உருப்படியாய்

நேற்று பிட்ஸா வாங்கி வந்த அட்டைப் பெட்டியை எடுத்தேன். ஒரு கிண்ணத்தை அதன் மேல் கவிழ்த்து இரு வட்டங்களை வரைந்தேன். அந்த இரண்டு வட்டங்களையும் வெட்டியெடுத்துக் கொண்டேன். அவற்றில் தலா மூன்று துளைகளிட்டேன். துளைகளில் நூலைக் கட்டினேன். அவற்றை ஒரு உடைதொங்கியின் (hanger?) இரு புறங்களிலும் தொங்கவிட்டேன். இப்போது என்னிடம் ஒரு தராசு இருக்கிறது. இதனைக் கொண்டு இனி நான் எல்லாவற்றையும் எடை போடவும், சீர்தூக்கிப் பார்க்கவும் முடியும். நீதிமானாய் இருக்க இந்தத் தராசு மிகவும் உதவியாய் இருக்கும். என் முன்னறைக் கதவின் உட்புறம் தொங்க விட்டிருப்பதால் அதைப் பார்க்கும் விருந்தினர்களும் தங்களை நியாயவாதிகளாக வைத்துக் கொள்ள முயற்சிக்கக் கூடும். நியாய பரிபாலனம் செய்தது போக மீந்த நேரத்தில் என் மகனும் நானும் கடை வைத்து விளையாடலாம். அண்மைக் காலத்தில் நான் செய்த ஒரு உருப்படியான வேலை என்றால் அது இதுதான்!

6 comments:

said...

சூப்பர் வேலை தான் :-)

said...

மாசிலனுக்கும் தராசு விளையாட்டு நன்று. சிலவிசயங்களை நிறுக்கவும், சிலவிசயங்களை அளக்கவும், சில விசயங்களை உணரவும் கற்றுக்கொடு. அவனைச் சுற்றி வெறும் சப்பை நீதி சூழ்ந்துவிடாமல் அவன் இயல்பாய் இருக்கட்டும். அவன் அவனுக்கே உண்மையாக இருக்கட்டும்; எந்த நீதிக்கும், அமைப்புக்குமாய் இல்லாமல்.

said...

அது சரி. தராசு:
பயன்கள்:
1. ஒரு பொருளின் எடை பார்க்க பயன்படும்.
(50 Kg சமாச்சாரங்களுக்குன்னு கேட்டா உத படுவீங்க)
2. சீர்த்தூக்கும் பொழுது, மேலே உள்ள தட்டில் இருக்கும் பண்டம் நான் கனமானவன் என்று கதறும். கீழே உள்ள பண்டம் நான் லேசானவன் என்று புலம்பும். இதன் மூலம், பண்டங்களை பேச வைக்கலாம்.
3. இதை பயன்படுத்துவதால், உலகின் எந்த பகுதியில் இருந்தாலும், துல்லியமான எடை கிட்டும். ஹி..ஹி..

said...

பிட்ஸாவை இப்படி கூட உபயோக படுத்தலாமா? - புது முயற்சி

said...

தராசு ஐடியா நன்றாகத்தான் உள்ளது. பாராட்டுக்கள். அப்படியே எனது வலைப்பூவில் நீங்கள் கொடுத்துள்ள கருத்துக்கும் நன்றிகள்.

said...

சுந்தரவடிவேல்,

இது ஏதோ கவிதை மாதிரியிருக்கிறதே? :-)))