அமெரிக்காவில் பிள்ளையாரைக் கரைக்க முடியுமா?


"சீதக்களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பலவிசை பாட..."
நான் மனப்பாடம் செய்த முதல் பெரிய பாடல் என்றால் அது ஒளவையார் எழுதியதாகச் சொல்லப்படும் இந்த விநாயகர் அகவலாகத்தான் இருக்கவேண்டும். எனக்குப் பிடித்த பாடல். ஊரில் ஒரு குளம் உண்டு. பங்களா குளம், வங்களா குளம் என்ற பெயர்களில் அழைக்கப்படும். பஸ்டாண்டு பக்கத்துக்கு வரும் அத்தனை பேருக்கும் பலதுக்கும் உதவும். அக்குளத்தின் மேலக்கரையில் எழுந்தருளியிருந்தார் எங்களூர் பிள்ளையார். சித்தப்பாவுடன் வெள்ளிக்கிழமை மாலைகளில் பாடிய அந்தப் பாடலில் ஆன்மீகத்தோடு மருத்துவக் குறிப்புகளும் கலந்து கிடப்பதாக எனக்குத் தோன்றும். (மூலாதாரத்து மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்து, என்பதை stem cellஉடன் ஒப்பிட்டுக் கொண்டேயிருக்கிறேன்!)  தனியே திரியும் பொழுதுகளில் மனதின் மூலையிலிருந்து பலவாண்டுகளுக்கு முன்னே புதைத்துப் போட்டிருந்த வரிகள் மெல்ல மேலெழுந்து வந்து புதிய அர்த்தங்களைச் சொல்லும். இந்த அழகுக்காகவே சில பாடல்களை மனப்பாடம் செய்து வைத்துக்கொள்வது நல்லது. இளமையில் கல். திருமந்திரத்தின் பாடல்களை இப்படி அசை போடுவது இன்பம் தருவது. (நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை என்று திருமூலர் சொல்லும் நந்தி, சிவபெருமானா, இவரும் மருத்துவப் பாடல்களில் சொல்லப்படும் நந்தி என்பவரும் ஒருவரா, சிவபெருமானுக்கு சித்த வைத்தியம் தெரியுமா என்பதுபோன்ற என் கேள்விகளைச் சிவத்திடமே கேட்டுக் கொண்டிருக்கிறேன்!). 

பிள்ளையாருக்கு ஓங்கார வடிவம் என்பார்கள். ஓம் என்ற ஒலியை உச்சரிப்பதன் பின்னேயுள்ள மருத்துவக் குணங்களைப் பற்றி யோசித்து வருகிறேன். மூச்சினை இழுத்து ஓமை நீட்டி ஒலித்து மூச்சினை விட்டு நிற்கும்போது உடலின் பலவிடங்களில் காற்றுக் குறைவாகிறது (hypoxia என்று சொல்லப்படும்). பிறகு மூச்சினை இழுக்கும்போது ஆக்சிஜன் மீண்டும் உடலின் செல்களுக்குச் செல்கிறது (reoxygenation). இதனைத் தொடர்ந்து செய்யும்போது செல்களுக்கு தகைவுகளைத் தாங்கும் வன்மை அதிகரிக்கிறது. எனவே ஓம் என்பதைச் சுற்றிய பயிற்சி, முதன்மையாக ஒரு மருத்துவ அறிவு. மூச்சின் இருப்புக்கும் இல்லாமைக்கும் மனதை ஊசலாட வைக்கும் ஒரு ஆன்மீக அனுபவம். அது இந்து மதத்தின் ஏகபோக சொத்து கிடையாது. சித்த வைத்தியர்களின் அனுபவம் பொதுமக்களுக்காகக் கற்றெடுத்த பாடம். அதனை மதமாக்கி வியாபாரம் செய்வது சரியா என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். ஆன்மீகம் ஒரு சொந்த அனுபவம். எனது அனுபவம் இன்னொருவருக்கு ஏற்புடையதாகாது. ஆனால் ஆன்மீகத்துக்கான வாசலாகச் சொல்லப்படும் மதம் பொதுவான முகத்தைக் கொண்டது. சமூகத்தின் ஒரு ஒட்டுமொத்த அனுபவமாக மதத்தன்மை பார்க்கப்படுகிறது. அந்த மதம் சடங்குகளின் குப்பைக் கிடங்காகத் துர்நாற்றமடிக்கிறது. துர்நாற்றம் மதங்களுக்குள்ளாக மட்டுமே நின்றுகொண்டால் தேவலாம். ஆனால் அவற்றின் எல்லைகளையும் தாண்டி தனிமனிதர்களின் மூக்கைத் துளைக்கும்போதுதான் துயரமாக இருக்கிறது அல்லது கோபமாக வருகிறது. 

