கழுத்தில் ஒரு கறுப்புக் கயிறு அதில் தொங்கும் ஒரு சின்னப் படிகம். ஏதப்பா என்றேன் மெய்லி கொடுத்தது என்றார். தினமும் பள்ளி முடித்து மெய்லியோடு விளையாடிவிட்டுத்தான் வீட்டுக்குத் திரும்புகின்றார். அன்றைக்குப் பள்ளியில் கொண்டுபோய் விடும்போது மெய்லியின் காரைப் பார்த்துவிட்டுச் சிரித்தபடி மெய்லீ என்று கையசைத்து நின்றார். ஒரு நாள் பள்ளி முடிந்து நான் அழைக்கப் போனபோது "மெய்லி, this is my dad" என்றார். அப்பாவை அறிமுகப்படுத்துமளவுக்கு வளர்ந்துவிட்டதை அப்போது அறிந்தேன். நேற்றைக்குப் பள்ளிக்கூடத்தில் வகுப்பறைப் படம் எடுத்தார்களாம். படத்தில் மெய்லியும் இவரும் அருகருகே நின்றிருந்தார்கள். ஏதோ மகிழ்ச்சியாக இருக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைப் பருவத்தில் மாற்றுப் பால் குழந்தைகளோடு விளையாடுவதும் நட்பாக இருப்பதும் வளர்ந்த பருவத்தில் ஆரோக்கியமான உறவுகளை அமைத்துக்கொள்ள உதவும். மகிழ்வாய் மகனே!
5 comments:
/சின்னஞ்சிறு குழந்தைப் பருவத்தில் மாற்றுப் பால் குழந்தைகளோடு விளையாடுவதும் நட்பாக இருப்பதும் வளர்ந்த பருவத்தில் ஆரோக்கியமான உறவுகளை அமைத்துக்கொள்ள உதவும்./
அவ்வாறு ஆக மாசிலனுக்கு என் வாழ்த்தும் அன்பும்.
இதை
//அவ்வாறு ஆக மாசிலனுக்கு என் வாழ்த்தும் அன்பும்.//
மாசிலனுக்காவது என்று வாசிக்கவும்
மாசிக்கு வாழ்த்துக்கள்.
சாரா
இது போன்ற அண்மை இல்லாமல்தான், நாம் எல்லாவற்றிலும் காமப்பூச்சு பூசி, பலவிதமாக பொருள் கொண்டு குழம்புகிறோம். நட்பில் பால் வேறுபாடு இல்லாதது புரியாமல் போகிறது. மகனுக்கு வாழ்த்துக்கள்.
:)
Post a Comment