வீரப்ப சம்ஹாரம்

காடுகளை அழிப்பது தவறு. சந்தனம், தேக்கு போன்ற மரங்களைக் கடத்துதல் குற்றம். மனிதர்களைத் துன்புறுத்துவதும் கொல்வதும் நியாயமன்று. இவற்றில் எனக்கு மறுப்பில்லை. வீரப்பன் ஒரு குற்றவாளி. மக்களாட்சியின் நீதிக்கு முன் கொண்டுவரப்பட்டு நியாயமாகத் தண்டிக்கப் படவேண்டியவர். அவர் மட்டுமில்லாது அவரை யாரெல்லாம் தவறிழைக்கத் தூண்டினரோ அவர்களனைவருமே தண்டிக்கப் படவேண்டியவர்கள். இக்குற்றவாளியைத் தேட உடலை வருத்திக் காட்டில் கிடந்து பாடுபட்ட காவல்துறையினரின் உழைப்புக்கு என் வணக்கங்கள். ஆனால் நீதியின்பாற்பட்ட அணுகுமுறைக்கு ஒரு குற்றவாளியைக் கொண்டுவராததன் மூலம் அரசு பிழை செய்து விட்டதாகக் கருதுகிறேன். வீரப்பன் கொலை முன்வைக்கும் கேள்விகள் எத்தனையோ. இதற்கான பதில்கள் எல்லாம் ஒவ்வொருவரின் அனுமானம், நம்பிக்கை, எதிர்பார்ப்பே. உண்மையில் நடந்தது என்ன என்பது நடத்தியவர்களுக்குத்தான் தெரியும். பத்திரிகைச் செய்திகளின் வாயிலாக எத்தனையோ முரண்பாடுகளைக் காண்கிறேன். உங்களுக்கு இதற்கு மேலும் தோன்றியிருக்கலாம்.
1. வீரப்பனை இவ்வளவு தூரம் அழைத்து வந்த ஓட்டுனரால் மருத்துவமனைக்குள் கொண்டு சென்றிருக்க முடியாதா?
2. முதலில் சுட்டது போலீஸ்தான் என்கிறது கர்நாடகப் போலீஸ். இல்லை வீரப்பன் கூட்டம்தான் என்கிறது தமிழக போலீஸ்.
3. சடலத்தைக் குடும்ப வழக்கப்படி புதைப்போம் என்று குடும்பத்தினர் சொல்ல, போலீஸ் வீரப்பனின் சடலத்தை எரிக்கச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறது, இதற்காக எரிபொருட்களையும் போலீஸே தயாராக வைத்திருந்திருக்கிறது. எரிக்கச் சொல்லி அவசரப் படுத்தியிருக்கிறது. வாக்குவாதங்களுக்குப் பிறகு ஒருவழியாய்ப் போலீஸ் புதைக்க ஒப்பியிருக்கிறது.
4. சடலத்தை முழுமையாகப் பார்க்க மனைவியைக் கூட அனுமதிக்கவில்லை. முகம் மட்டுமே காட்டப் பட்டது.
5. வீரப்பனின் இடது கண் காணாமல் போயிருப்பது இந்த என்கவுண்டரின் பேரில் பெரும் சந்தேகங்களைக் கிளப்புகிறது.

