TED உரைகளை நான் பெரிதும் விரும்பிப் பார்ப்பேன். நான் வசிக்கும் ஊரிலேயே TEDx நிகழ்ச்சி நடந்து வருவதை அறிந்தபோதும், நண்பர்கள் பேச விண்ணப்பிக்குமாறு கூறியபோதும் சற்றே தயக்கமிருந்தது. பிறகு ஒருவாறு இந்த ஆண்டு நிகழ்வுக்கு விண்ணப்பித்தேன். 2014 அக்டோபர் தொடங்கி, 2015 ஏப்ரலில் உரையாற்றிய நாள் வரை அது ஒரு நீண்ட பயணம். காணொளி சில நாட்களுக்கு முன் வெளிவந்த பிறகுதான் பயணம் மேலும் தொடர்கிறதை அறிகிறேன். திருமந்திரத்தைக் குறித்த எனது ஆராய்ச்சியினைப் பற்றிப் பேசக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பைப் போற்றுகிறேன்.
என்ன பேசினேன் என்பதை இங்கே காணலாம்.
என் வாழ்வெனும் ஓடத்தைச் செலுத்துவது தமிழே என்று உணர்கிறேன். காரணம், இயல்பாகவே அதன் ஆழத்தின் மேலிருக்கும் காதல். கிணற்றுக்குள் நீந்துகையில் மெள்ள உள்ளே மூழ்கி ஆழம் பார்க்க முயன்று, கொஞ்சம் உள்ளே அமிழ்ந்ததும் மூச்சு முட்ட மேலெழும்பும் அனுபவம். தமிழில் செறிந்திருக்கும் அறிவியல் அறிவை அறிய இப் பிறவி போதாது. தொடர்வோம்!