தண்ணியடிக்கும் காலிகள்!

தினத்தந்தியில ஒரு செய்தி பாத்தேன். ஈரோடு மாவட்டம் தாராபுரம், குண்டடம் பகுதிகள்ல டாஸ்மாக் பிராந்திக்குப் படு கிராக்கியாம். ஏன்னா அங்கேயிருக்க காலிபிளவர் தோட்டக்காரர்களெல்லாம் அந்தப் பயிர்ல பூச்சியோட தாக்கத்தைக் குறைக்க மருந்தோட பிராந்தியக் கலந்து அடிக்கிறாங்களாம் (கவனிக்க: பயிருக்கு!).

அல்கஹாலுக்கு நுண்ணியிரிகளைக் கொல்ற திறனிருக்கதால அதை ஆய்வகங்கள்ல பயன்படுத்துவோம். செடிக்கு அடிக்கலாமான்னு தெரியல. கொஞ்சம் அலசிப் பாத்தேன். கலிபோர்னியாவுல பலவிதமான செடிகளுக்கும் ஐசோபுரோபைல் அல்கஹாலைப் (isopropyl alcohol, IPA) பயன்படுத்துறாங்களாம். வீட்டுத் தோட்டங்கள்லயும் இதைப் பயன்படுத்துறாங்க (அதிகமாயில்லை, ஒரு லிட்டருக்கு 30 மிலி). மதுபானங்கள்ல ஐசோபுரோபைல் அல்கஹால் இருக்காது. ஆனா அதுகள்ல இருக்க எத்தில் அல்கஹாலும் இந்த நுண்ணியிர்க் கொல்லி வேலையைச் செய்ய முடியும். நம்ம ஊர் விவசாயிகளுக்கு ஐசோபுரோபைல் அல்கஹால் பிராந்தியை விட மலிவாக் கிடைச்சா அதையே வாங்கிப் பயிர்களுக்கு அடிக்கலாம்; பிராந்தியை வேற எதுக்காச்சும் பயன்படுத்தலாம். என்னமோ செடிகள்லாம் சந்தோஷமா இருந்தாச் சரிதான்!

தினத்தந்தி செய்தி

9 comments:

said...

அது சரி, தண்ணியடிச்சா நமக்குவயத்துல கிருமி எல்லாம் செத்து போகுமா?

(நமக்கு ரொம்ப வசதி பாருங்க!)

said...

கூடவே நல்லது செய்ற நுண்ணுயிரிகளும், வயித்துச் செல்களும் சேர்ந்து செத்துப் போயிருமே. அதுக்குப் பேசாம வேப்பிலையும் நொச்சிச் சாறும் குடிக்கலாம்!

said...

ரோசா,
2 ஸ்பூன் டிமக்ரான் -குமான் ட்ரை பண்ணலாமே. சத்தியமா வயத்து பூச்சிஎல்லாம் செத்துரும். :)

said...

சுந்தரு என்ன நக்கலா? கார்திக் சொன்னதை கூட பொறுத்துக்குவேன். வேப்பிலைசாறுல என்னய்யா கிக்கு!

சரி, கொஞ்சம் சீரயஸா பேசுவோம். கொஞ்ச நாள் முன்னாடி இந்தியாவிலே கொக்கோகோலாவை பூச்சி மருந்தா பயன்படுத்தினாங்களாமே! தெரியுமா?

said...

John Vidal
Tuesday November 2, 2004
The Guardian

Indian farmers have come up with what they think is
the real thing to
keep crops free of bugs.
Instead of paying hefty fees to international chemical
companies for
patented pesticides, they are reportedly spraying
their cotton and chilli
fields with Coca-Cola.
In the past month there have been reports of hundreds
of farmers
turning to Coke in Andhra Pradesh and Chattisgarh
states.
But as word gets out that soft drinks may be bad for
bugs and a lot
cheaper than anything that Messrs Monsanto, Shell and
Dow can offer,
thousands of others are expected to switch.
Gotu Laxmaiah, a farmer from Ramakrishnapuram in Andra
Pradesh, said he
was delighted with his new cola spray, which he
applied this year to
several hectares of cotton. "I observed that the pests
began to die after
the soft drink was sprayed on my cotton," he told the
Deccan Herald
newspaper.
Coca-Cola has had a bad year in India.
Other farmers in Andra Pradesh state accused the
company of
over-extracting underground water for its bottling
plants and a government
committee upheld findings that drinks made in India by
itself and PepsiCo
contained unacceptable amounts of pesticide residue.
But Mr Laxmaiah and others say their cola sprays are
invaluable because
they are safe to handle, do not need to be diluted
and, mainly, are
cheap.
One litre of highly concentrated Avant, Tracer and
Nuvocron, three
popular Indian pesticides, costs around 10,000 rupees
(」120), but
one-and-a-half litres of locally made Coca-Cola is 30
rupees. To spray an acre
would be a mere 270 rupees.

It is clearly not Coke's legendary "secret" ingredient
that is
upsetting the bugs. The farmers also swear by Pepsi,
Thums Up, and other local
soft drinks.
The main ingredients of all colas are water and sugar
but some
manufacturers add citric and phosphoric acids to give
that extra bite to human
taste buds.
Yesterday a leading Indian agriculture analyst,
Devinder Sharma, said:
"I think Coke has found its right use. Farmers have
traditionally used
sugary solutions to attract red ants to feed on insect
larvae.
"I think the colas are also performing the same role."

The properties of Coke have been discussed for years.
It has been
reported that it is a fine lavatory cleaner, a good
windscreen wipe and an
efficient rust spot remover.
Uncorroborated reports from China claimed that the
ill-fated New Coke
was widely used in China as a spermicide.
Yesterday a spokesman for Coca-Cola in Atlanta said:
"We are aware of
one isolated case where a farmer may have used a soft
drink as part of
his crop management routine.
"Soft drinks do not act in a similar way to pesticides
when applied to
the ground or crops. There is no scientific basis for
this and the use
of soft drinks for this purpose would be totally
ineffective".

said...

வேப்பிலை நொச்சிச்சாறு வயித்துப் பூச்சிக்கு. கிக்கெல்லாம் வராது, குமட்டல்தான் வரும்!
கோக்குல பூச்சிக்கொல்லி மருந்துகளோட அளவு அனுமதிக்கப் பட்டதை விடக் கூடுதலா இருந்ததாக அமளிப்பட்டதுதான் தெரியும். அதைப் பூச்சிமருந்தாவே அடிச்சாங்களா? pH குறைச்சல், அதுனால ஆசிட் மாதிரி இருந்து பூச்சியக் கொன்னுச்சா? தெரியலைங்க. வேண்ணா தேடிப்பாக்குறேன்.

said...

உங்க கதையைப் படிச்சதும் எனக்கொன்னு ஞாபகம் வருது. எங்க அலுவலகத்துல கோக் கேன்களை மறுசுழற்சிக்காக ஒரு பெட்டியில் போட்டு வைப்பார்கள். ஒரு நாள் எங்கிருந்தோ சாரி சாரியாய் செவ்வெறும்புகள் அந்தப் பெட்டிக்கு வந்து போய்க் கொண்டிருந்தன! இருக்கலாம். ஆனா வெறும் சக்கரையைத் தாண்டி ஏதோ இருக்கனும்.

said...

சீரியஸான கமெண்ட். நான் கூட சமீபத்தில் ஒரு தமிழ் தினசரியிலோ எங்கோ படித்தேன். கொக்கோ கோலாவை பூச்சி மருந்துடன் கல்ந்து விவசாயிகள் (ஆந்திராவில்?) உப்யோகப்படுத்துவதாய். ஆனால் இதற்கு அறிவியல் பூர்வமனா ஆதாரம் இல்லை என்றி விஞ்ஞானிகள் சொன்னதாகவும் சில நாட்கள் கழித்து படித்தேன். மேற்படி விவரம் இல்லை மன்னிக்கவும்.

said...

யோவ் கார்திக்கு, படிச்சுட்டு எழுதற பழக்கம் இல்லையா? மேற்படி தகவல் இல்லையா? அதைத்தானே கார்டியன்லேர்ந்து எடுத்து போட்டிருக்கேன்!