சிறியதும் பெரியதுமாகச் சுமார் 1500 பிள்ளையார், மன்னிக்க கணேஷா, சிலைகளைக் கொண்டு போய்க் கடலிலே கொட்டுகிறார்கள். இதற்கு ஆயிரமாயிரம் போலீஸ், கடற்கரையிலே பாதுகாப்பு, அடித்துத் திரும்பி வரும் குப்பையை அள்ள மாநகரத் துப்புரவு ஊழியர்கள், இத்தனையையும் தாண்டி தெரிந்தே கடலுக்குள் கொட்டப்படும் இரசாயனக் கழிவுகள். பிள்ளையார் என்று ஒருவர் அந்தக் கடற்கரையில் உட்கார்ந்துகொண்டு இதனைப் பார்ப்பாரேயானால் அந்தத் தும்பிக்கையாலேயே ஒவ்வொரு பயலையும் சுழற்றி அடித்துப் போடுவார். இந்தச் செய்தியைப் பாருங்கள். இதிலே வருகின்ற பெயர்களைப் பார்த்தால் கரைத்தவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தினரல்லாத அல்லது வடநாட்டினரான சென்னைவாசிகள் என்பதை உணர முடியும். சென்னையில் நானிருந்த காலத்தில் ஒரு முறை இந்தக் காலாகோலத்தைக் காண நேர்ந்தது. அப்போது வட இந்தியர்கள் ஒரு லாரி நிறைய வந்திருந்து கடற்கரையில் சிலையை வைத்து ஆடியது நினைவிருக்கிறது. இன்று தமிழ்நாட்டுக்கு அந்நியமான ஒரு மதக் கலாச்சாரம் வலிந்து புகுத்தப்படுகிறது. ஊரில் பிடித்து வைக்கும் சாணப் பிள்ளையார், களிமண் பிள்ளையாரைப் பற்றிப் பலரும் பேசியாயிற்று. இதுதான் தமிழ்நாட்டுப் பிள்ளையார். இதனைச் சொல்லிக் கொடுத்தபடி நம்புவதும்,  அல்லது இந்தச் சாணி உருண்டையின் மூலமென்ன, பொருளென்ன, அல்லது இந்தக் களிமண்ணுக்குள் என்ன இருக்கிறது என்று தேடுவதும், பிள்ளையாரை வைத்துப் பிழைப்பு நடத்தும் மதவாதிகளைச் சாடும் பெரியாரின் பின்னே செல்வதும் அவரவரது தேர்வினைப் பொறுத்தது. சொந்த அலுவல்களுக்குள் மூக்கை நுழைத்து இது சரி இது தவறு என்று சொல்வதற்கான அதிகாரம் எனக்கில்லை. ஆனால் எனது சமுதாயத்துக்குள், என் சுற்றுப் புறத்தில் ஒரு கேடு வலிந்து திணிக்கப்படுகிறதென்றால் அதனைக் கண்டு பொறுக்கவில்லை. 

எனக்கொரு கேள்வி இருக்கிறது. தமிழகத்தின் நீரில்லா நீர் நிலைகளை இப்படிப் பாழடிக்கிறார்களே இந்த இந்து அபிமானிகள், இவர்களில் ஆயிரமாயிரமானோர் அமெரிக்காவிலும் இருக்கிறார்கள். இங்கும் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுகிறார்கள் (என் நல்ல நண்பர்களும் அடக்கம்). இத்தகைய கொண்டாட்டங்களுக்கோ, ஆன்மீக அனுபவத்துக்கோ, வழிபாட்டு ஆறுதலுக்கோ, சுண்டல் கொழுக்கட்டைக்கோ நான் எதிரியல்லன். என் கேள்வி இவர்கள் ஏன் கணேஷா சிலைகளை அமெரிக்காவின் எந்தக் குளம், ஏரி, கடலிலும் கரைப்பதில்லை? எங்கே பார்ப்போம், இந்தியர்கள் பெருமளவு வசிக்கும் நகரங்களில் சென்னையைப் போல வீதிக்கு வீதி பெரும்பெரும் கெமிக்கல் சிலைகளை வைத்து, வண்ண வண்ணமாகக் கெமிக்கல் சாயம் பூசி, அவற்றை ஒரு நாள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். அமெரிக்க போலீஸ் ஆப்படிக்கும்! இந்தியர்கள் புலம்பெயர்ந்து வாழும் இந்த சில நூறு ஆண்டுகளில் இப்படியொரு கணேஷா சிலை கரைப்பு அமெரிக்காவில் அல்லது வேறு மேலை நாடுகளில் அரங்கேறியிருக்கிறது என்று ஆதாரமிருந்தால் காட்டுங்கள் தெரிந்துகொள்கிறேன். 

நீதி: எங்கு சுரணையும், பொதுப் புத்தியும், விழிப்புணர்ச்சியும் மழுங்கியிருக்கிறதோ அங்குதான் மதங்கள் தம் கொடிய கால்களை வலிய ஊன்றுகின்றன. 

30 comments:

said...

:)

சரியாக சொல்லிருக்கிங்க...

ஆமா, எதுக்கு கரைக்கனும்?

said...

//கணேஷா சிலை கரைப்பு அமெரிக்காவில் அல்லது வேறு மேலை நாடுகளில் அரங்கேறியிருக்கிறது என்று ஆதாரமிருந்தால் காட்டுங்கள் தெரிந்துகொள்கிறேன்.//

He takes new avathram in US k Ex: Washington pillay ... in new avathar he will skip the bath/dip session...

**

Please Sundar do not ask this kind of question, then they will make a new story to makeup with new laws...

Enough is enough please do not wake up their minds.

// எங்கு சுரணையும், பொதுப் புத்தியும், விழிப்புணர்ச்சியும் மழுங்கியிருக்கிறதோ அங்குதான் மதங்கள் தம் கொடிய கால்களை வலிய ஊன்றுகின்றன. //

Well said ... but in America other religions also practiced.

Have you ever noticed a church with a speaker outside or a Muslim mosque with a speaker outside praying to god with max. sound (like in Tamil Nadu) , in USA ?

you may not ...

Whether it is Hindu / Muslim/ Christian...religions adopt the local law in civilized nations.

Why in India it is not happening ... as you said

எங்கு சுரணையும், பொதுப் புத்தியும், விழிப்புணர்ச்சியும் மழுங்கியிருக்கிறதோ அங்குதான் மதங்கள் தம் கொடிய கால்களை வலிய ஊன்றுகின்றன

When the people are stupid enough then religion will make use of them in all possible ways.

Do you think after reading your blog the so called "Aanmiga Viyaathikal" will answer ?

No ..never they may give you a new version of god story to match your question.

said...

நன்றி மஸ்தான்.

கல்வெட்டு,
//then they will make a new story to makeup with new laws...//
செய்யக்கூடியவர்கள்தான்!

said...

இதனைத் தொட்டே ஒரு கட்டுரை எழுத வேண்டுமென நினைத்திருந்தேன். கிட்டத்தட்ட அதே கருத்துக்களை தொட்டு உனது கட்டுரை அமைந்திருக்கிறது.

அண்மையில் தெக்கிக்காட்டு மூலையில் இந்த திடீர் நவீன பக்தி கொடி கட்டத் தொடங்கியிருக்கிறதாம். தொடர்ந்து 5-7 நாட்களுக்கு ஒலி பெருக்கி வைத்து யாரையும் தூங்கவிடுவதில்லையென்று சபதமெடுத்திருக்கிறார்களாம்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக ஆலங்குடியிலிருந்து தன்னியில்லாத குளத்துக் கரையில் பிள்ளையார் கரைக்க செல்வதற்கு முன்னால் ஏதோ கலவரம் ஏற்படப் போவதாக போலீசார் கொண்டு வந்து குமித்து வைக்கப் பட்டிருந்ததாம்.

இதெல்லாம்(இது போன்ற திடீர் பக்தி) என்றிலிருந்து என்று எனக்கு விளங்கவில்லை. இந்த விழாவே எதற்கென்றும் தெரியவில்லை... அடுத்த வருடம் சிகப்பு ஆறு ஓட அதிக வாய்ப்பிருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது. எங்கே ஊர்க்காடுகளை இட்டுச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள், ஏதாவது உனக்குத் தெரியுமா?

அறிந்து கொள்ளும் போது வேதனையான, வெட்கக் கேடான விசயமாக படுகிறது :-((.

Anonymous said...

//எங்கு சுரணையும், பொதுப் புத்தியும், விழிப்புணர்ச்சியும் மழுங்கியிருக்கிறதோ அங்குதான் மதங்கள் தம் கொடிய கால்களை வலிய ஊன்றுகின்றன. //
மிக சரியாக சொல்லிருக்கிறீர்கள்.

said...

happens in a california every year.

mostly they immerse idols in pacific taking them in a boat.

this year, one of the temple has decided to immerse ONE big idol and keep the remaining in the temple itself.

said...

In sacramento, they do in the folsom lake, they got permission to do that, only clay idols only, no chemicals.
http://www.svcctemple.org/Home.asp

Maha Ganapathi Visarjanam will be done on September 7, 2008. The Visarjanam location is Beals Point, Folsom Lake. This is the same location where visarjanam was done last year

Anonymous said...

