தி இந்து பரப்பும் பொய்

தி இந்து பத்திரிகையில் மாவீரர் நாள் உரையைப் பற்றிய செய்தியில் அது பரப்பும் ஒரு தவறான சொற்றொடரைச் சுட்டிக் காட்டவே இந்தக் குறிப்பு:

இந்து சொல்கிறது: "...Prabhakaran said in his annual Heroes' Day speech on his 53rd birthday."

அதாவது மாவீரர் நாள் உரை என்பது பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவது போன்ற குறிப்பினைப் படிப்பவர்களுக்கு உணர்த்தும் நோக்கில் இவ்வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. இதுவரையில் போராடி மடிந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான இந்த நிகழ்வு, நானறிந்த வரையில், பிரபாகரனின் நண்பரும் போராளியுமான சார்ல்ஸ் அண்டனியின் மறைவு நாளையொட்டியே நினைவுகூரப்படுகிறது. பிரபாகரனின் பிறந்த நாள் நவம்பர் 26. ஆனால் இப்படியொரு இரட்டைநாக்கு வாசகத்தை எழுதுவதன் மூலம் தமிழ்நாட்டில் வசிக்கும் இந்து படிக்கும் பெரும்பாலானவர்களுக்கிடையே "பிரபாகரனின் பிறந்த நாள்தான் மாவீரர் நாள்" என்பதான கருத்தைப் பரப்ப இந்து விழைகிறது. இதன் மூலம் பிரபாகரன் என்பவர் சுய துதியில் திளைக்கும் ஒரு சாதாரண அரசியல்வாதியைப் போன்றவர் என்பதான கருத்தைத் திணிக்கிறது. சாதாரண மக்களுக்கு, அதுவும் கர்வம் கொள்ளக்கூடாது என்ற கருத்தியலில் ஊறித் திளைத்திருக்கும் நம் இந்தியக் குடிகளுக்கு, பிரபாகரனை ஒரு கர்வியாக, ஆணவத்தின் சின்னமாகக் காட்ட முயன்றிருக்கிறார்கள். ஆணவம் பிடித்தவர்கள் அழிவார்கள், அழிய வேண்டும் என்ற வரலாற்று நியதி நம் கதைகளுக்கு உண்டு. ஆணவம் பிடித்தவர்களுக்கு சுதந்திரம், மக்கள் நேயம் போன்ற சிந்தனைகள் இருக்கும் என்று சாதாரணர்கள் நம்புவதில்லை. எனவே ஆணவத்தோடு ஒருவரை அடையாளப்படுத்துவது நெடுங்கால நோக்கில் ஒருவரைப் பற்றிய நல்லபிமானத்தை எழச் செய்யாது.

அந்தச் செய்தியிலேயே "his outfit's cause" என்பதும், இவர் தனியொரு ஆளாக, கும்பல்களை வைத்து அட்டகாசம் செய்யும் ஒரு பேட்டை ரௌடியைப் போன்றதொரு படத்தையும் இந்து வரைய முனைகிறது. இது விடுதலைப் புலிகள் மீது ஈழத்தமிழர்கள் வைத்துள்ள நம்பிக்கை, அபிமானம், இணக்கம், ஆதரவு ஆகியவற்றை மறுதலித்து, மக்களையும் புலிகளையும் தனித்தனியான அங்கங்களாகக் காட்டும் நரித்தனம். இவர்களால் கேணல் கருணாவை மக்களின் அங்கமாகக் காட்ட முடிந்தது. கருணா இங்கிலாந்தில் பிடிபட்டதற்குப் பிறகு, வெகு தந்திரமாக அவரைக் கழுவிவிட்டிருக்கிறது. இதே இந்து பிள்ளையான் அணி, பொக்கையான் அணி என்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக எந்த அணி தோன்றினாலும் அதனை அரவணைத்துச் செல்லும். ஈழத்தைப் பொறுத்தவரை இவர்களது நோக்கம் புலிகளுக்கெதிரான, அதிலும் பிரபாகரனுக்கெதிரான, ஊடக, அரசியல் குழிபறிப்புதானேயொழிய ஈழச் செய்தி, தமிழர் சுதந்திரம், மக்களாட்சி என்று எந்த மண்ணாங்கட்டியுமில்லை.

இந்துவின் தமிழீழ விரோதப் போக்கைத் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இது எளிதில் விளங்கும். வலைக்கும், ஈழப்போராட்டத்தைப் பற்றிய பதிவுகளுக்கும் புதியவர்களுக்காக இந்தக் குறிப்பு.

11 comments:

Anonymous said...

Hindu is well known for Anti Tamils. Check the below link for Hidus real Face.

What's Wrong with The Hindu?
http://www.friendsoftibet.org/save/

said...

விடுதலைப் புலிகள் தமது இயக்கத்தை ஆரம்பித்து முதல்முதலாக களப்பலியான லெப்டினன்ட் கேணல் சங்கர் சத்தியநாதனின் நினைவு நாளன்றே மாவீரர் தினம் 1989 இலிருந்து அனுட்டிக்கப்படுகிறது.

ஈழத்தில் களத்தில் காயமுற்ற சங்கர் தமிழ்நாட்டில் மதுரையில் மருத்துவ மனையொன்றில் பிரபாகரனின் அருகிலேயே உயிர் பிரிந்தார்.

said...

fyi: மாவீரர்கள், Heroes: "(27-11-1982 அன்று மாலை 6.05 மணிக்கு) அந்த இளைஞன் இயக்கத்தில் முதற்களப்பலியாகும் பெருமையை அணைத்துக்கொள்கிறான். (இதே நாள் இதே நேரமே தமிழீழ மாவீரர் நாளாக நினைவு கூரப்பட்டு, மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்படுகிறது.)"

Anonymous said...

It is no news. Yesterday Mr. Muralidhara Reddy scribed a news piece in The Hindu. He spelled Thamilchelvan exactly like the Sinhala government and media do, 'Thamilselvam.' Historically, using 'm' in the place of 'n' in Tamil names is a way of showing ignorance on Sinhala chuvanist part. It is in a way rediculing the tamil names and tamil identity. If Mr. Reddy is not naive, he does not care about tamil identity and pride.

It is not much use in lamenting and complaining about The Hindu. Why can't eelam tamil supporters in Chennai go and protest in front of Triplicane publications in a routine manner to make Chennai, Tamilnadu, India and the globe aware about Mr. Ram's abuses to the professional journalism. None can stop the supporters of eelam tamils in chennai do this to make it big for get attention around the world. It is not the LTTE supporters in Tamilnadu, who are going to do this peaceful and lawabiding protest, but the people, who know what the Sri Lankan government does for the tamil people, children and press in that island is wrong and violates humanrights. Who can stop such peaceful protesters and by what law? Please get organize and do. It is what that could make an effort on The Hindu and its rogue under the monk's cloak. GET ORGANIZE AND PEST THE HINDU PERPETUALLY IN THE PEACEFUL WAY. Do the same to Dinamalar.

said...

//5. சமாதானப்பேச்சுவார்த்தை உதட்டளவில் மட்டுமே: பிரபாகரன் காட்டம்
கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மறைந்த தமிழ்செல்வன் பற்றி கூறுகையில், தமிழீழத்தின் தன்னிகரற்ற தலைமகனை நாம் இழந்து விட்டோம் என்றும் சமாதானப்பேச்சுவார்த்தை என்ற பெயரில் இலங்கை இனப்பிரச்னையில் தலையிடும் சர்வதேசநாடுகள் தங்கள் கருத்துக்களை, செயல்பாடுகளை உதட்டளவில் மட்டுமே கொண்டுள்ளன என சாடினார். சமாதான பேச்சுவார்த்தை என்ற போர்வையில் இலங்கை அரசுேபாருக்கு தயாராகும் போக்கினைசர்வதேச நாடுகள் தடுத்திருந்தால் தமிழ்செல்வனை இழந்திருக்கவேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டார்.//
தினமலர் செய்தி

said...

//இதே இந்து பிள்ளையான் அணி, பொக்கையான் அணி என்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக எந்த அணி தோன்றினாலும் அதனை அரவணைத்துச் செல்லும். //

என். இராமின் நண்பர் டக்ளஸ் தேவானந்தா தெரியுமா?

1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் நாள் சென்னையில் ஒரு சாதாரண தெருச்சண்டையில் தானியங்கித் துப்பாக்கியெடுத்துச் சுட்டு, சண்டைக்குத் தொடர்பில்லாமல் அந்த வழியில் சென்றவரான திருநாவுக்கரசு என்ற அப்பாவியைக் கொன்றவர் இந்த டக்ளஸ் தேவானந்தா. இது தமிழ் நாட்டில் பொது மக்களிடம் போராளி இயக்கங்களைப் பற்றிய பெரும் பயத்தை ஏற்படுத்திய முதல் நிகழ்ச்சி. இதற்கு மறுநாள்தான் எம்.ஜி.ஆர் அரசு தமிழகத்தில் தங்கியிருந்த போராளிகளிடம் இருந்து அத்தனை ஆயுதங்களையும், பாதுகாப்பு கருவிகளையும் பறிக்கச் சொல்லி உத்தரவிட்டார். இரண்டு மாதங்கள் ஜெயிலில் இருந்துவிட்டு டக்ளஸ் ஜாமீனில் வெளியே விடப்பட்டார். அந்த வழக்கு இன்னும் இருக்கிறது என்று அறிகிறேன். அடுத்து 1988 நவம்பர் மாதம் பத்து வயது சிறுவனைக் கடத்தி பணம் பறிக்க முயற்சி செய்ததாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றம் சுமத்தப் பட்டார். 1989 ஜனவரி மாதம் இந்தியாவின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து காவலில் வைக்கப் பட்ட இவர், 1990ல் புலிகளை எதிர்ப்பதற்காக விடுதலை செய்யப் பட்டு இந்தியப் படையினரால் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப் பட்டார்.

