ஆங்கிலம் சோறு போடுமா?

ஆள் + அறிவு -> சோறு
ஆள் + மொழி -> சோறு
ஆள் + வினை -> சோறு...

இப்படியாக நம் மனம், வாக்கு, செயல் எல்லாமே சோறா மாறுனாத்தான் நமக்குச் சந்தோசம். இந்த மாதிரியான சமன்பாட்டை, கொள்கையை வச்சுக்கிட்டுத்தான் தமிழ் சோறு போடுமா போடுமான்னு சிலர் கூப்பாடு போடுறதும். அப்படிக் கூப்பாடு போடுறவங்களை சந்தோசப் படுத்துறதுக்காக இந்தப் பதிவு. தமிழ் இப்படிச் சோறு போடுதோ இல்லையோ எனக்குத் தெரியாது, ஆனா ஆங்கிலம் இப்படி ஒரு சோத்தைப் போடுது. அதாவது நேத்து ரேடியோவில ஒரு செய்தியக் கேட்டேன். ஒரு அப்பா, தன்னோட பிள்ளைங்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்குறதுக்காக ஒரு நாள் சமையற்கட்டுல விளையாட ஆரம்பிச்ச விளையாட்டு இப்ப சாப்பாடு இல்லாத பலருக்கு சாப்பாடு குடுக்குது. போயிப் பாக்கணும்னு தோணிச்சு. பாத்தப்ப என்னோட ஆங்கில வாத்தியாரான கே.வி சாரை நெனைக்க வச்சிருச்சு. விளையாடிப் பாத்தேன். நல்லாத்தான் இருக்கு. நீங்களும் www.freerice.com தளத்துக்குப் போயி விளையாடிப் பாருங்க. ஆங்கிலம் சோறு போடும்!

1 comments:

said...

என்னால முடிஞ்சது, 1620 அரிசி மணிகளை நகர்த்தவியன்றது.

மகனிடம் காட்டி ஒரு 1 மணி நேரம் நகராமல், உட்கார வைத்து, அரிசி கொடை பற்றி விளக்கி - செய்ய சொல்ல வேண்டும் !

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!