இது என்ன நல்ல கதையாக இருக்கிறது எவனெவனோ அடிக்கும் கூத்துக்கு எங்கள் அருமையான மதத்தைத் திட்டுகிறீர்களே!

மதத்தின் மகிமையை மழுங்க அடிப்பதற்காகவே பெரிய தலைகள் எல்லாம் சேர்ந்து அடிக்கும் கூத்து இது.

புதுப்புது கூத்துக்களை கொண்டாட்டம் என்ற பெயரில் திணிப்பது.

வழிபாட்டை மாற்ற வேண்டுமென அடாவடித்தனம் செய்வது.

ஓரிரு பார்ப்பானர் செய்யும் தவறுக்கு அவர்கள் இனத்தையே தூசிப்பது.

இவைகளெல்லாம் பகுத்தறிவிலிகளின் பாஷனாகப் போயிடுச்சு.

மதமானது நன்மார்க்கத்தைக் காட்டும் நற்பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறது.

கடவுள் என்னும் கரைகானா பெரும் சக்தி
விரைவில் எல்லாவற்றையும் சீர்செய்யும்.
நம்பிக்கையே நம் இருப்பு.

எண்ணத்தை நல்லதாக்கி

இதயத்தை சுத்தமாக்கி

உண்மையை உணர்ந்துய்வோம்!

Anonymous said...

well written!
--fd

Anonymous said...

செய்ய வேண்டியது என்ன?

பொங்கலை தமிழ் புத்தாண்டாக ஆக்கி தமிழர்களின் இழந்த மானத்தை மீட்டெடுக்கும் தீவிரத்தில் நூற்றில் ஒரு பங்காக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக இந்த மாதிரியான செய்கைகளை கட்டுபடுத்தலாம். கெமிக்கலில் பிள்ளையார் சிலை செய்பவர்கள் அதனை இப்படி கடலில் கொண்டு சென்று கரைக்ககூடாது என்று ஒரு உத்தரவு. ஒரே ஒரு உத்தரவு போட்டால் போதுமே.

வட நாட்டினரோ தென்னாட்டினரோ. ஊர்வலங்களும், கொண்டாட்டங்களும் எல்லாருக்கும் பிரியம்தான். ஆனால் போலிஸ், அரசாங்கம் முதலியவை சரியானபடி வழி அமைத்து கொடுத்தால் யார் அதை மீறப் போகிறார்கள்? களிமண் பிள்ளையார் செய்வதும், கடலில் கரைப்பதும் ஒரு சடங்கு. கெமிக்கல் பிள்ளையாரால் சுற்றுபுற சூழலுக்கு குந்தகம் வந்தால், அதை தடுக்கும் சக்தி படைத்த அரசாங்கம் என்ன செய்கிறது என்பதுதான் அதிசயம்.

ஏன் திமுக போன்ற நாத்திகத்தை உயர்த்திப் பிடிக்கும் அரசாங்கம் இதை செய்யவில்லை? காரணம் எல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை. இந்த மாதிரியான நெறிபடுத்தாத கொண்டாட்டங்களில் மூலம் சில பதட்ட சூழ்நிலைகள் உருவாக வாய்ப்பு இருக்கிறதே. அதை வைத்து கொஞ்சம் அரசியல் பண்ணலாம்.

Anonymous said...

இப்படித்தான் எனது நண்பர் தனக்குத் தெரிந்த குஜராத்தி நண்பரின் கிரகப்பிரவேசத்துக்கு போயிருந்தார். அவ்வீட்டார் அவர்போகும் வழியில் கடல் இருப்பதால் (ferry boat இல் கடக்கவேண்டும்) ஹோமம் வளர்த்த பொருட்களை (சாம்பல்/பழம்/பூக்கள்/அரிசி) கடலில் கொட்டிவிடும்படி கேட்டிருந்தனர். நண்பரோ அமெரிக்காவுக்கு புதிசு ஒத்துக்கொண்டுவிட்டார். ஆனால் விருந்து உண்ட களைப்பில் ferry boat இல் தூங்கி விட்டார். எழுந்து கரைவந்த போதுதான் நினைவுக்கு வந்தது. உடனே கரையில் இருந்த படியே கடலில் கொட்டினார். கடற் கரையில் பொலிஸ் நிலையம், பொலிஸார் வந்து பிடித்துக்கொண்டு விட்டனர். கேள்விமேல் கேள்விகேட்டு என்ன சாம்பல், அதில் பூக்கள் ஏன் வந்தது, ஏன் வெற்றிலை எரியாமல் இருக்கிறது, ஏன் அந்த மானிலத்தில் கொட்டாமல் இந்தக்கரைக்கு வந்து வேறு மாநிலத்தில் கொட்டவேண்டும், எந்த மதபோதகர் இதைச்செய்யச்சொன்னார், எந்த மதப்புத்தகத்தில் ஆதாரம இருக்கிறது ?என குடைந்தெடுத்தனர்!!!!!பின்னர் அண்மையில் வசிக்கும் இன்னொரு தமிழர் தலையிட்டு கிரகப்பிரவேசம் பற்றி விளக்கம் அளித்து கரைந்துபோன சாம்பல் போகட்டும் ஆனால் மற்றையவையை கடலில் இருந்து வெளியே எடுக்க ஒப்புதல் அளித்து இயலுமானவற்றை எடுத்த பின்னரே விட்டனர்!

said...