என்னைப் பாதித்த சில:
1. தினமலர் வெளியிட்ட முதல்வரின் பஞ்சமுகமலர்ச்சி (ஐந்து விதமாகச் சிரித்திருந்தார்). ஐயாயிரம் குர்தியர்களைக் கொன்றதாக, இன்னும் பல சர்வதேசக் குற்றங்கள் சுமத்தப்பட்ட சதாம் உசேனைப் பிடித்துவிட்டதாக (கவனிக்க: உயிருடன்) என்று புஷ் சொன்னபோதுகூட அவர் முகத்தில் இத்தனை முகமலர்ச்சியை நான் பார்க்கவில்லை.
2. போலீஸாரின் வீதிவழிக் கொண்டாட்டங்கள், இனிப்பு, விழா, அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட உடனடிச் சலுகைகள், தீபாவளி-நரகாசுரன் கதைகள்.
3. தேவாரம் அவர்களின் பிபிசி செவ்வியில் "இந்த மனித உரிமைக்காரங்க சொல்றதையெல்லாம் கேட்டுக்கிட்டிருந்தா வேலை பாக்க முடியாது" என்ற வாசகங்கள். இது ஒரு தலைமைப் போலீஸின் மனித உரிமை மீதான கருத்து. இதுவே இப்படியிருந்தால் மற்ற அனைத்து மட்டங்களிலும் மனித உரிமை எப்படியிருக்கும் என்பது கேள்விக்குறி.
4. அபத்தத்தின் உச்சமாக, ஒரிஸாக் கடற்கரையில் துர்கா தேவி வதம் செய்வதற்கு இந்த வருடம் மகிஷாசுரனை விட்டுவிட்டு வீரப்பனின் உருவத்தைச் செய்திருக்கிறார்களாம். வீரப்பனின் குடும்பத்திலிருப்பவர்களும், முக்கியமாய் அவரது குழந்தைகள், இன்னுமொருமுறை வீரப்ப சம்ஹாரத்தைப் பார்த்துக் கொள்ளலாமல்லவா. இதனைத் தொடர்ந்து தமிழர்களும் இன்னொரு தீபாவளிப் பண்டிகையை ஏற்படுத்திக் கொண்டாடலாம். அல்லது முருகன் கோவில்களில் சூரசம்ஹாரத்தில் வீரப்பனை வைத்துக் கொள்ளலாம்.

ஒரு மரணத்துக்கு, அதுவும் சந்தேகத்துக்குரிய மரணத்துக்குப் பின் இப்படியான எதிர்வினைகளைப் பார்ப்பது வேதனையாயிருக்கிறது, அந்த ஆள் குற்றவாளியாகவே இருந்தாலும். இதற்கு மாறாக, மதத்தின் பெயரால் எத்தனையோ கொலைகளை நிகழ்த்திய நிகழ்த்தும் மதவாதிகள் பாதுகாப்பையும், உயர்மரியாதையையும் பெறுவதை இன்னொரு புறத்தில் நாம் கண்டபடியேதானிருக்கிறோம். எல்லோருக்கும் உரிமை என்பதை, மனித உரிமை என்பதை வெறுங்கனவென்று புறந்தள்ளி, ஆளும் வர்க்கத்துக்கு அடிவருடியபடி தாழ்ந்தோரை இன்னும் தாழ்த்தும் மனநிலை என்று ஒழியும்? வீரப்பன் குறித்து நம் வலைப்பூவுலகில் கிளம்பிய வினைகளைப் பற்றி நான் எதுவும் எழுதுவதாயில்லை. மூக்கு சுந்தர் சொல்றது மாதிரி அவரவர் மூக்கு அவரவர்க்கு, வைத்துக் கொள்வோம்.

3 comments:

said...

//மதத்தின் பெயரால் எத்தனையோ கொலைகளை நிகழ்த்திய நிகழ்த்தும் மதவாதிகள் பாதுகாப்பையும், உயர்மரியாதையையும் பெறுவதை இன்னொரு புறத்தில் நாம் கண்டபடியேதானிருக்கிறோம். எல்லோருக்கும் உரிமை என்பதை, மனித உரிமை என்பதை வெறுங்கனவென்று புறந்தள்ளி, ஆளும் வர்க்கத்துக்கு அடிவருடியபடி தாழ்ந்தோரை இன்னும் தாழ்த்தும் மனநிலை என்று ஒழியும்?//

இவை மிகவும் நுட்பமான செய்தியை கொண்ட வரிகள். குஜராத்தில் வாக்காளர் பேரடங்கிய கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட்களோடு, துணை இராணுவப் படையின் ஆசீர்வதங்களோடு நடந்த வேட்டையில் 1000 மேலானோர் கொல்லப்பட்டனர். அவர் இன்னும் சிரித்துக்கொண்டிருப்பார்.
ஹர்சத் மேத்தான்னு ஒருத்தர நியாபகம் இருக்கா வர் இன்னும் இன்னமும் இருக்கார், சிரிச்சுக்க்கிட்டே. அவரால பலபேர் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. வீரப்ப்னையும் சிரிச்சுகிட்டே இருக்கவிடனும்னு நான் சொல்லல ஆனா விசாரிச்சா ரொம்பபேர் வாழ்க்கையில சிரிப்பா சிரிச்சு இருப்பாங்க.

