"Global War on Terror" முடிவுக்கு வந்தது!

புஷ் அதிகாரத்தினால் பயன்படுத்தப்பட்டு வந்த Global War on Terror என்ற பதம், ஒபாமா அரசாங்கத்தால் நிராகரிக்கப்படுகிறது. இந்த சொற்றொடரைப் பயன்படுத்தித்தான் ஈழத்தில் விடுதலைப் போராட்டத்தை மகிந்த அரசு நசுக்கி, இனவழிப்பை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவைத் தவிர்த்து, பெரும்பாலான நாடுகள் ஈழத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போருக்கு இலங்கை அரசுடன் உடன்படாத நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அமெரிக்க அரசின் இந்த முடிவானது இலங்கை அரசுக்கு மேலும் நெருக்கடியைத் தரும். அமெரிக்கா தனது ஈராக், ஆப்கானிஸ்தான போர் நடவடிக்கைகளை இனி 'Overseas Contingency Operation' என அழைத்துக் கொள்ளும். மகிந்தவின் போருக்கு அமெரிக்காவின் ஆதரவு குறைகிறதெனக் கொள்ளலாம். மேலும், அமெரிக்காவில் தமிழர்களிடையேயும், அமெரிக்கர்களிடையேயும் பெருகி வரும் ஈழம் குறித்த விழிப்புணர்வும், இங்கு நிகழும் தொடர்ந்த போராட்டங்களும், பரப்புரைகளும் அமெரிக்க அரசாங்கத்தின் இலங்கைக்கான கொள்கைகளை மாற்றவும், ஈழத்துக்கான அங்கீகாரத்தை வழங்கவும் வழி செய்யும் எனத் தோன்றுகிறது. நம்புவோம், செயற்படுவோம்!

ஓரிரு நிமிட உழைப்பால் உங்களாலும் ஈழத்துக்கான விடிவை விரைவில் கொண்டுவர முடியும். கீழுள்ள இணைப்புக்குச் சென்று அங்கிருக்கும் மனுக்களில் சில நிமிடங்கள் செலவிட்டுக் கையெழுத்திட்டால் போதும். இத் தளத்தில் புதிய மனுக்கள் அவ்வப்போது சேர்க்கப்படும். நண்பர்களுக்கும் பரிந்துரைக்கவும், மிக்க நன்றி!
மனுக்களுக்கான சுட்டி:
http://www.tamilnational.com/campaign/sendnow.php

4 comments:

said...

//அமெரிக்காவில் தமிழர்களிடையேயும், அமெரிக்கர்களிடையேயும் பெருகி வரும் ஈழம் குறித்த விழிப்புணர்வும், இங்கு நிகழும் தொடர்ந்த போராட்டங்களும், பரப்புரைகளும் அமெரிக்க அரசாங்கத்தின் இலங்கைக்கான கொள்கைகளை மாற்றவும், ஈழத்துக்கான அங்கீகாரத்தை வழங்கவும் வழி செய்யும் எனத் தோன்றுகிறது. நம்புவோம், செயற்படுவோம்!//

நம்புவோம்.ஜார்ஜ் புஷ் ஈராக் சண்டைக்குப் போறப்பவே சொன்னேன்.யோவ்!ஆப்கானிஸ்தானை தனியா பாரு(case by case ன்னு சொல்வாங்களே)ஈராக்கை தனியாப் பாருன்னு.அவர் என்னடான்னா இரண்டையும் மொத்தமா கூறு கட்டி குளோபல் வார் ஆன் டெரர்ன்னு விற்க ஆரம்பித்து விட்டார்.

said...

நாம் தமிழர்கள்!
எப்போதும் தமிழர்களாய் இருப்போம்!
சொட்டை மாதிரி பல்டி அடிக்கவேண்டாம்!

said...

தகவலுக்கு நன்றி....

//இங்கு நிகழும் தொடர்ந்த போராட்டங்களும், பரப்புரைகளும் அமெரிக்க அரசாங்கத்தின் இலங்கைக்கான கொள்கைகளை மாற்றவும், ஈழத்துக்கான அங்கீகாரத்தை வழங்கவும் வழி செய்யும் எனத் தோன்றுகிறது. நம்புவோம், செயற்படுவோம்!//

நம்புவோம்..... :)

Anonymous said...

அன்பர்கள் அனைவருக்கும் ஓர் அன்பான வேண்டுகோள், "இனிமேல் கருணாநிதியை குறிப்பிடும் போது 'தமிழினத் துரோகி' கருணாநிதி என்ற அடைமொழி இட்டே குறிப்பிடவும். நன்றி!. வணக்கம்.
இப்படிக்கு,
க.முத்தையா.