இங்கே நம்மூரில் இருந்த ஒரு மராத்தியக் குடும்பம், பிள்ளையார்சதுர்த்தியைப் பத்துநாள் கொண்டாடிக் கடைசி நாளில் பிள்ளையாரை உள்ளூர் ஆற்றில் கரைப்பது உண்டு. பிள்ளையார் அசல் களிமண் சிலைதான். இங்கே பாட்டரி செய்யும் இடத்தில் வாங்கும் களிமண்.

ஒரு அடி உயரம் இருக்கும் சிலை.

மொத்த ஊருக்கும் ஒரு புள்ளையார் கரைப்பு என்றதால் பிரச்சனைன்னு ஒன்னும் பெருசா வரலை.

எங்க ஊர் செஞ்ச புண்ணியம், அவுங்க நாட்டைவிட்டுப்போய் சிலவருசமாகிருச்சு:-)

said...

திருநெல்வேலியிலேயே இப்போது மண் பிள்ளையார் கிடைப்பதில்லை. ஆந்திராவிலிருந்து வந்து ஒரு அடி முதல் ஆறு அடி உயரம் வரை சிலை செய்து வர்ணம் பூசி, ஒரு அடி பொம்மையே 200 ரூ என்று விற்றார்கள். அமெரிக்க இந்தியர்கள் புஷ் இடம் பெர்மிஷன் வாங்கி விட்டால் இங்கிருந்து கன்டெய்னர் உயரத்திற்கு பிள்ளையார் செய்து ஏற்றுமதி செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
சகாதேவன்

said...

//எங்கு சுரணையும், பொதுப் புத்தியும், விழிப்புணர்ச்சியும் மழுங்கியிருக்கிறதோ அங்குதான் மதங்கள் தம் கொடிய கால்களை வலிய ஊன்றுகின்றன. //


என்ன ஒரு பிரம்மாண்டமான உண்மை!

ஆம்..
மதம் என்ற பெயரால் இப்படி ஒரு
ப்ளாஸ்டர் ஆப் பாரீஸின் தாண்டவத்தை
களிமண் பிள்ளையாரால் தாக்குப்பிடிக்கமுடியாமல்
தவிக்கிறார்.


சூப்பரா சொல்லியிருக்கீங்க!

said...

சுந்தரவடிவேல், now that you know that immersing and other festivities are performed around the world, just like India, does that change your opinion in anyway?

thoughts?

இணையத்தில் கண்ணில் பட்டது
///
In 1988 Ganesha broke new ground in his public relations when Visarjana was held in the United States. It was the first large-scale interdenominational public Hindu festival held in US history. It was indeed an historic event. Almost two thousand Hindus gathered in San Francisco, California, on September 25 for a grand festival culminating ten days of worship and festivities begun on Ganesha Chaturthi. More than twenty Hindu organizations of various traditions participated against the majestic backdrop of the Golden Gate Bridge. Horns sounded, drums played and bells rang out pujas as hundreds of images of Ganesha were dramatically conveyed to the Pacific Ocean. Many worshipers stated with delight that they felt as if they were back in India. The celebration proved to one and all that Hinduism had reached a new level of maturity in the US, as devotees boldly proclaimed their faith in such a grand public ceremony. The festival has been held in the San Francisco Bay Area every year since its inception. Australia followed suit a few years later, and now yearly parades are held on the streets of Sidney by all Hindu groups joining together in public worship.
////

said...

//அமெரிக்காவில் பிள்ளையாரைக் கரைக்க முடியுமா?"///

முடியும்னு என் முந்தைய பின்னூட்டம் ஆதாரம்.

///அமெரிக்க போலீஸ் ஆப்படிக்கும்! ///

கண்டிப்பா அடிக்காது. அடுத்தவரின் நம்பிக்கையை மதிக்கத் தெரிந்தவர்கள் அமெரிக்கர்கள். அட்லீஸ்ட் அமெரிக்கச் சட்டம் மத்தவங்களின் நம்பிக்கையை நையாண்டி செய்யக் கூடாதுன்னு சொல்லுது.

நம்ம ஊருலதான் இந்த விவஸ்தை கிடையாது ;)

.

