திருமூலரைப் பற்றி அமெரிக்கர்களிடம் பேசியபோது

TED உரைகளை நான் பெரிதும் விரும்பிப் பார்ப்பேன். நான் வசிக்கும் ஊரிலேயே TEDx நிகழ்ச்சி நடந்து வருவதை அறிந்தபோதும், நண்பர்கள் பேச விண்ணப்பிக்குமாறு கூறியபோதும் சற்றே தயக்கமிருந்தது. பிறகு ஒருவாறு இந்த ஆண்டு நிகழ்வுக்கு விண்ணப்பித்தேன். 2014 அக்டோபர் தொடங்கி, 2015 ஏப்ரலில் உரையாற்றிய நாள் வரை அது ஒரு நீண்ட பயணம்.  காணொளி சில நாட்களுக்கு முன் வெளிவந்த பிறகுதான் பயணம் மேலும் தொடர்கிறதை அறிகிறேன். திருமந்திரத்தைக் குறித்த எனது ஆராய்ச்சியினைப் பற்றிப் பேசக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பைப் போற்றுகிறேன்.    

என்ன பேசினேன் என்பதை இங்கே காணலாம்.

என் வாழ்வெனும் ஓடத்தைச் செலுத்துவது தமிழே என்று உணர்கிறேன். காரணம், இயல்பாகவே அதன் ஆழத்தின் மேலிருக்கும் காதல். கிணற்றுக்குள் நீந்துகையில் மெள்ள உள்ளே மூழ்கி ஆழம் பார்க்க முயன்று, கொஞ்சம் உள்ளே அமிழ்ந்ததும் மூச்சு முட்ட மேலெழும்பும் அனுபவம். தமிழில் செறிந்திருக்கும் அறிவியல் அறிவை அறிய இப் பிறவி போதாது. தொடர்வோம்!
 

12 comments:

said...

how to learn this technique ( thirumular pranayama)

said...

பேச்சு மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. மனமார்ந்த பாராட்டுக்களும், நல்வாழ்த்துக்களும்.

பலநூறு ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ”திருமூலர்” என்ற தமிழ் முனிவரின் சிந்தனைகள் இந்நவீன உலகுக்கு அவசியமாவதை அறிவியல் சோதனைகள் மூலம் உறுதிப்படுயிருக்கிறீர்கள். அண்மைக்காலங்களில் இதுபோன்ற ஆய்வுகளின் தேவைகள் மிகுந்திருக்கிறது.

தொடர்ந்து இது போன்ற நல்லாய்வுகளை நீங்கள் நிகழ்த்தி, தொன்மைத்தமிழரின் ஆழ்ந்த சித்த மருத்துவத்தின் பலன்களை மிகப்பரவலாக்கி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

”தமிழரென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” - என்ற ஊக்கமிகு சொற்களை உண்மைப்படுத்தியமைக்கு உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

said...

என் வாழ்வெனும் ஓடத்தைச் செலுத்துவது தமிழே என்று உணர்கிறேன். ||

இத நாங்க ரொம்பக் காலமா சொல்லிகிட்டு இருந்தோம்ல.. :)

said...

மிக அற்புதமான எளிமையான பேச்சு. வாழ்த்துகள். கறம்பக்குடி முதல் இன்னமும் தங்களின் இயல்பான வாழ்க்கை குணாதிசியங்கள் மாறவில்லை என்பதும் தங்களின் வெற்றி இன்னமும் பல இடங்களில் பரவ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

said...

நுனிப்புல் மேய்வதைத் தவிர வேறொன்றும் அறியா நான், எப்படிப்பட்ட நண்பர்களுடன் உரையாடி வந்திருக்கிறேன் என்பதை அறியும் பொழுது பெருமையாகவும் இருக்கிறது...கொஞ்சம் சங்கடமாகவும் இருக்கிறது.

said...

Mak N,
Please see the link where I have showed some of the Pranayama techniques. At the beginning it may be better if you could learn from someone personally to get to know finer details.

http://academicdepartments.musc.edu/pr/newscenter/2014/yoga-breathing.html#.VWs9FqZTEgU

Some of these techniques were published in our recent manuscripts, as well. Please see:
http://journals.cambridge.org/action/displayAbstract;jsessionid=9CACF9CBCCD6347179106683086E9B58.journals?aid=9462134&fileId=S1041610214001616
http://www.hindawi.com/journals/ecam/2015/376029/

said...

அரசு அண்ணன்,
தங்கள் கனிவான சொற்களுக்கும், ஊக்கத்திற்கும் நன்றி பல!

said...

அறிவு, உண்மை! ஒவ்வொரு முறை உணரும்போது புத்தொளி பிறக்கிறது. நன்றி!

said...

நன்றி ஜோதிஜி!வாழ்வில் எவ்வளவோ மாறிக்கொண்டே இருந்தாலும் சில பாங்குகள் மாறுவதேயில்லை; அவற்றுள் ஒன்று மண்ணின் குணம். நன்றி!

said...

பிரபு, நிச்சயம் சொல்வேன், நான் மேய்வதும் நுனிப்புல்தான்! இன்னும் போக வேண்டிய தொலைவு எவ்வளவோ. முயல்வோம், வெல்வோம். நன்றி!

said...

வணக்கம் சுந்தர்,
அருமை. எடுத்துக் கொண்ட பொருளை மிகவும் சுவையாகவும், எளிமையாகவும், அனைவரும் விளங்கும் வண்ணம் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

நான் அறிந்திராத சங்கதிகளை உங்கள் உரையின் மூலம் அறிந்து கொண்டேன்.
செல்வம் கொழித்த கலாச்சாரம், மொழியைச் சார்ந்தவன் என்பதில் பெருமிதமாக இருக்கிறது.

அதேவேளை, எம் முன்னோர்கள் சொல்லிவைத்த இச் சங்கதிகளை படிக்காமல், அறியாமல் இருந்திருக்கிறன் என வேதனையாகவும் உள்ளது.

இன்னும் தொடருங்கள்.
மிக்க நன்றி.

said...

வணக்கம் நண்பரே தமிழில் தொடங்கி தமிழில் முடித்து வைத்தது அருமை நண்பரே வாழ்த்துகள்.
- கில்லர்ஜி