பேரறிவாளனை மீட்போம்


"நான் மரணத்திற்கு பயப்படவில்லை ஆனால் நான் நிரபராதி என நிரூபிக்கத்தான் போராடுகிறேன்,நீதி தவறிவிட்டது எனது வழக்கில் என்று நிரூபிக்க போராடுகிறேன்,சாவை விட பல கொடுமைகளை இந்த 21 ஆண்டுகள் சிறைவாழ்க்கையில் அனுபவித்துவிட்டேன்.எனது மரணம் நீதியின் மரணம் மட்டும் அல்ல,தளராது வயதிலும் எனது விடுதலைக்கு போராடும் என் அன்னை ஏமாற்றப்படுவார்கள் என்பதே எனது கவலை" - பேரறிவாளன்

கையொப்பமிடும் சுட்டி:
http://www.change.org/petitions/plea-to-cancel-the-death-sentence-wrongly-given-to-innocent-perarivalan

ராஜீவ் கொலை வழக்கில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனைக் கைதியாக இருபத்தோரு ஆண்டுகள் நீதிக்காக காத்திருக்கும் திரு.பேரறிவாளனின் கருணைமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரின் தாய் அற்புதம் அம்மா அவர்களுடன் ஒரு சந்திப்பு-

http://www.youtube.com/watch?v=A7Hbdt6vWDw

3 comments:

said...

மூவர் உயிர் காக்க மூண்டெழு தமிழகமே

பேரறிவாளன், முருகன், சாந்தன் மரண தண்டனையை இரத்து செய்க!

தமிழக அரசு ஆளுநர் மூலம் தண்டனையை இரத்து செய்ய வேண்டும்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் அறிக்கை

சென்னை, 12.08.2011

இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் நடுவண் சிறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாயமாக சிறைபட்டிருக்கும தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துள்ளார்.பேரறிவாளன் உள்ளிட்ட தோழர்களின் கருணை மனுவை நடுவண் உள்துறை அமைச்சகம் தள்ளுபடி செய்யலாம் என குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை அனுப்பியவுடனேயே, அவசர அவசரமாக கருணை மனுவை தள்ளுபடி செய்துள்ளார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில்.இராசீவ் கொலை வழக்கிற்கு தடாச் சட்டம் பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்த பின்னரும், அதே சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே ஒரே சாட்சியமாகக் கொண்டு இவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இது மிகப்பெரும் முரண்பாடாகும்.இவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய காவல்துறை அதிகாரி தியாகராசன் என்பவர், ஏற்கெனவே கேரளா எர்ணாக்குளத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த போது அருட்சகோதரி அபயா என்பவரது கொலை வழக்கை தற்கொலை வழக்காக மாற்ற முயற்சித்து அதற்காக தண்டனையும் பெற்றவராவார்.இவர் தான் பேரறிவாளன் உள்ளிட்ட தோழர்களைத் துன்புறுத்தி, அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி அதனை நீதிமன்றத்தில் சாட்சியமாகத் தாக்கல் செய்தார். துன்புறுத்திப் பெறப்பட்ட இவ்வொப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே ஒரே சாட்சியமாகக் கருதி உச்சநீதிமன்றம் இவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்தது அநீதியாகும்.இவ்வாறு நீதிக்கு நேர்மாறாக, பிழையாக வழங்கப்பட்ட இத்தண்டனையை இரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களுக்கு உண்டு. இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு எண் 72 குடியரசுத் தலைவருக்கு இதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது. பிரிவு எண் 161 மாநில ஆளுநர்களுக்கு இதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது.அண்மையில் ஆந்திராவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 2 தலித் இளைஞர்களின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்து விட்ட பிறகும், மாநில அரசிடம் எழுத்தாளர் சுவேதாதேவி முறையிட்தன் பேரில், மாநில ஆளுநர் தலையிட்டு அவர்களை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றி யிருக்கின்றனர்.

1960களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர் சி.ஏ.பாலன் என்பவருக்கு குடியரசுத் தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்துவிட்டப் பிறகும், கேரள அரசு தமது ஆளுநரின் மூலம் அவரது தண்டனையை வாழ்நாள் தண்டனையாக குறைத்திருக்கிறது.எனவே, இந்த முன்னுதாரணங்களை பின்பற்றி, மாண்புமிகு தமிழக முதல்வர் செ.செயலலிதா அவர்கள், பேரறிவாள், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களைப் பெற்று, தமிழக ஆளுநர் மூலம் அவர்களது தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இதற்கான அதிகாரத்தை இந்திய அரசமைப்புச் சட்ட விதி 161 வழங்குகின்றது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.


மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னையில் 17.08.2011 அன்று சைதை பனகல் மாளிகை முன்பு த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. உணர்வாளர்களும், மரண தண்டனையை ஒழிக்க விரும்பும் மனித நேயர்களும் இவ்வார்ப்பாட்டங்களில் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி

said...

