புதுக் குடியிருப்பு

வணக்கங்க.

இது என்னோட புது வீடு. rediffல முந்தி குடியிருந்தேன். சின்னச் சின்ன பிரச்சனைகள். ஒங்குத்தமா எங்குத்தமா யார நான் குத்தம் சொல்லன்னு பாடிக்கிட்டு திரிஞ்சப்ப தங்கமணி வழக்கம்போல டோய், இங்க வாடான்னு கூட்டிக்கிட்டு வந்து இந்த வீட்டைக் கட்டிக் குடுத்திருக்கான். அந்தப் பையனுக்கு ஒரு ஓ போடுறேன்.

இதை நான் ரெண்டு காரணங்களுக்காகப் பயன் படுத்த இருக்கேன். ஒன்னு அறிவியலுக்காக. முக்கியமா உயிர் வேதியியல் சம்பந்தமான விடயங்களுக்கு. இன்னொன்னு சொந்தக் கதை எழுதுறதுக்கு. அப்பப்ப இந்தப் பக்கம் வந்துட்டு போங்க. நன்றிகள்.

பி.கு. பழைய வீட்டிலிருந்து கொண்டு வந்த சரக்குகளில் கொஞ்சத்தை இங்க போடுறேன், பாருங்க.

0 comments: