மறைந்த எழுத்தாளர் அசுரனின் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிடும் திட்டம்

சுற்றுச்சூழல் ஆர்வலரும், புதிய தென்றல் இதழ் இணை ஆசிரியரும், மனித உரிமைப் போராளியுமான தி. ஆனந்தராம்குமார் () அசுரன் அவர்கள் அண்மையில் அவரது 38ஆம் வயதில் மறைந்தது அறிந்திருப்பீர்கள். தன்னுடைய இறுதி மூச்சு வரை மக்களுடைய அடிப்படைப் பிரச்னைகளை முன்வைத்து எழுதியும், போராடியும் வந்தார். கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில், நாகர்கோவில் ராஜேந்திரா சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். உடல் நோயால் அவதியுற்ற நிலையிலும் திண்ணை இணைய இதழ், புதிய தென்றல் இதழ்களில் எழுதி வந்தார். மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெறும் பொழுதே புதிய தென்றல் இதழில் இணையாசிரியராக மும்முரமாகப் பணியாற்றினார். பின்பு நோய் முற்றிய நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திண்டுக்கல்லில் இருந்து வெளியாகும் "புதிய கல்வி" என்ற சுற்றுச்சூழல் இதழின் இணை ஆசிரியராக பணியாற்றிய அசுரனுக்குச் சில ஆண்டுகள் முன்புதான் திருமணம் நடந்தது.

அசுரனின் தொண்டு பற்றிய செய்திகளைப் பின்வரும் சுட்டிகளில் படிக்கலாம்.

http://makkal-sattam.blogspot.com/2007/12/blog-post_22.html

http://madippakkam.blogspot.com/2007/12/blog-post_6603.html

http://athirai.blogspot.com/2007/12/blog-post_1945.html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20712277&format=print


அசுரனின் சில எழுத்துக்களைப் பின்வரும் சுட்டிகளில் படிக்கலாம்.

http://www.thinnai.com/?module=archives&op=searchauth&search_string=+அசுரன்

http://www.keetru.com/puthiyathendral/index.php


அசுரனின் தன்னலமற்ற பணிகளை நினைவுகூர்ந்து அவரது வாழ்க்கையைப் போற்றும் வண்ணம் அவரது சிந்தனைகளையும், சிறந்த எழுத்துக்களையும் தொகுத்து நூல் வடிவில் கொண்டு வர விரும்புகிறோம். அசுரனின் செயல்பாட்டின் மீது நம்பிக்கை கொண்ட எத்தனையோ வாசகர்களும், களப்பணியாளர்களும் அந்த நூலை வாங்கிக் கவுரவிப்பார்கள் என்ற முழுநம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அந்நூல் விற்பனையில் வரும் தொகையனைத்தையும், அசுரனது இளம் மகளது எதிர்காலக் கல்விக்காக முதலீடு செய்ய முடிவு செய்துள்ளோம். இத்திட்டத்துக்கு பொருளுதவியளிக்க விரும்பும் நல்ல உள்ளங்கள் பின்வருவோரைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். சிறு உதவிகள் கூட பெரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளப் படும்.

இந்தியா:

எஸ். பி. உதயக்குமார்

தொலைபேசி: 91-4652-240657

drspudayakumar@yahoo.com

அமெரிக்கா:

சொ. சங்கரபாண்டி

தொலைபேசி: (443) 854 -0181

sankarfax@yahoo.com

6 comments:

said...

சுந்தரவடிவேல்,நானும் பங்களிப்புச் செய்ய விரும்புகிறேன்.இப்போது வேலைக்குப் போகிறேன்.இரவு வந்து சங்கரபாண்டியுடன் தொடர்புகொள்வேன்.தகவல்களுக்கு நன்றி.

ஸ்ரீரங்கன்.

said...

Really a good effort.
I will help. I am also from Nagercoil I will contact Mr Udaya kumar to give my contribution.

Thank you.
Izzath
aizzath@hotmail.com

said...

தோழர் அசுரன் நினைவேந்தல் சந்திப்பு வரும் மே முதல் நாளன்று சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

கலந்து கொள்ள விரும்புபவர்கள், ஆலோசனை கூற விரும்புபவர்கள் makkal.sattam@gmail.com என்ற மின்முகவரிக்கோ, 98402 46661 என்ற தொலைபேசி எண்ணுக்கோ தொடர்பு கொள்ளலாம்.

நன்றி

-சுந்தரராஜன்

said...

நிச்சயம் நமது ஆத்மார்த்த தோழனுக்கு நாம் இதை விட வேறு என்ன செய்து விட முடியும்.இது குறித்து நானும் யோசித்தேன் நல்ல விஷயம்.நானும் இதில் என்னை இணைத்துக் கொள்கிறேன்.

said...

தோழர் அசுரன் நினைவேந்தல் சந்திப்பு வரும் மே முதல் தினத்தன்று, சென்னை, தியாகராய நகர், வேங்கட்நாராயணா சாலையில் உள்ள செ.தெ.நாயகம் பள்ளி(திருப்பதி கோவிலின் கிளை எதிரே)யில்
காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், அறிவியலாளர்கள், வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள், மாணவர்கள் என பலதரப்பினரும் கலந்து கொள்ள உள்ளனர்.

சுற்றுச்சூழல் குறித்த தோழர் அசுரனின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக ஒரு அமைப்பு ஏற்படுத்துவது குறித்தும் இந்த அமர்வில் ஆலோசிக்கப்பட உள்ளது.

அனைவரும் வருக.

-சுந்தரராஜன்

said...

வாழ வேண்டிய வயதில் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றேன். அவரின் பதிவுகள் சிந்திக்கத்தக்கவையாக இருக்கும். என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன்.