன்.

மாடர்ன் கேர்ள் என்பவர் பிரமீளைப் (சிவராமுவை) பற்றிச் சொல்லும்போது //செத்தவுடனே சிலாக்கிக்குற தமிழ் ஈ-இளி-இலக்குயத்தப்பாத்தா இவளுக்கு வாந்தி வாந்தியா வருது. ஆனாலும் இணையத்துக்கு வர சிவராமுவுக்கு முடிஞ்சிருக்குமான்னும் தெரியல. அசோகமித்திரன் சாரு இலக்கியவாதியா இருந்து இங்க ஒன்னும் கிழிக்கமுடியாதுன்னு சொல்லிருந்ததும், பாரதி வெறுத்துப்போயி டோப்பு அடிச்சதும் சில நேரம் யோசிக்கத்தகுந்ததுன்னும் சொல்லிக்கிறா.// அப்படிங்கறார்.

நாம செய்ய வேண்டியது என்னன்னு உங்களுக்குத் தெரியும். உங்கள் மின்னஞ்சலை எதிர் நோக்குகின்றேன். நன்றி!

10 comments:

said...

அன்புமிகு திரு சுந்தரவடிவேல் அவர்களே!

தங்களை எண்ணி நான் பெருமைப் படுகிறேன். நண்பர்கள் நல்லிதயத்தோடு தங்களால் இயன்றதை (அது எவ்வளவு குறைவாக இருந்தாலும் தயங்காது - உணர்வே உயர்வு) வழங்குவார்கள் என நம்புகிறேன்.

நன்றி

அன்புடன்
மனனை மாதேவன்.

said...

சுந்தரவடிவேல்,
பிரமிளுக்கு அவர் புற்றுநோயிலே இருந்த இறுதிக்கட்டத்திலே soc.culture.tamil ஊடாக நிதி சேர்க்கத் தொடங்கினார்கள். அது கிடைக்கமுன்னாலே/செயற்படுமுன்னாலே அவர் இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன்.

said...

அன்பின் சுந்தர்,

மிகவும் வருத்தமான செய்தி. நான் வலம்புரி ஜானின் எழுத்துக்களை விரும்பி வாசித்திருக்கிறேன்; கிடைப்பதையெல்லாம் வாசித்தும் வருகிறேன். அவரளவுக்கு வார்த்தைகளை வளைத்துப் போட்டு அழகாக வாக்கியங்களை வடிக்கும் இன்னொரு எழுத்தாளரை இதுவரை படிக்கவில்லை. அவரது நடையில் மிளிரும் சொல்லாட்சி தனித்துவமானது. அவற்றைப் பற்றி நிறைய பேசலாம். ஆனால் அதற்கு இது நேரமல்ல. மன்னையாரின் பதிவின் மூலம் அவரது முகவரி கிடைக்கப் பெற்றேன். இங்கேயிருந்து ஆகக் கூடியதை நான் செய்கிறேன். உங்களின் இந்த முயற்சி சிறக்க என் வாழ்த்துக்கள்.

-ராஜா
நாமக்கல்.

said...

சு.வ.,
இந்த விஷயம் தொடர்பாக என்னையும் (என் மின்னஞ்சலையும்)சேர்த்துக்கொள்ளுங்கள்.
நேரமின்மைக்கு வருந்துகிறேன்.

said...

குண்டா, உனக்கு இது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்புகிறேன். நல்ல முயற்சி.

said...

இது வரை ஒரு சிலரே மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். திங்கட்கிழமை வந்து பார்ப்பவர்களுக்காக இப்பதிவை இன்னொரு முறை இடவிருக்கிறேன். மதியத்துக்குள் தொடர்பு கொள்வோரோடு சேர்த்து இன்றைக்கு அனுப்பி விட வேண்டும், காலம் போகிறது! நன்றி!

said...

Sundravadivel,
How to send from Europe or germany ? Please give some details.

said...

முத்து, நீங்கள் நண்பர்களிடம் சேகரித்து மேலே மன்னை மாதேவன் பதிவிலிருக்கும் ஜான் அவர்களது விலாசத்துக்கே அனுப்பி விடலாம் என நினைக்கிறேன்.

said...

தகவலுக்கு நன்றி..நம்மால் முடிந்ததை செய்வோம்.

said...

கீழ்க்கண்டோரிடமிருந்து $355 பெறப்பட்டு, காசோலையாக திரு வலம்புரி ஜான் அவர்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது.

சத்யராஜ்குமார்-20
அகிலா ராம்-30
பரமசிவம் சிவா-25
சங்கரபாண்டி-50
தங்கமணி-50
பாலாஜி-பாரி-50
அனாமதேயம்1-20
அனாமதேயம்2-20
கார்த்திக்ராமாஸ்-20
மணி குமரன்-50
சுந்தரவடிவேல்-20

அனைவருக்கும் நன்றி!