சமூக உணர்வுள்ள உலகத் தமிழர்களின் மனங்களெல்லாம் சொல்லவொணாத் துயரிலும், ஆற்றாமையிலும் வெம்பி வாடுகின்றன. தமது பூர்விக நிலத்திலிருந்து தமிழினத்தைத் துடைத்தழிக்கும் பாதகச் செயலை இலங்கை அரசாங்கம் செய்யவும், அதற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு இந்தியாவும், இந்த அநீதியைக் கண்டும் காணாமல் இருக்கும் உலக நாடுகளும் தமிழர்களைக் காயப்படுத்துகின்றன. முருகதாசன் என்ற இளைஞன் இன்று ஐ.நா சபைக்கு முன்னே தன்னை எரித்துக் கொண்டு உலகின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறான். சுரணையற்ற சமூகம் இனியேனும் விழித்துக் கொள்ளுமா? இல்லையென்றால் அதனை உலுக்கியெடுக்கவேண்டிய கடமை நமக்கிருக்கிறது. சமநீதியையும், சுயமரியாதையையும் விரும்பும் எந்தவொரு மனிதனும் செய்யவேண்டிய காரியத்தைத்தான் தமிழீழ மக்கள் செய்தார்கள். அரசியல் அநீதிக்கெதிராகச் சுய நிர்ணய உரிமையைக் கேட்டுத்தான் அவர்கள் போராடுகிறார்கள். அதற்கான தண்டனை? அந்த இனமே அழிக்கப்பட வேண்டும் என்ற அரச பயங்கரவாதமா? இதற்கு விடிவு காண உங்களால் உதவ முடியும்.
உலகெங்கும் ஜனநாயகத்தைத் தூக்கி நிறுத்தப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவின் குடிமகன்தான் கோத்தபாய ராஜபக்ச என்ற இலங்கை பயங்கரவாத அரசின் பாதுகாப்புச் செயலாளர். அந்த பயங்கரவாதத்தை நடைமுறைப் படுத்துவது அமெரிக்காவில் நிரந்தர வசிப்புரிமை பெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகா. இவர்கள் இருவர் மீதும், ஒரு குற்றப் பத்திரிகையை, அமெரிக்கத் தலைமை நீதிபதியிடம் "இனப்படுகொலைக்கெதிரான தமிழர்கள்"(Tamils Against Genocide, TAG) என்ற அமைப்பு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை உடனடியாக எடுத்துக் கொள்ளுமாறு தலைமை நீதிபதியை, இந்த அமைப்பின் வழக்கறிஞரும், அமெரிக்காவின் புகழ்பெற்ற வழக்கறிஞருமான புரூஸ் பெயின் கேட்டுக் கொண்டுள்ளார்.
நம்மில் எத்தனையோ பேர் இந்தப் போராட்டத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறோம். முத்துக்குமார் தன்னையே எரித்துக் கொண்டபோதும், அதன் பின்னர் நிகழ்ந்த சுயஎரிப்புக்களின்போதும் அவை நேராமலிருக்க நாம் கடமையாற்றுவது அவசியம் என்ற உணர்வு எல்லோருக்குள்ளும் உந்துவதை உணரமுடிகிறது. நமக்கொரு வாய்ப்பு, மேற்கண்ட இன அழிப்பு வழக்கை நடத்துவதற்கு நிதி உதவி செய்வது. உங்களால் முடிந்த எந்தத் தொகையாக இருந்தாலும் தயவு செய்து கொடுங்கள். நீதிக்கான குரலை பலப்படுத்துங்கள். உங்களுக்குள்ளே இருக்கும் மன சாட்சிக்காகவும், விடுதலைக்கான ஏக்கத்துக்காகவும், தமிழினத்தின் விடியலுக்காகவும் கொடுங்கள். இந்தச் சிறிய கடமையையாவது செய்து போராட்டத்திற்கான நம் பங்கைச் செலுத்துவோம். கொடுப்பது சுலபம், ஒரு சில நிமிடங்கள் போதும். தயவுசெய்து இதனை நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் பரப்புங்கள். பாஸ்டனில் ஒரு சின்னஞ்சிறு பிள்ளை 11 நாட்களாகச் சாப்பிடாமல் கிடக்கிறாள். அவளோடு சேர்ந்து ஒரு வேளை சோற்றையாவது துறந்து அவளுக்குத் துணையிருப்போம். உங்களுக்கு முடிந்த எதையாவது செய்துகொண்டேயிருங்கள். துவண்டுபோகாதீர்கள். வெல்வோம், நம்பிக்கை கொள்ளுங்கள்!
தமிழினத்துக்கு நீங்கள் செய்ய வேண்டிய காரியம் ஒன்று !
Labels: Donate, Fonsekha, Indictment, Rajapaksa, State terrorism, Tamil genocide, ஈழம்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
Not sure what to say. I lost words.
-kannan from NC
தகவலுக்கு நன்றி...
PEARL அமைப்பின் வலைத்தளத்தை, வலைப்பக்கங்ளில் இணைக்கும் Gadget வடிவில் யாரேனும் வெளியிட்டுள்ளனரா? அதன் மூலம் இன்னும் நிறைய இணையதளவாசிகளை சென்றடையலாமே?
தகவல் தெரியத் தந்தமைக்கு நன்றி. பெரும் செயலுக்கு சிறு தொகை அனுப்பியிருக்கிறேன்.
மிக மிக நல்ல விஷயம் அண்ணா!
இதோ செய்கிறேன்..!
தகவல் தெரியத் தந்தமைக்கு நன்றி.
Here is the donation page for TamilsAgainstGenocide work to charge Rajapaksa & Fonseka for genocide and war crimes.
https://www.tamilsagainstgenocide.org
and click Donate.
nanRi
a TAG supporter, USA
Houstanil Baylor மருத்துவ கல்லூரி மாணவன் அகிலனும் சாப்பிடாமல் போராடுகிறான். அவர்களை பற்றிய முழு விவரங்களுக்கு கீழ் கண்ட இணைய தளத்தில் காணவும்.
http://www.pearlaction.org/
நன்றி
அருண்
உருக்கமாக இருக்கிறது.. என்னைப்போல இந்த மக்கள் விழிக்க குமுறும் உங்களை என் சகோதரராக எண்ண தோன்றுகிறது..
Post a Comment