கடுக்காய், தான்றிக்காய், நெல்லிவற்றல் மூன்றும் சம அளவில் சேர்ந்தது திரிபலா. இது சூரணமாக இம்ப்காப்சில் (IMPCOPS, திருவான்மியூர் தலைமையகம் மற்றும் அடையாறு பார்மசி போன்ற மருந்துக் கடைகளில்) கிடைக்கிறது. திரிபலாவுக்குப் பல பயன்களைச் சொல்கிறார்கள். இப்போதைக்கு சொந்த அனுபவத்தில் நான் கண்ட இரண்டு:
தொண்டை வலி:
சளி பிடிக்கிறதுக்கு ஒரு நாலைஞ்சு மணி நேரத்துக்கு முன்னாடி பாத்தீங்கன்னா தொண்டை ஒரு மாதிரி கரகரக்கும். அப்பவே தெரியணும், நமக்கு நாளைக்கு சளி பிடிக்கப் போவுதுன்னு. அந்த மாதிரி நேரத்துல நான் என்ன செய்வேன்னா, கொஞ்சம் திரிபலாவை எடுத்து சுடுதண்ணியில போட்டு, நல்லா வாய் கொப்பளிப்பேன். அம்புட்டுதான். சளி வராது. தொண்டைக்கும் இதமா இருக்கும். பிள்ளை அவ்வப்போது பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டுவரும் மற்ற தொண்டை வலிகளுக்கும் இது நல்ல மருந்து. வாய் கொப்புளிச்சுத் துப்பத் தெரிந்த குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். முழுங்கினாலும் பெரிய பிரச்சினை இல்ல, இருந்தாலும் ரொம்ப சின்ன பிள்ளைங்களுக்கு வேணாம்.
பல்லிடுக்குப் பிரச்சினை:
சில நேரம் பல்லிடுக்கில் உணவுத் துகள் மாட்டிக் கொள்கிறது. காரட் துண்டு, ஆட்டுக்கறி இப்படி. அப்போது கவனிக்காம விட்டுட்டா, அடுத்த நாள் வலிக்கும். அப்போ அந்தத் துணுக்கை floss போட்டு எடுத்துட்டாலும் வலிக்கும். அந்த நேரத்தில் திரிபலாவை சுடுதண்ணியில போட்டு வாய் கொப்பளிச்சா, அல்லது அந்த இடத்தில் வைத்து லேசாக பல் தேய்ப்பது போலத் தேய்த்தால் வலி மாயமாய்ப் போகிறது. மற்ற வகை பல்/ஈறு வலிகளுக்கும் இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
மதியம் சனி, பிப்ரவரி 02, 2008
எனக்கு வாய்கண்ட மருந்து - திரிபலா
Posted by சுந்தரவடிவேல் at 2/02/2008 07:16:00
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
திரிபலாவை புறக்காயங்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம். திரிபலா கலந்த கொதிக்கவைக்கப்பட்ட நீரால் காயங்களைக் கழுவதும் நல்ல பயன் தரும்.
அதேபோல வாய்ப்புண் வருகிற போதும் இதைப் பயன்படுத்தலாம்.
கூடுதலான தகவலுக்கு நன்றி தங்கமணி!
சுந்தரவடிவேல் - திரிபலா குடல் அழற்சிக்குக்கூட நல்ல மருந்து.
It is indicated for mild constipation and many other complaints. (Referred as kayakalpa madicine in Siddha literature)
From where i can buy this in Tamilnadu. Kindly share the dtails.
Post a Comment