Anonymous said...

நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது;
வந்தேறி மதத்தினர் ,கொல்லிமலை இந்துக்களை மதமாற்றம் செய்வதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.
மைக் கட்டி கொண்டு ,தொழுகை நடத்தி,வருபவனையும் கண்டிக்க வேண்டும்.
மொன்டிகள் நடக்கிறார்கள் ;குருடர்கள் பார்க்கிறார்கள் என கூட்டத்தை கூட்டுவதர்க்காக பித்தலாட்டம் செய்வனையும் கண்டிக்க வேண்டும் .
என் நாட்டில் என் மதத்தை நான் கொண்டாடுகிறேன் .உனக்கென்னய்யா போயிற்று. ?மக்களுக்கு வருடம் ஒருமுறை தொந்தரவு இருக்கத்தான் செய்யும்.அரசியல்வாதிக்கு போலிஸ் பாதுகாப்பு சொல்லி,கும்பலா நிற்கிறானே ,அதை கேட்கலாமே.வேறு மதத்தினர் எதுவும் செய்ய வில்லையா;
நான் என் அமெரிக்க வில் செய்யனும்?திருவண்ணாமலை பொய் பார் .அமெரிக்கக்காரன் தான் ஆசிரமம் பூரா உக்காந்திருக்கான்.மாற்ற மதத்தினரின் தவறையும் சுட்டி காட்ட வேண்டும் .இல்லையேல் அவர்கள் உங்களுக்கு ஆப்படித்து விடுவார்கள் ,என்று உங்களுக்கு பயம் என சொல்வேன் .

said...

\\நீதி: எங்கு சுரணையும், பொதுப் புத்தியும், விழிப்புணர்ச்சியும் மழுங்கியிருக்கிறதோ அங்குதான் மதங்கள் தம் கொடிய கால்களை வலிய ஊன்றுகின்றன.
\\
100% correct

Anonymous said...

// Anonymous said...செய்ய வேண்டியது என்ன?கெமிக்கலில் பிள்ளையார் சிலை செய்பவர்கள் அதனை இப்படி கடலில் கொண்டு சென்று கரைக்ககூடாது என்று ஒரு உத்தரவு. ஒரே ஒரு உத்தரவு போட்டால் போதுமே.
வட நாட்டினரோ தென்னாட்டினரோ. ஊர்வலங்களும், கொண்டாட்டங்களும் எல்லாருக்கும் பிரியம்தான். ஆனால் போலிஸ், அரசாங்கம் முதலியவை சரியானபடி வழி அமைத்து கொடுத்தால் யார் அதை மீறப் போகிறார்கள்? களிமண் பிள்ளையார் செய்வதும், கடலில் கரைப்பதும் ஒரு சடங்கு. கெமிக்கல் பிள்ளையாரால் சுற்றுபுற சூழலுக்கு குந்தகம் வந்தால், அதை தடுக்கும் சக்தி படைத்த அரசாங்கம் என்ன செய்கிறது என்பதுதான் அதிசயம்.//
மிக அருமையான கருத்து.நன்றி.

said...

தெகா:
//தன்னியில்லாத குளத்துக் கரையில் பிள்ளையார் கரைக்க செல்வதற்கு முன்னால் ஏதோ கலவரம் ஏற்படப் போவதாக போலீசார் கொண்டு வந்து குமித்து வைக்கப் பட்டிருந்ததாம்.//
ஒரு கோடை காலத்தில் முழங்காலளவுத் தண்ணீரில் படுத்துக் குளித்திருக்கிறேன். இருக்கும் கொஞ்ச நஞ்ச நீர்நிலைகளை இப்படிப் பாழடிக்க, ஊர்ப் பொதுக்குளத்தில் நஞ்சைக் கலக்க, உறவும் தோழமையுமாய்ப் பிண்ணிக் கிடந்த மக்களிடையே இருந்த ஒருமைப்பாட்டை வேரறுக்கவும் ஒரு மதம் அல்லது சாமி சொல்லிக் கொடுக்கிறதென்றால், அந்த மதமும் சாமியும் மாற வேண்டும் அல்லது ஒழிய வேண்டும். உழவாரத் திருப்பணி செய்த அப்பர் எங்கே, இந்தக் கூட்டம் எங்கே!

அனானி, நன்றி!

Surveysan:
Thanks for letting me know that it happens here. Thanks to Aravindan for the link. From the link: //When you bring your idols for visarjanam (immersion) bring the clay idol only. Dumping flowers and other offerings into the lake waters are strictly prohibited by the authorities.
Our strict compliance in this regard will give us continued access to the lake waters for future visarjanams and other events//
It is clear that such rituals abide by common rules and regulations of non-polluting the public waters. It is clear that Americans are concious to their surroundings and practices. And it is more clear that Indians who live here are more cautious about their cards and papers :)) You CANNOT dump your chemical idols here just like what you do in Tamilnadu, Maharashtra beaches. Period. That was my sole question.

And thank you for the paragrapha from "இணையம்". The himalayanacademy link below if anyone wants further info about Surveysan's "இணையம்" :))
http://www.himalayanacademy.com/resources/books/lg/lg_ch-15.html

//அமெரிக்காவில் பிள்ளையாரைக் கரைக்க முடியுமா?"///
முடியும்னு என் முந்தைய பின்னூட்டம் ஆதாரம்.
///அமெரிக்க போலீஸ் ஆப்படிக்கும்! ///
கண்டிப்பா அடிக்காது.

//எங்கே பார்ப்போம், இந்தியர்கள் பெருமளவு வசிக்கும் நகரங்களில் சென்னையைப் போல வீதிக்கு வீதி பெரும்பெரும் கெமிக்கல் சிலைகளை வைத்து, வண்ண வண்ணமாகக் கெமிக்கல் சாயம் பூசி, அவற்றை ஒரு நாள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். அமெரிக்க போலீஸ் ஆப்படிக்கும்!//

மறுபடியும் படித்துப் பாருங்கள், ஆப்படிக்கும் என்று ஒத்துக் கொள்வீர்கள் :))

அமெரிக்கர்கள் மற்றவர்களை மதிக்கத் தெரிந்தவர்கள். ஆமாம். அத்தோடு சமூக விதிமுறைகளையும் சட்டங்களையும் மதிக்கத் தெரிந்தவர்கள். பொது இடங்களில் இருமுவதையும் தும்முவதையும் கூட பொத்திக் கொண்டுதான் செய்வார்கள். பொது இடத்தைப் பாழடிக்கக் கூடாது என்பதில் அவர்களுக்குப் பெரும் அக்கறை இருக்கிறது. ஒரு இடத்தில் வேலைக்குப் புகுமுன்னே operational safety and health administration (OSHA) வகுப்பில் எதை எங்கே கொட்ட வேண்டும், எப்படிக் கொட்ட வேண்டும் என்ற தெளிவான விதிகளை வைத்திருப்பவர்கள்.
//நம்ம ஊருலதான் இந்த விவஸ்தை கிடையாது ;)//
மெத்தச் சரி :))



அனானி:
//இது என்ன நல்ல கதையாக இருக்கிறது எவனெவனோ அடிக்கும் கூத்துக்கு எங்கள் அருமையான மதத்தைத் திட்டுகிறீர்களே!//
மீண்டும் ஒரு முறை என் பதிவைப் படியுங்கள். எவனெவனோ அடிக்கும் கூத்தைத்தானே திட்டுகிறேன். அதையும் இந்தியாவில் மட்டுமே பார்த்துப் பார்த்து கவனமாக அடிக்கும் கூத்தைத்தானே திட்டுகிறேன். உங்கள் மதத்தின் மீது இவ்வளவு அன்பாக இருக்கும் நீங்கள் ஏன் உங்கள் மதத்தை எவனெவன் கைகளிலோ ஒப்புவித்துவிட்டுக் கண்டும் காணாமல் இருக்கிறீர்கள்? மக்கள் தங்கள் மதங்களைத் தங்களுக்கானதாக வைத்திருக்க வேண்டும். மக்கள் நலத்துக்குத்தானே மதம். அல்லது மதத்தின் நலத்துக்கு மக்களா? மதவியாதிகளின் கைகளிலிருந்து உங்கள் மதத்தை முதலில் விடுதலை செய்யுங்கள். இல்லையென்றால் அதன் பெயரால் நடக்கும் ஒவ்வொரு அநீதியிலும் உங்களுக்கும் பங்குண்டு என்று அர்த்தமாகும்.
//மதத்தின் மகிமையை மழுங்க அடிப்பதற்காகவே பெரிய தலைகள் எல்லாம் சேர்ந்து அடிக்கும் கூத்து இது.//
மீண்டும் மந்தைகளின் தவறுதான் இது. எந்த ஞானத்தின் அடிப்படையில் இந்தப் பெரிய தலைகளை உருவாக்குகிறீர்கள்? புத்தர், மகாவீரர், பரமகம்சர், பக்த கபீர், வள்ளலார் இப்படி ஏதேனும் ஒரு வரிசையில் மெய்ஞானமடைந்தவரையா உங்கள் மதத்துக்குப் பெரிய தலையாக வைத்திருக்கிறீர்கள்? அல்லது போப்பு மாதிரி ஏதேனும் வாக்கெடுப்பு நடத்துகிறீர்களா? பெரிய தலை தவறு செய்கிறதென்றால் நீங்கள் எவ்வகையில் உங்கள் மாற்றுக் கருத்தைப் பெரிய தலைகளுக்குச் சொன்னீர்கள்?

