சிலம்பம் ஜோதி கண்ணன்



சிறிய வயதில் சில வாரங்கள் அறிமுகம் பெற்ற சிலம்பத்தை மீண்டும் ஒரு முறை தொட்டுப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. பேரவையில் திருவிழாவுக்கு வந்திருந்த ஆசான் ஜோதி கண்ணன் அவர்கள் எங்கள் ஊருக்கு வந்திருக்கிறார்கள். ஒரு வாரம் அவர்களோடு இருக்கும் வாய்ப்பு எனக்கும் எங்கள் ஊர் நண்பர்களுக்கும் கிடைத்திருக்கிறது.

சிலம்பம் என்ற அரிய கலையின் பெருமையை இன்றளவும் காத்து வருபவர்களில் இவர் முக்கியமானவர். இளைஞராயிருந்தபோதும் முதிர்ச்சியடைந்த கலைஞர் இவர். மிகுந்த நம்பிக்கையுடன் பெருஞ்சாதனைகளை நிகழ்த்தும் ஆர்வத்தோடு இயங்கும் இவரைப் பார்க்கையில் நமக்கும் வேகம் பொங்குகிறது. இவரைப் போன்றவர்களை அமெரிக்க மண்ணுக்கு அறிமுகப்படுத்திய பேரவைக்கு நன்றி!