நேற்று சிங்கப்பூரில் MILK (Mainly I Love Kids) என்ற குழந்தைகளுக்கான சேவை அமைப்பு ஒரு கேளிக்கைக்கூடத்தில் ஏலத்தின் மூலம் 65,000 சிங்கப்பூர் டாலர்களைச் சம்பாதித்து ஆசிய சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்தது.
இந்தப் பெயர்ப்பால் ஒரு புறமிருக்க, சுனாமிக் குழந்தைகளுக்காக செஞ்சிலுவைச் சங்கம் ஆங்காங்கே பால்மாவு கையேந்தி வந்து நமக்குத் தருவதும், அமுல் நிறுவனம் மனமுவந்து பால்மாவு வழங்கியதும் மறுபுறமிருக்க, இங்கே நேற்று சனிப்பிரதோஷத்தை முன்னிட்டுத் தஞ்சை பெரிய கோயிலில் பால் குடம் குடமாக ஒரு காளைச் சிலையைக் குளிப்பாட்டப் பயன்பட்டது!
படம்: தினமலரிலிருந்து
அப்பாலும் இப்பாலும்!
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
என்ன சுவ, பண்டிட்டு பதிவு போட்டு வெளுத்து கட்டினதுக்கபுறமும் இன்னும் அதே அரசியலா? நீங்க என்ன நவீன கடவுளா? இல்லை விஞ்ஞான தேவதூதரா? புண்ணாக்குன்னு தெரியாதா?
அவங்க அங்க பாலை ஊத்திட்டு, இங்கேயும் கொஞ்சம் மோரு ஊத்துவாங்களோ என்னவோ! அப்படியும் இருக்கலாம் இல்லையான்னு கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க?
இப்பாலையும் அப்பாலையும் காட்டுவதே நம் நோக்கம். காட்டியாயிற்று. யாருக்கேனும் போய்ச்சேரலாம். பாலைத் திரித்துத் தயிராக்குவதையும், ச்சீஸாக்குவதையும் பத்தி நாமேன் கவலைப்படனும்னேன்.
கவலைப்படலேன்னா சரி! வேற என்ன வேணும்!
பைத்தியக்காரர்கள். மூளையை அடகுவைத்துவிட்டவர்கள். வேறு என்ன சொல்ல?
இந்தச் சூழ்நிலையில் அபத்தமாகத் தெரிகிறது என்பது உண்மை தான். இதுவன்றி பிற காலத்திலும் சாமி சிலைகளுக்குப் பாலும் தேனும் பொழிகிற பைத்தியத்திற்கும் மூளையை அடகு வைத்துவிட்ட செயலுக்கும் நானும் சில சமயங்களில் உடந்தையாய் இருந்திருக்கிறேனே என்று கேள்வி எழுப்புவதாய் இருக்கிறது.
மதம் தருகிற சேவைமனப்பான்மை குறித்து திண்ணையில் ஜெயமோகன் எழுதியிருந்தாரே அதன் அடியில் கிளைத்திருக்கும் ஆயிரமாயிரம் சல்லிவேர்களில் இவையும் அடங்கும். பாவம்-புண்ணியம், அதைக் கடந்து செல்ல சடங்குகள், பிராயச்சித்தம், பிராயச்சித்தம் செய்து வைக்க பிறப்பு தருகிற அதிகாரம், பிணத்தை புதைக்கையில் கூட வருகிற சாதி அரசியல், சாவுக்கு தாழ்த்தப்பட்ட, உழைக்கிற மக்களை பலிதருகிறதில் இருக்கும் தயக்கமின்மை, தயக்கமின்மையோடு, குடியரசு தலைவரும் காலில் விழ பீடங்களை காப்பாற்றும் மத உணர்வு, இவையெல்லாம் இன்னும் இன்னும் கிளைத்திருக்கும் சல்லிவேர்கள்!
மறுமொழிந்த நண்பர்களுக்கு நன்றி.
செல்வராஜ் நானும் அப்படியிருந்தவனே. ஆனாலும் இன்றைய நிலையில் இதைக் காணச் சகியவில்லை.
அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.
படத்தைப் பாருங்கள். தெருவில் போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்யாது கோயிலின் உள்ளே நம்பிக்கை உள்ளவர்கள் ஏதோ செய்து விட்டுப் போகிறார்கள்.
தலைவர் பிறந்த நாள், முத்தமிழ் விழா என்றெல்லாம் காரணம் காட்டி பஜாரில் உள்ள வியாபாரிகளிடம் கரை வேட்டிகள் அராஜகமாக வசூல் செய்து, தெருக்களைத் தோண்டி, ஆபத்தான ஆர்ச்சுகள் அமைத்து, போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்வதைப் போலவா இங்கு செய்யப்படுகிறது?
