அதிபர் ஒபாமாவுக்கு இன்றைக்கிருக்கும் பிரச்சினைகள் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி, மக்களைப் பீடித்துவரும் நோய்கள், தொய்ந்துபோகும் அமெரிக்க மனோதிடம் இன்ன மாதிரி நிறைய. இவை அமெரிக்காவுக்கு மட்டுமில்லை, உலகநாடுகள் பலவற்றுக்குமான பிரச்சினைகளாகிவிட்டன. இவற்றுக்கெல்லாம் சுலபமான உடனடி மாற்றுக்கள் எதுவும் ஒபாமாவிடமோ அல்லது மற்ற தலைவர்களிடமோ கைவசமில்லை. ஆனால், உலகெங்கும் பரவிக் கிடக்கும் எழுபது மில்லியன் தமிழர்களிடமும், அவர்களது மூதாதையர்களின் ஞானத் திரட்டிலும் அமெரிக்காவையும், உலகையும் மீட்டெடுக்கும் அற்புதங்கள் மறைந்து கிடக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியுமா?
உலகெங்கும் உள்ள தமிழர்களின் மனங்களில் இன்றைக்கு ரணமாகிக் கிடப்பது ஈழத் தமிழரின் இன்றைய நிலை . தமிழறிவுள்ள அத்தனை மக்களின் மனமும், வாக்கும், செயலும் ஈழத்தின் விடுதலைச் சுற்றியே பின்னிக் கிடக்கின்றன. எத்தனையோ மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொறிஞர்கள், கலைஞர்கள், மொழியார்வலர்கள், சமூகப் போராளிகள் இன்னும் இன்னும் எத்தனையோ விற்பன்னர்கள், திறமைசாலிகள், உயர்கல்வி பெற்றவர்களின் நேரமெல்லாம் தம்மினத்தின் விடுதலையைச் சுற்றியே சுழன்றுகொண்டிருக்கின்றது. மொத்தமாகப் பார்த்தால் இது ஒரு பெரும் சக்தி விரயம். அமெரிக்காவுக்கும், மனித இனத்துக்கும் ஒரு பேரிழப்பு. தமிழ் என்ற மரபு தனக்குள்ளே எண்ணற்ற தத்துவங்களையும், நோய்தீர்க்கும் மருத்துவ அறிவையும், உலகை உய்விக்கும் வாழ்வியல் முறைகளையும் கொண்டிருக்கிறது. இவற்றை அள்ளித் தரவும், பிற இனங்களுக்கும் நாடுகளுக்கும் பரப்பவும் தயாராக இருப்பவர்களே மேலே சொன்ன அத்தனை பேரும். ஆனால் இவர்களுக்கோ இன்றைய நிலையில் தம் இனத்தை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டிய கட்டாயம். அவர்களது திறமைகளையும், நேரத்தையும் வீணடிக்காமல் உலகுக்குக் கொண்டு சேர்க்க வேண்டுமானால் அவர்களுக்கு விடுதலை அவசியம்.
ஈழ விடுதலை கிடைத்தால் தமிழர்களின் மன வலிமையும், சமூக வலிமையும் கூடும். அவர்களது தொன்மையான இலக்கியங்களும், வாழ்முறை அறிவும் அவர்களால் மீட்டெடுக்கப்படும். இன்றைய சமூகவியலாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களைத் தமிழ் தன்னுள்ளே வைத்திருக்கிறது. இன்றைய நோய்களுக்குச் சிகிச்சை முறைகளைத் தமிழர்களின் மருத்துவ முறை வைத்திருக்கிறது. சித்தர்களின் புதையல்களுக்குள்ளே இன்றைய அனைத்து சமூக, உடல் நோய்களுக்கும் மருந்தைத் தேடிக் கொடுக்கும் பெரும்பணியை ஆற்ற தமிழ்ச் சமூகம் தயாராக இருக்கிறது. தமிழகத்திலும், ஈழத்திலும் இருக்கும் நோய்தீர்க்கும் மூலிகை வளங்களை உலகில் வேறெங்கும் காணவியலாது. தமிழர்களின் உடற்பயிற்சி முறைகளும், யோக முறைகளும் சொல்லற்கரிய ஆற்றலை மனிதர்களுக்குத் தரக்கூடியவை. அவற்றைத் தமிழர்களால் அமெரிக்காவுக்கும் உலகுக்கும் அள்ளித் தர முடியும்.