ஆமாம் மனித உரிமை என்பதே இங்கு மிகப்புதிய வார்த்தை. "இங்கு பறையனுக்கு உரிமையானதை கேட்டு வாங்கிட்டுப்போ, குடிமகனுக்கு உரிமையானத கேட்டு வாங்கிட்டுபோ" அப்படித்தான் பழக்கமே தவிர மனித உரிமை என்பது மிகவும் புதிய, புரியாத, அச்சத்தை ஏற்படுத்தும் வார்த்தை. இங்கு பஸ்டாண்டில் பிக்பாக்கெட் ஒருவன் மாட்டிவிட்டால் போறவன் வருபவன் எல்லாம் தரும அடி கொடுப்பதுதான் வழக்கம். அது அவனுடைய குற்றத்துக்கான தண்டனையா, இல்லை ஒவ்வொருவரும் தங்களுக்குள் இருக்கும் குற்றவாளியை மறைக்க அவனை குற்றப்பிரதிநிதியாக்குகிறார்களா? திருடாமை என்பது உயர்ந்த அறமென்று எல்லோருக்கும் உரக்கச் சொல்லவேண்டாமா? இங்கு உடலை விற்கும் பெண்ணொருத்தி யாரால் அதிகமுறை பலவந்தப்படுத்தப் படுகிறாள் என்று நினைக்கிறாய்? பிறகு கற்பை எப்படி இச்சமூகம் காப்பது?

இங்கு (இந்தியாவில்) சுரண்டலை சமுதாய-நிறுவனப்படுத்தியதால் பல இறுக்கமான வழிமுறைகள் வழியேயே மனிதன் வாழவேண்டியுள்ளது. ஒன்று தாயாய் இரு அல்லது வேசியாய் இரு. ஆண்களுக்கு வேறு மாதிரியான சாதிய வழிமுறைகள். மனிதன் என்பவன் இங்கு யாருமில்லை. அதனால் தான் இங்கு தனிமனிதனாக விரும்பியவர்கள் இமயமலைக்கோ (இன்றைக்கு சூப்பர் ஸ்டார் பிக்னிக்குகளை சொல்லவில்லை), தேசாந்திரமோ போகவேண்டி வந்தது. பாரதியைபற்றிய யதுகிரி அம்மாள் எழுதிய 'பாரதி நினைவுகள்' படித்தேன். பாரதி இறந்ததற்கு வறுமை, யானை, நோய் இதெல்லாம் காரணமாய் சொல்லப்பட்டது. இப்போது படித்தபிறகு நினைக்கிறேன். அவனை மனிதனாக பார்க்க ஆளில்லாமல் பார்ப்பானாகவே பார்த்த சமூக அழுத்தமே (அவரது உறவினர்கள் உட்பட) காரணமாய் இருக்குமென்று. ஒருமுறை சுதந்திரத்தை ருசித்துவிட்ட பிறகு மனிதன் இந்த கற்பனைக் கதையாடல்களை நம்புவதில்லை. ஆனால் அவன் இந்த சமுகத்தை அச்சுறுத்தும் மிகப்பெரிய சக்தியாகிறான். "உங்களில் குற்றம் செய்யாதவன் இவள்மேல் கல்லெறியட்டும்" என்றவனை கொல்லாமல் என்ன செய்வது.

(Disclaimer: நான் வீரப்பனையும் அந்தச் தச்சனையும் ஒன்றெனச் சொன்னதாக புரிந்துகொண்டால் நான் பொருப்பாளியில்லை. நான் வீரப்ப்னைப் பற்றி எங்குமே பேசவில்லை. உனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு பார்வையும் முக்கியமானது என்று சொன்னதைத்தவிர)

நன்றி.

said...

"உண்மையில் நடந்தது என்ன என்பது நடத்தியவர்களுக்குத்தான் தெரியும்." - அவர்களின் சொல் மட்டுந்தான் இப்போதைக்கு அம்பலம் ஏறுகிறது!

said...

¯í¸Ç¢ý ´Õ ¸Õò¾¢ø ÁðÎõ Á¡ÚÀθ¢§Èý. `¾¨Ä¨Á §À¡Ä£Š «¾¢¸¡Ã¢Â¢ý ¸Õò§¾ þôÀÊ¢Õó¾¡ø....' ±ýÚ ¦º¡øž¢ø «÷ò¾Á¢ø¨Ä. Å£ÃôÀý `§¾Î¾ø §Åð¨¼'¢ø Á¢¸ ¦Àâ «ÇÅ¢ø ¿¢¸úó¾ ÁÉ¢¾ ¯Ã¢¨Á Á£Èø¸û, «ôÀ¡Å¢ Áì¸Ç¢ý Á£¾¡É º¢ò¾¢ÃŨ¾¸û þó¾ §À¡Ä£Š «¾¢¸¡Ã¢Â¢ý þ¨Â¾Ö¼ý(¾¨Ä¨Á¢ø ±ýÚ ¦º¡øÄ¡Áø)¾¡ý ¿¼óÐûÇÐ. «Åâ¼õ §ÅÚ ±¾¡ÅÐ Å¡÷ò¨¾ Åó¾¢Õó¾¡ø¾¡ý ¬îºÃ¢ÂÀ¼ÓÊÔõ.

Å£ÃôÀý ŢŸ¡Ãõ ÓÊ×ìÌ Åó¾¾¢ø «ó¾ À̾¢ ÁüÚõ ¦¾¡¼÷ôÒÀÎò¾ÜÊ «¨ÉòÐ Áì¸Ùõ §À¡Ä£Š (Ó츢ÂÁ¡¸ §À¡Ä£Š, «Îò¾¾¡¸ Å£ÃôÀý) ¦¸¡Î¨Á¸Ç¢ø þÕóÐ ¦¸¡ïºõ ¿¢õÁ¾¢ ¦ÀÕãîÍ Å¢¼ÓÊÔõ. «¾¡ÅÐ ÅÆì¸Á¡É -Å£ÃôÀý ŢŸ¡Ãõ ¦À⾡žüÌ Óý§À þÕó¾Ð §À¡ø- §À¡Ä£Š ¦¾¡ø¨ÄÔõ ¸¡ðÎ «¾¢¸¡Ã¢¸Ç¢ý ÍÃñ¼ø¸Ùõ ÁðÎõ þÕì̧Á ´Æ¢Â, Á¢¸ §Á¡ºÁ¡É º¢ò¾¢ÃŨ¾¸û, §À¡Ä£Š Üðʦ¸¡ñÎ §À¡ö ±ýÉÅ¡É¡÷ ±ý§È ¦¾Ã¢Â¡Áø þÕôÀÐ etc §À¡ýȨŠþøÄ¡Áø þÕì¸Ä¡õ(Å£ÃôÀý Å¢ðÎ ¦ºýÈ À½ò¨¾ §¾Ê «ùÅ¡Ú ¿¢¸Æ¡Ð ±É «ôÀÊ ±¾¢÷À¡÷§À¡õ). «ó¾Å¨¸Â¢ø þó¾ Å¢„Âõ ÓÊ×ìÌ Åó¾Ð ¿øħ¾!

ÁüÈÀÊ þí§¸ ±ø§Ä¡Õõ ±ØÐÅÐ ÌÈ¢òÐ ÒÄõÀ¢ ¦¸¡ñÊÕôÀ¾¢ø «÷ò¾Á¢ø¨Ä. þÅ÷¸Ç¢¼ý §ÅÚ ±¨¾Â¡ÅÐ ±¾¢÷À¡÷ò¾¢Õó¾¡ø, ±¾¢÷À¡÷ÀÅâ¼õ¾¡ý §¸¡Ç¡Ú. («Ð×õ ¨Ãð¼÷ À¡Ã¡Å¢ý Ä¡ƒ¢ì þÕ츢ÈÐ À¡Õí¸û, «¾üÌ ¾Ã§ÅñÎõ §¿¡Àø ÀâÍ!) -§Ã¡…¡Åºóò.