புதினத்தில் இன்று கண்ட ஒரு செய்தியில், கலைஞர் பேசும்போது "ஒரு இனமே, பக்கத்தில் இலங்கைத் தீவில் அழிக்கப்படுகிறது. எந்த இனம்? அங்கே ஆண்ட இனம். எந்த இனம்? இராஜ இராஜ சோழனால் படையெடுக்கப்பட்டு, வெற்றிக்கொடி பறக்க பரிபாலனம் செய்யப்பட்ட அந்த நாட்டில், இன்று அவனது இனம் அழிந்து கொண்டிருக்கின்ற அந்தக் காட்சியை காண்கின்றோம், செய்திகளைக் கேள்விப்படுகின்றோம்." என்று கூறியதாக இருக்கிறது.
அப்படியென்றால் ராஜராஜ சோழனின் படையெடுப்புக்கு முன் அங்கிருந்தது யார் என்பதை சிங்களவர்கள் என்று நம்மை ஊகிக்குமாறு விடுகிறார். அப்படியானால் சிங்களவர்கள் அங்கு ஆதிகுடிகள் என்றாகும். ஈழம் தமிழர்களின் ஆதி நிலம் என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முட்பட்ட தமிழர் நாகரிகம் தொடர்பான சான்றுகளைக் கண்டெடுத்திருக்கிறது ஈழம். இந்தியாவின் வடகிழக்கிலிருந்து தமிழர்களுக்கு மிகவும் பிந்தைய காலத்தில் புத்த மதத்தைப் பரப்புதலோடு குடியேறியவர்கள் சிங்களவர்கள் என்கிறது வரலாறு. நிலை அப்படியிருக்க கலைஞரின் கூற்று சிங்களவர்கள் சொல்லும் கதைகளை ஒத்தபடி இருக்கிறது. இது ஈழத்தமிழர்களின் நில உரிமையைப் பறித்து அவர்களது தொன்மையை வெறும் ஆயிரமாண்டுகளுக்குள் முடக்கப் பார்க்கிறது!
5 comments:
குமுதம் ரிப்போட்டர் தொடர்ந்து வாசிக்கிறாரோ என்னமோ?
சுந்தரவடிவேல் அண்ணா,
கலைஞர் மட்டுமில்ல, இங்க எங்கட "விசுக்கோத்துகள்" சிலதுகளும் இப்படித்தான் உளறிக்கொண்டு திரியுதுகள். நான் நினைக்கிறன் "இளம்புயல்" எண்டு ஒரு "வெங்காய" படத்தை இயக்கின "புலம்"பல் தமிழர் "கி.செ. துரை" பாடல் வெளியீட்டு விழாவில உளறினத கேட்டுத்தான் கலைஞரும் உதைச் சொன்னாரோ தெரியல.
சயந்தன்ர வலைப்பதிவில உந்தக் காட்சி இருக்கணும் பாருங்கோ.
http://en.wikipedia.org/wiki/Eelam_tamils
தமிழின தலைவருக்கே இவ்வளவு தான் தெரியும்ன்னா மற்றவர்கள் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு போய்யுட்டு என்று சொன்னா ஏன் அவர்களை குறை கூற வேண்டும் :(
மினிமம் 2 B.C என்பது சோழர்களத்துக்கு சுமார் ஆயிரம் வருடம் முந்தயது! எது உண்மை???
அங்கே ஆண்ட இனம். எந்த இனம்?
தமிழினம்
இராஜ இராஜ சோழனால் படையெடுக்கப்பட்டு, வெற்றிக்கொடி பறக்க பரிபாலனம் செய்யப்பட்ட அந்த நாட்டில், இன்று அவனது இனம் அழிந்து கொண்டிருக்கின்ற ....
இதில் பிழையிருப்பதாகக் கொள்ளத்தேவையில்லை. ஒரு காலக்கட்டத்தில் இராஜ இராஜ சோழனால் ஆளப்பட்ட இனம் தான் தமிழினம்.
அதனால் இன்றும் தமிழீழத்திற்கு புலி கொடி. அது இராஜ இராஜ சோழனின் கொடி.
ஈழத்தமிழர்களுக்கும் தமிழீழத்தமிழர்களுக்கும் இடையில் காணப்படும் கலாச்சார, மொழி, எழுத்து, போன்றவற்றின் ஒருமைப்பாடும் அதன் வழி வந்ததே.
Post a Comment