ஆனால் அவர்களை இன்று தடுத்து நிற்பது, சிந்தையைச் சிதைத்துக் கொண்டிருப்பது, செல்வங்களை அழித்துக் கொண்டிருப்பது எது? ஈழத்தின் இன்றைய அடிமை நிலை. தமிழரின் இன்றைய துயர்நிலையில் கையறுந்து இருக்கின்றது மொத்தத் தமிழ்ச் சமூகமும். நித்தம் நித்தம் கொல்லப்படும் தமிழர்களின் அவல நிலையால் தமிழர்கள் ஒவ்வொருவரும் புழுங்கித் துடிக்கிறோம். ஒரு திறனுள்ள சமூகத்தின் விடுதலையை முன்னெடுப்பதன் மூலம், அமெரிக்கா தனது சுய மேம்பாட்டுக்கான கதவுகளைத் திறந்துகொள்ள வேண்டும். அமெரிக்கா உடனடியாக, இந்த எழுபது மில்லியன் மக்களின் அறிவையும், உடலூக்கத்தையும், நில வளத்தையும் காப்பாற்ற வேண்டும். தமிழர்களிடம் உலகம் எதையும் கேட்க வேண்டியதே இல்லை. கேளாது வாரி வழங்கும் மேன்மையினர் அவர்கள். ஈத்துவக்கும் இன்பமே இன்பம் என்றுதான் அவர்களது மரபு அவர்களுக்குக் கற்றுத் தந்திருக்கிறது.
எங்களைக் காப்பாற்றுங்கள், எங்களது விடுதலைக்கு வழியினைக் காட்டுங்கள், உங்களுக்கு நாங்கள் எல்லாவற்றியும் அள்ளித் தருகிறோம் என்றுதான் தமிழர்கள் சொல்கிறார்கள். அமெரிக்காவினைப் போலவே உலகின் மற்ற நாடுகளும் எங்கள் கருவூலத்தினைப் பயன்படுத்தலாம். எனவே அதிபர் ஒபாமா விரைந்து செய்ய வேண்டியது தமிழீழத்தை விடுதலையடையச் செய்வது. தமிழின விடுதலை உலகின் மாற்றத்துக்கோர் திறவுகோல். அதன் மூலம் அமெரிக்காவுக்கான விடியலையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். மாற்றங்களைக் கொண்டு வருவேன் என்று வந்திருக்கும் ஒபாமா, தமிழர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலம் உலகையே மாற்றும் அற்புத மாற்றத்தை நிகழ்த்துவாரா?
உலகத்தோர் இன்ப நிலை எய்தும் நன்முறையைத் தமிழர்கள் உலகிற்கு அளிப்பர்! ஆமாம்! தமிழர்கள் உலகிற்கு அளிப்பர்!
ஈழ விடுதலை அமெரிக்காவையும் காப்பாற்றும்
Labels: Tamils can save America, அமெரிக்கா, ஈழ விடுதலை, ஒபாமா
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
ஆம் அண்ணா...நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி !
எத்தனை கோடி தமிழர்களின் உழைப்பும் நேரமும் விரயமாகிறது. ஈழம் கிடைத்துவிட்டால்... எவ்வளவு நன்றாக இருக்கும்?
:(
நீங்க சொல்வது சரி. ஒபாமாவுக்கு நம்ம தலைவர் பிரபாகரனின் அறிவுரை தேவை. நம்ம தலைவர் பிரபாகரனின் சொல் கேட்டு ஒபாமா நடப்பாரானால் அது தான் உலக விடிவு.