உங்களுக்கு மத நம்பிக்கை இல்லாவிட்டால் அதற்கு பக்தர்கள் என்ன செய்வார்கள்? இன்னொன்று. இம்மாதிரியான கைங்கர்யங்களை நம்பிப் பால்காரர்கள், பூக்காரர்கள் மற்றும் பலத் தொழில் வல்லுனர்கள் பிழைக்கின்றனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
(இந்த மறுமொழி சுந்தரமூர்த்தியிடமிருந்து)
கன்றுக்கு மறுக்கப்பட்டு பசுவிடமிருந்து திருடிய பாலைக் கொண்டு காளையின் சிலையைக் குளிப்பாட்டுவது ஒரு முரண்நகை. இது குறித்து பலர் எழுதிவிட்டதால் நான் புதிதாக எதுவும் எழுதுவதற்கில்லை. ஆனால் என் பின்னூட்டம் இது தொடர்பான ஒரு சுவாரசியமான விவாதம் பற்றியது.
சில வாரங்களுக்கு முன் இங்கு (டென்னிசி) சில பால்பண்ணைக்காரர்கள் பச்சைப் பாலை விற்க அனுமதிக்க வேண்டுமெனக் கோரியதாக டென்னிசியன் செய்தித்தாள் ஒரு செய்தி வெளியிட்டது. உடனே அடுத்த சில நாட்களுக்கு பச்சைப் பால் ஆதரவாளர்கள் vs. பதப்படுத்தப்பட்ட (Pasteurized) பால் ஆதரவாளர்கள் என்று இரு குழுக்களாக பிரிந்து வாசகர்கள் கடிதம் எழுதி இரண்டின் நன்மை, தீமைகளை காரசாரமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது இடையில் புகுந்து ஒரு அம்மையார் இவ்வாறு எழுதினார்:
"இந்த விவாதமே அர்த்தமில்லாதது. மனிதர்களைத் தவிர வேறெந்த பாலுட்டிகளும் பிறந்ததிலிருந்து சாகும் வரை பால் குடித்துக்கொண்டிருப்பதில்லை. எந்த விலங்குக்கும் பால் மறக்கடிக்கப்பட்டவுடன் மீண்டும் பால் குடிக்க வைப்பது மிகவும் கடினம். அதேபோல மனிதர்களும் பால் குடிக்காமலேயே ஆரோக்கியமாக இருக்கமுடியும். எனக்கு தெரிந்து நிறையபேர் அப்படி இருக்கிறார்கள். குழவிப் பருவத்தில் விலங்குகள் குடிப்பது கூட தாய்ப்பாலை மட்டும்தான். பசுவின் பால் பசுவின் கன்றுக்கு, சிங்கத்தின் பால் சிங்கக் குருளைக்கு என்பது தான் இயற்கையின் நியதி. உண்மையிலேயே சில மனிதர்கள் பாலிலிருந்து மட்டும்தான் ஊட்டச்சத்து பெற முடியுமென்றால் அவர்கள் குடிக்கவேண்டியது மனிதப் பால் தான். நான் இப்படி சொல்வது பலருக்கு அருவருப்பாக இருக்கும். ஆனால் அருவருப்படைய வேண்டியது பிற விலங்குகளின் பாலைக் குடிப்பதற்குத் தான். ஆகவே அரசாங்கம் யோசிக்க வேண்டியது மனிதப் பால் விற்க அனுமதிப்பது பற்றி தான்".
அதற்கு பிறகு செய்தித்தாளில் பால் விவாதம் நின்றுவிட்டது. இதை எழுதிய அம்மையார் vegan ஆக இருக்கக்கூடும். நம்மூர் lactovegetarianகள் இதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆவல்.
மு. சுந்தரமூர்த்தி.
அன்பு டோண்டு,
இவ்வளவு கூட்டமும் கோயிலுக்கு முன்னிருக்கும் அத்துணூண்டு ரோட்டில் வரும்போதும் போகும்போதும் போக்குவரத்து எப்படியிருக்கும்னு யோசிக்க வச்சிருக்கீங்க.
அதோட, அதோ அங்க மேல நின்னு பால் ஊத்துறாரே அவரை மாதிரித் தொழில் வல்லுனர்களும் பிழைப்பது இந்த மாதிரிக் கைங்கர்யங்களாலதான்னும் சுட்டியிருக்கீங்க. நன்றி!
சுந்தரமூர்த்தி: உங்களுடைய கருத்துக்கு நன்றி. ஒரு காலத்தில் பசுங்கன்றுக் கறி ருசித்த லாக்டோவெஜிடேரியன்கள் பரசுராம் பால்கோவாவையும் விட மாட்டார்கள், 'ஆவுரித்துத் தின்னும் புலையரை'யும் விடமாட்டார்கள்! அப்படியே விழுங்குவார்கள்.
Post a Comment