காரால் அடித்துத் தூக்குவது எப்படி? விளக்கப் படம்!

பொதுவிடத்தில் அத்துமீறிக் கட்டப்பட்டிருந்த ஒரு கோயிலின் ஒரு பகுதியை நீதிமன்றத் தீர்ப்புக்கமைய இடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பக்த கேடிக்குச் சாமி வந்து, அம்பாசடர் ரதத்தை எடுத்துக்கொண்டு வந்து பொறியாளர்களை அடித்துத் தூக்கியிருக்கிறார்.
கடவுள் மேல் கொண்ட காதல் கண்களை மறைக்கிறது.(இதற்குத்தான் சொன்னான், ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்று!) அல்லது இது சாதாரண மதவெறி, சாதிவெறி, பணவெறி கேசா?
நடந்தது கன்னியாகுமரி மாவட்டத்தில். இது குறித்த பதிவெதுவும் என் கண்ணில் படவில்லை.

காரோடும் படத்தை ஓட்டிப் பார்க்க இதை அழுத்தவும்!

7 comments:

said...

சுந்தரவடிவேல்,

பக்த கேடிக்கு மதவெறி தலைக்கேறியதன் விளைவாக இந்த கொலை முயற்சி அமைந்ததாக கருதுகிறேன். காவல்த்துறை இந்த கொலை முயற்சி பற்றிய விசாரணை முடிவுகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

காவல்துறையினர், அரசு அதிகாரிகளுக்கே இந்த நிலையென்றால், மற்றவர்களது நிலையென்னவாக இருக்கும்? மெல்ல மெல்ல காவி இருள் படர்கிறது!

said...

ஜீரணிக்க இயலாத ஒரு செயல்.
நேற்று இட்ட பதிவு.
http://majinnah.blogspot.com/2008/02/blog-post.html

said...

சுந்தரா,

இந்தச் செய்தியை சன் ட்டிவியில் பார்க்கும் பொழுதே திகில் வந்து மனசை கவ்விக் கொண்டது.

இதற்கும் ஒரு விமானத்தைக் கொண்டு உலக வர்த்தக சபைக்குள் ஓட்டிக் கொண்டு சென்றதற்கும் ஒரு பெரிய வித்தியாசமிருப்பதாக நான் நினைக்கவில்லை.

அந்த கார் ஓட்டியை தூக்கிலும், அதற்கு துணை போனவர்களை வாழ்வு முழுதுக்கும் உள்ளே தூக்கி போட்டால் மற்றவர்களுக்கு பாடமாக அமைய வாய்ப்புண்டு.

ஆனால், பாருங்கள் இன்னமும் காவல் துறை அந்த வாகனத்தைக் கூட பறிமுதல் செய்ய முடியவில்லையாம் :(.

said...

சுந்தரவடிவேல்,

சர்ச்சைக்குரிய இந்த கோவிலின் விரிவாக்கம் தனியார் ஒருவரது நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து உருவக்கப்பட்டிருக்கிறது. நடந்த வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தில் அந்த ஆக்கிரமிப்பை அகற்ற தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது அதை அகற்ற முயன்ற போது இந்துத்துவவாதிகள் எதிர்ப்பு காட்டியுள்ளனர். பின்னர் உயர்நீதிமன்ற கிளை மதுரையில் வழக்கு நடத்தப்பட்டு ஆக்கிரமிப்பை அகற்றுமாறும், அதை ஒளிப்பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த முனைந்த அதிகாரிகளுக்கு நேர்ந்தது தான் இந்த ஒளிக்காட்சி. கொலை முயற்சியில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் சிலர் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்.

மதவெறியின் உச்சம் சமுதாயத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதற்கான கா(சா)ட்சி இது.

said...

:(

said...

மனது வலிக்கிறது.....

:(((((((((((((((((((

said...

என்னதான் கேள்விப்பட்டிருந்தாலும் இதுபோல ஒரு அநியாயத்தை பார்ப்பது மிக நெஞ்சை வதைக்கிறது. இவ்வளவு தெளிவான ஆதாரங்கள் இருந்தாலும் வாகன ஓட்டியும் அவர் பின்னால் இருப்பவர்களும் இன்னும் தெருவில்தான் திரிவார்கள் என்பதுதான் மிகவும் அநியாயம்.

பல இடங்களை ஆக்கிரமிப்பு செய்ய மிக எளிதான வழி அங்கே ஒரு சிலையை நிறுவுவது என்பதை நான் என் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். பொதுவிடங்களாக இருந்த நகர்ப்பூங்கா போன்றவை இரவோடிரவாக சிறுகோயிலாக மாறி பூசாரிக்கு நிரந்தர வருவாயைத் தருகிறது. (உதாரணாமாக ஐஐஎஸ்ஸிக்குச் சற்று வெளியே இருந்த பெங்களூர் மாநகரத் திடலில் (எதிரில் மகாராணி லஷ்மி அம்மணி கல்லூரி) இரவோடிரவாக ஒரு கோவில் வந்தது. அது இப்பொழுது நிரந்தரமாகிவிட்டது. இந்த இடத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள்.