முழுவிவரத்துக்கு தெஹெல்க்காவில் வந்த இந்த செய்தியைப் படிக்கவும்.

http://www.tehelka.com/story_main18.asp?filename=Ne070106Militant_SR.asp
அல்லது 1986 நவம்பர் 2 அன்று வந்த இந்துப் பத்திரிகை கிடைத்தால் படியுங்கள். டக்ளஸ் தேவானந்தாவின் வண்டவாளத்தை அக்காலத்தில் என் கண்ணால் படித்தேன்.

EROS – EPRLF – EPRLF (D) – ENDLF – EPDP என்ற இவருடைய பல்லியக்க அரசியல் பயணமும், இந்திய இலங்கை அரசுகளுடன் சேர்ந்து இன்றும் இலங்கை அரசில் அமைச்சராக அங்கம் வகிப்பவர் என்ற உண்மையும், இவர் போராளி இயக்கங்களுக்கும், தமிழர்களுக்கும் துரோகமிழைத்தவர், என்பதைப் புரிந்து கொள்ள உதவும்.

இதே டக்ளஸ் தேவானந்தா 2006 மார்ச் 2 அன்று இந்துப் பத்திரிகை விழாவில் இராமின் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டுள்ள இந்தச் செய்தியைப் படியுங்கள்.

http://www.hindu.com/2006/03/03/stories/2006030312450200.htm

சட்ட ஒழுங்கு, வன்முறை பற்றி இராம்-இராமசாமிகள் கொண்டுள்ள அக்கறையையும், ஈழத்தமிழர் பிரச்னையில் இந்த ஜந்துக்கள் கொண்டுள்ள ஆர்வத்தையும் புரிந்து கொள்ளலாம். இந்த மாதிரி உண்மைகளையெல்லாம் நம் ஊரில் துண்டுப் பிரசுரங்களாக வெளியிட வேண்டும்.

நன்றி – சொ. சங்கரபாண்டி

hahaha said...

//இலங்கை தலைநகர் கொழும்புவில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மறைந்த தமிழ்செல்வன் பற்றி கூறுகையில்,-தினமலர் செய்தி
//
பிரபாகரன் கொழும்புலயா சுத்திக்கிட்டு இருக்காரு??

said...

//பிரபாகரன் கொழும்புலயா சுத்திக்கிட்டு இருக்காரு?? //
That's what i tried to say.

said...

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி சயந்தன், பாபா. பதிவில் மாற்றிவிட முயல்கிறேன்.

சங்கரின் கூற்றை ஆமோதிப்பது போல வநதிருக்கும் இன்றைய செய்தியில் தி இந்து "It alleged that the LTTE had ordered all the government schools closed on Tuesday and the schoolchildren to participate in the “Suicide Bombers day” celebrations in the region." என்று தேவானந்தாவின் "அமைச்சகம்" சொல்வதாகச் சொல்லியிருக்கிறது. இதில் மாவீரர் நாளை எவ்வாறு திரித்திருக்கிறது அல்லது தேவானந்தாவின் திரிப்பாகச் சொல்கிறது என்பதைக் கவனிக்கலாம்.

Anonymous said...

மாவீரர்கள் அனைவருமே இளைஞர்கள். இவர்கள் தங்கள் இளமைக்கனவுகள், குடும்ப உறவுகள் அனைத்தையும் தமிழர்களின் மானம் காக்க உதறியவர்கள்.
2 கோடி மக்கள் இல்லாத இலங்கை அரசு 6 கோடி தமிழர்கள் வாழும் தமிழகத்தை கிண்டல் செய்கிறது. சிதறி வாழும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் ஒரு நாடு வேண்டும் என்பதற்காக தங்கள் இளமைக் கனவுகளை துச்சமாக மதித்து போரில் உயிர் துறந்தவர்கள். அவர்கள் ஏழனத்திற்குரியவர்கள் அல்ல.

புள்ளிராஜா

Anonymous said...

இந்து மாத்திரமல்ல, பல செய்தி ஊடகங்கள் தமிழர் விரோதப் போக்கைத்தான் கடைப்பிடிக்கின்றன. லண்டனில் இருந்து ஒலிபரப்பப்படும் பி.பி.சி. தமிழோசை ஈழத்தமிழ் விவகாரத்தில் இந்துப் பத்திரிகை போன்றே செயற்படுகிறது.