ஒரு மாதிரியா இருந்தாலும், கவணிக்க வேண்டிய விடயம். கோடான கோடி மக்களின் ஆற்றல் விரயமாகின்றது....... கவனிக்கட்டும் உலகம்!
நன்றி சுரேகா!
அனானி, எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றுதான் எங்கள் தமிழ் சொல்லித் தருகிறது. எதை யார் சொன்னாலும் அறிவு கேட்டுக் கொள்ளும்!
இப்படிப் பயனில்சொல் பாராட்டி மக்கட் பதடியாகத் திரிவதை விடுத்து, உங்களது நேரத்தை வேறு ஏதாவது எழுதி/செய்து உருப்படியாகச் செலவழிக்கலாமே!
தமிழினத்தைப் பற்றிப் பேசும்போது பிரபாகரனைப் பற்றிப் பேச வைத்திருப்பதுதான் புலிகளுக்கு அரசியல் ரீதியாகக் கிடைத்திருக்கும் வெற்றி. அதை ஈட்டிக் கொடுத்திருப்பதில் உங்களுக்கும் பங்குண்டு. நன்றி!
i hope you are not making fun of Tamils :)
//i hope you are not making fun of Tamils :)//
Vethuvettu,
Definitely not! I am serious. Just analyze how many Tamils are here in the USA contributing to its economy in various fields including medicine, research, IT, engineering, business and so on. Similarly if you take other countries like Canada, a large chunk of the abovesaid sectors are served by Tamils. The only thing is that we have not yet realized our strengths. We have been constantly made to think that our strength is just a joke! Even if someone's house is on fire, we will arouse our sadistic self and make fun! Thats not going to help in long run. Lets wake up and realize our strength! We ARE and will continue to be giving to everyone in the world!
நீங்கள் எழுதியதை சில வெததுவெடடுக்களும் அனானிகளும் நக்கல் அடித்துள்ளார்கள்.விட்டுத்தள்ளுங்கள்.
நீங்கள் சொல்வது உண்மைதான்.எமது தமிழ் இனம் உலக்குக்குக் கொடுப்பதற்கு எவ்வளவோ செல்வங்களை வைத்துள்ளது.
பல அரிய பண்டைய விஷயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள தமிழ் இனம் இன்று மிகவும் சோதனையான கால கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு உள்ளது.
எமது சில பழமொழிகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சொல்லபட்டவை,ஆனால் இன்றைய உலகுக்கு மிகவும் பொருத்தமானவை.
இந்தப் பழமொழிகள் தமிழ் இனத்தின் பரந்த மனப்பான்மையையும் காட்டுகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
global village,globalisation
எம்மதமும் சம்மதம்
secularism
மக்கள் குரலே மகேசன் குரல்
democracy
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
free trade ,free movement of people
இப்படி சொல்லி சந்தோசபடுகிறீர்களா அல்லது இலங்கை தமிழர்களை இன்றைய நிலையை சுட்டிகாட்டி நக்கல் அடிக்கிறீர்களா என்று தெரியவில்லை.
Anonymous Anonymous said...
"இப்படி சொல்லி சந்தோசபடுகிறீர்களா அல்லது இலங்கை தமிழர்களை இன்றைய நிலையை சுட்டிகாட்டி நக்கல் அடிக்கிறீர்களா என்று தெரியவில்லை."
You obviously don't know sundar. He is not.
"தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு, பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம்" அடிமைப்பட்டிருந்த காலத்தில் ஒருவன் "எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும்" என்றான். அதை நக்கலடிப்பதாக யாரும் நினைக்கவில்லை. அதிலிருந்து வலிமை பெற்றார்கள். அதையேதான் அந்த நூற்றாண்டில் விவேகானந்தரும் சொன்னார். அதையும் யாரும் விளையாட்டாய் நினைக்கவில்லை. தமிழர்கள் தம்மீது நம்பிக்கை கொள்ள வேண்டிய தருணம் இது. இப்போது வலிமை அவசியம். வலிமை வலிமையென்று பாடுவோம், என்றும் வாழும் சுடர்க் குலத்தை நாடுவோம்!
Post a Comment