//ஓரிரு பார்ப்பானர் செய்யும் தவறுக்கு அவர்கள் இனத்தையே தூசிப்பது.//
நீங்கள் என்னைச் சொல்லவில்லை என்றறிந்தாலும், இப்பதிவில் நான் பார்ப்பனர்களைத் தூசித்து எதனையும் எழுதவில்லையே. மீண்டும் ஒருமுறை வேண்டுமானால் படித்துப் பாருங்கள். வேறு பல பதிவுகளிலும், பொதுவெளியிலும் தொடர்ந்து பார்ப்பனீயத்தை விமர்சித்து எழுதியே வருகிறேன். வருவேன்.

இன்னொரு அனானி:
//மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக இந்த மாதிரியான செய்கைகளை கட்டுபடுத்தலாம். கெமிக்கலில் பிள்ளையார் சிலை செய்பவர்கள் அதனை இப்படி கடலில் கொண்டு சென்று கரைக்ககூடாது என்று ஒரு உத்தரவு. ஒரே ஒரு உத்தரவு போட்டால் போதுமே.//
சரியான அணுகுமுறை. அரசு நினைத்தால் செய்யலாம். ஒவ்வொரு மாநில அரசும் நினைத்தால் செய்யலாம். அது ஆத்திகக் கட்சியோ, நாத்திகக் கட்சியோ அரசியல் நலன் பாராமல், மக்களின் நலனைப் பார்த்தால் செய்யலாம். ஆனால் பிரச்சினை சட்டங்களின் இல்லாமையால் இல்லை "பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிக்கக் கூடாது" என்று சட்டம் இருக்கத்தான் இருக்கிறது. அதற்குள்ளேயே இதனை அடக்கலாமே. அடங்கலாமே. பொதுப் புத்தியைப் பயன்படுத்தும் கூட்டம் இதனை யோசிக்கும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் ஒரு நாகரீகமடைந்த சமூகத்தில், அறிவு வளர்ச்சி பெற்ற சமூகத்தில் இருக்க வேண்டியதில்லை.

ferry அனானி:
நீதி: தூங்கப்புடாது :)

துளசி கோபால்:
//எங்க ஊர் செஞ்ச புண்ணியம், அவுங்க நாட்டைவிட்டுப்போய் சிலவருசமாகிருச்சு:-)//
அந்த நன்னிலை நம் எல்லோருக்கும் வாய்க்கட்டும் :))

சகாதேவன்:
//திருநெல்வேலியிலேயே இப்போது மண் பிள்ளையார் கிடைப்பதில்லை.//
தகவலுக்கு நன்றி. மண் பிள்ளையார் மட்டுமில்லை. இனி மண் கிடைப்பதும் அரிதாகிப் போகும். நீர்ப் பிடிப்பு இல்லாது போனால் களிமண் எங்கேயிருந்து வரும்?!

சுரேகா, முரளி கண்ணன், அனானி: நன்றி!

said...

//மண் பிள்ளையார் மட்டுமில்லை. இனி மண் கிடைப்பதும் அரிதாகிப் போகும். நீர்ப் பிடிப்பு இல்லாது போனால் களிமண் எங்கேயிருந்து வரும்?!//

அவுங்கவுங்க தலையில் இருந்து எடுத்துக்க வேண்டியதுதான்:-)))))

said...

sundaravadivel,

/////You CANNOT dump your chemical idols here just like what you do in Tamilnadu, Maharashtra beaches. Period. That was my sole question.////

ofcourse not. you cannot do many things in the US, which you can freely do in tamilnadu and maharashtra .

ரோட்ல ஆய் போறது, ரெட் சிக்னல் விழுந்தா நிக்காம போறது, கார் ஓட்டாமயே ட்ரைவர் லைசென்ஸ் வாங்கரது, எக்ஸ்ஸட்ரா,...

you are missing my point.
Immersing idols is a religious requirement. In US, the government, people & systems understands and values the sentiments of others.

அமெரிக்கால கெமிக்கல் கலந்து பிள்ளையாரை தண்ணீல போட விடுவானா? கண்டிப்பா விட மாட்டான்.

இந்தியாலையும் கெமிக்கல் கலந்த பிள்ளையாரை கரைக்க விடாமல் செய்ய சட்டம் கொண்டுவருவது அரசின் கடமை.
பிள்ளையார் பக்தர்கள் யாரும், கெமிக்கல் பிள்ளையாரை கடலில் கரச்சாதான் ஆச்சுன்னு அடம் பிடிக்கலையே? பிடிக்கறாங்களா?

எங்க ