புலிகளுக்குப் பொருளுதவி, வளங்களை அளித்தல் குற்றமில்லை!

அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் குர்திய அமைப்பு ஒன்றின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் அமெரிக்காவில் 1996ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 2004ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்"களின் சில பகுதிகள் மொன்னையாக இருப்பதாகவும் அவற்றை நீக்கும்படியும் கோரப்பட்டது. அந்த அமைப்புகளுக்குப் பொருளுதவியும் மற்ற வளங்களும் வழங்கி அமைதியான தீர்வுக்கும், ஐ.நா சபையில் தங்கள் தரப்பினை எடுத்துச் சொல்லவும் உதவ நினைப்பவர்களும் இச்சட்டப்படி குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள் என்ற நிலை இருந்தது. நேற்றைய தீர்ப்பின்படி, இத்தகைய பொருளுதவிகளும், வளங்களை வழங்குதலும் ("material support or resources") குற்றம் என்பதான பகுதிகள் இச்சட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன.

செய்தி:

8 comments:

Anonymous said...

அப்போ ஏற்கனவே தடைசெய்யப்பட்ட அக்கவுண்டுகள் எல்லாம் ரிலீஸ் செய்யப்படுமா ?

Anonymous said...

ஹிலாரி கிளிங்ரன் அதிபர் பதவிக்கு வரும்போது இன்னும் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்புக்கள் ஏற்படுமா?

ஒரு ஈழத்துதமிழன்

said...

ரவி, முக்கியமாக டி.ஆர்.ஓ போன்ற தொண்டு நிறுவனங்களின் மீதான தடையாவது இந்தத் தீர்ப்பைக் கொண்டு நீக்கப்படவேண்டும்.


ஈழத்துத்தமிழன், தெரியவில்லை. ஓப்ராவை வைத்து ஒரு புறம் ஒபாமா கலக்கிக் கொண்டிருக்கும்போது என்ன நிகழுமென்று தெரியாமல்தானிருக்கிறது. மொத்தத்தில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தால் மகிழ்ச்சிதான்.

said...

சுந்தரவடிவேல்,
தகவலுக்கு நன்றி.

ஹிலறி அம்மையார் கார்டியன் நாளிதழுக்கு அளித்த செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளது போல், எல்லா போராட்ட அமைப்புக்களையும் ஒரே கோணத்தில் பார்க்கக் கூடாது.

குறிப்பாக, குறிடிஸ் மக்களின் போராட்டமோ அல்லது ஈழத் தமிழ்மக்களின் போராட்டமோ அந்த நாட்டின் ஆதிக்க சத்திகளுக்கு எதிரானதே தவிர வேறெந்த நாட்டிற்கும் அவற்றின் நலனிற்கும் எதிரானது அல்ல.

எனவே அமெரிக்க காங்கிரஸ் சபை, மற்றும் செனற் சபை, இந்த வரைவிலக்கணத்தை மாற்றியமைக்க அமெரிக்கத் தமிழ் குடிமக்கள் அச் சபைகளின் உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு செயற்பட வேணும்.

Anonymous said...

சுந்தரவடிவேல்,

குறித்த தீர்ப்பில் நீங்கள் குறிப்பிட்ட சட்டத்தின் பகுதிகள் சில சாதாரண மக்களுக்கு தெளிவின்மையும் குழப்பம் விழைவிப்பதாகவும் இருப்பதாகவே சொல்லப்பட்டிருக்கிறது. முன்னர் கீழ் நீதிமன்றம் (வட்டார) வழங்கிய தீர்ப்பை இன்று மேல்நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. ஆனால் சட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. மேலும் இத்தீர்ப்பை அரசு மேல்முறையீடு செய்யுமா என்பது தெரியவில்லை. பலர் அவ்வாறு செய்ய மாட்டாதென்றே சொல்கிறார்கள். ஏனெனில் இத்தீர்ப்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புகள் உச்சநீதிமன்றத்திலேயே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இவ்வழக்கில் இவ்வாறு நடைபெறும் பட்சத்தில் அது அமெரிக்காவில் ஏலவே இச்சட்டத்தின்கீழ் ந்டைபெற்று முடிந்த பல வழக்குகளின் தீர்ப்புகள் திருத்தப்பட வேண்டி வரும். இவ்வாறான நிலைமையை அமெரிக்க அரசு தற்போது ஏற்படுத்த விரும்பாது எனவே பலர் கருதுகின்றனர். அத்துடன் 2004 இல் வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதி ஒட்ரி கொலின்ஸ் அம்மையார் அத்தீர்ப்பு புலிகள் மற்றும் குர்திஸ் அமைப்பினருக்கு மட்டுமே பொருந்தும் என விசேட குறிப்பொன்றை எழுதியதையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும்.

said...

கூடுதல் விபரங்களுக்கு நன்றி அனானி!

said...

பதிவுகளுக்கு நன்றி தம்பி!

said...

செய்திக்கு நன்றி.