Brother Perarivaalan Book - An Appeal from the Death Row- Rajiv Murder case - The Truth Speaks.. PLEASE READ IT...

http://www.scribd.com/doc/62183787/An-Appeal-from-the-Death-Row-Rajiv-Gandhi-Murder-Case-The-Truth-Speaks-Perarivaalan

said...

ராசீவ்காந்தி கொலையில் நிரபராதிகளுக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது காங்கிரஸ் அரசு.

19 வயதில் பொய்குற்றம் சாட்டப்பட்டு 20 வருடங்களாய் சிறையில் தூக்குத்தண்டனைக் கைதியாய் பேரறிவாளன், தூக்கில் போடப்பட காத்து இருக்கிறார்.

இவர்களுக்கு தூக்கு தண்டனை அளிப்பது தவறு என முன்னால் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளே பலமுறை சொல்லியும், அரசுக்கு எச்சரித்தும் இருக்கிறார்கள்

கொலைக்கு பயன்பட்ட "பெல்ட் பாம்" செய்வதற்கு உதவினார்கள் என்பதே குற்றச்சாட்டு. “சிபிஐ யால் இறுதிவரை கண்டுப்பிடிக்க முடியாத கேள்விகளுள் ஒன்று, அந்த "பெல்ட் பாம்" ஐ செய்தவர் யார் என்பதே” என்று இந்த வழக்கை விசாரித்த தலைமை புலனாய்வு அதிகாரி திரு, இரகோத்தமன் தான் எழுதிய நூலிலும், பல்வேறு பேட்டிகளிலும் கூறியுள்ளார். ஆக விடைத் தெரியா கேள்விக்கு விடையாக இவர்கள் பலியிடப் படவேண்டுமா ?
பெல்ட் பாமிற்கு" 9V பேட்டரி வாங்கித்தந்தார் என்பதின் மூலமே "பெல்ட் பாம்" ஐ பேரறிவாளன் செய்தார் என்றது அரசு. அதற்கு ஆதாரமாக கொடுக்கப்பட்ட ஒரே கரு பேரறிவாளன் டிப்ளோமா படித்தவர் என்பதே. ஆனால் வழக்கின் எவ்விடத்திலும் 9V பேட்டரி தான் பெல்ட் பாம் வெடிக்கப்பயன் படுத்தப்பட்டது என்பது நிரூபிக்கப் படவில்லை.உண்மையில் பேட்டரியை யாரும் வாங்கவுமில்லை, அதனை யாருக்கும் தரவுமில்லை. 9V பேட்டரி வாங்கினதற்கு ஆதாரம் ஒரு பெட்டி கடைக்காரரின் சாட்சி தான். இந்த சாட்சியை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதி, பிறகு என்ன காரணத்தினாலோ ஏற்றுக்கொண்டுவிட்டார். வாங்காத பேட்டரியை வாங்கினேன் என்று ஒருவரை சொல்லவைப்பது நம் காவல்துறைக்கு எத்தனை சுலபம் என்று சற்றே சிந்தியுங்கள்.பெட்டிக்கடைகாரார் மே 2ம் வாரத்தில் வாங்கியதாக சாட்சியமளித்தார், ஆனால் வாக்குமூலத்தில் பேட்டரி முதல் வாரத்தில் வாங்கியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் ஒப்புதல் வாக்குமூலமே தூக்குத் தண்டனைக்கு காரணம். அந்த வாக்குமூலத்தை துன்புறுத்தி பெற்ற திரு.தியாகராஜன், கேரளா மாநிலத்தில் 1993 ல் நடைபெற்ற அருட்சகோதரி அபயா கொலைவழக்கை "தற்கொலை" என முடிக்க அழுத்தம் கொடுத்தவர். அபயா கொலைவழக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்று நிரூபனமானது. இதன் பிறகு இவர் தண்டிக்கபட்டார். இவர் செய்த பதிவுகளின் அடிப்படையிலேயே இவர்களுக்கு தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது. இது நியாயமா?.தூக்குத் தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப் படும் திட்டமிட்ட படுகொலை என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் திரு.வீ. ஆர். கிருஷ்ணய்யர். செய்த குற்றத்திற்கு வழங்கப் படும் தூக்குத் தண்டனையே திட்டமிட்டப் படுகொலை யெனில், செய்யாத குற்றத்திற்கு வழங்கப் படும் தூக்குத் தண்டனையை என்னவென்று சொல்வது?

20 வருட தனிமைச் சிறையே ஒரு தண்டனை, அதன் பிறகு தூக்கிலிடுவது என்பது இரண்டாவது தண்டனை. நிரபராதிகளுக்கு இரட்டை தண்டனை நீதியாகுமா?

பேரறிவாளன் உள்ளிட்ட அப்பாவி நிரபராதித் தமிழர்களை தூக்கிலிடுவது படுகொலையாகாதா? .. நம் கண்முன்னே நடக்கும் இந்தப் படுகொலையை கண்டிக்க வேண்டாமா?...
(lena kumar to me, vaanmuhil, vbritto )