வேலைக்குச் செல்லும் வழியில் நான் அநேகமாய் தினமும் கண்டுவிடும் காட்சிகளில் இச்சிலையுமொன்று. அழகான சிலையென்பதையும், இதனடியில் "An American Dream" என்றெழுதி ஒரு பெயரெழுதியிருப்பதையும் தவிர இச்சிலையைப் பற்றி எனக்கொன்றும் தெரியாது. இந்தக் கூட்டு விளையாட்டு, துள்ளும் இளமை, ஒரு கால் மட்டுமே ஒட்டியபடி அந்தரத்தில் நிற்கும் அந்தப் பெண், ஒட்டுமொத்தச் சிலையையும் தாங்கும் அவன் பாத நுனிகள். மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுவது. எத்தனையோ சேதிகளைச் சொல்வதுபோல் எனக்குப் படுகிறது. இனி சிலையை உங்களிடம் விட்டுவிடுகிறேன்!
சிலையொன்று காண்கிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல சிலையாகத்தான் இருக்கிறது. அதிலும், அந்தப்பெண்னை மேலெழும்பி தாவினாற்ப் போல செய்திருப்பது அருமை.
நல்ல உயிரோட்டமான சிலை. நன்றி.
குற்றாலக் குறவஞ்சியில் படித்த
வசந்த வல்லியின் பந்தாடல் நினைவுக்கு வருகிறதே!
மன முந்தியதோ விழி முந்தியதோ கர முந்தியதோ எனவே..
மணிப் பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி
பொற் பந்து கொண்டாடினளே..
Post a Comment