சாட்சிகளைக் காப்பாற்ற உடனே கையெழுத்துப் போடுங்கள்!

 
இனப்படுகொலையின் கோர முகத்தைக் கண்ணால் கண்ட சாட்சிகளாக இருப்பவர்கள் இந்த மூன்று மருத்துவர்களும். பயங்கரவாதச் சட்டத்தில் அவர்களைத் தடுத்து வைத்திருக்கிறது சிறீலங்கா அரசு. அவர்களது பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களை விடுவிக்குமாறு அம்னெஸ்டி இண்டர்நேஷனல் போன்ற அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. கீழுள்ள பக்கத்திற்குச் சென்று "Take Action Now" என்ற பொத்தானை அழுத்தி இந்த மனுவை அனுப்புங்கள். உங்கள் விபரங்களைப் பதிவு செய்தால் போதும், குறிப்பிட்ட அலுவலர்களுக்கு அந்த இணையத் தளமே அனுப்பிவிடும். மிக்க நன்றி!

PEARL ACTION : http://www.pearlaction.org/action-alerts/2009/aa81.php

5 comments:

said...

அஞ்சல் அனுப்பியாகிவிட்டது. ஆனால் ஊடகங்கள் ஐநாவை விட அதிக சக்தி வாய்ந்த அமைப்புக்ளாக உள்ள நிலையில், இந்த மாதிரியான மனித உரிமை மீறல், போர் குற்றச் செயல்களைப் பற்றிய செய்தியினை ஊடகங்களில் தொடர்ந்து இடம் பெறச் செய்வதும் முக்கியமானது...எவ்விதம் அதனைச் செய்வது?

said...

நன்றி பிரபு.
இயன்றபோதெல்லாம் நடுநிலையோடும், மனசாட்சியோடும், தமிழர்தரப்பு நியாயங்களை முன்வைக்கும் பத்திகள், கட்டுரைகளுக்குச் சென்று நம் கருத்துக்களைத் தெரிவித்தும், அவற்றை மற்ற நண்பர்களுக்கு அனுப்புவதையும் செய்தாலே போதும். அவர்களுக்கு வரும் வருகையாளர்களின் எண்ணிக்கையே அப்பத்திரிகையாளர்களை அவ்விடயத்தை மேலும் எழுதச் செய்யும். உதாரணமாக இந்தப் பத்தி: இங்கு சென்று படித்துப் பதிவிட்டு, மேலும் பலருக்கு அனுப்பலாம்.

We should boycott the callous Sri Lanka regime
http://www.timesonline.co.uk

said...

அஞ்சல் அனுப்பியாகிவிட்டது.

அவசியமான இந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Anonymous said...

அஞ்சல் அனுப்பியாகிவிட்டது.

இந்த விண்ணப்ப இன்னைபை தமிழ்மணத்தின் முதல் பக்கதிலும் இணைப்பு கொடுக்கலாமா
நன்றி

said...

அனுப்பியாகிவிட்டது.

நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளேன்....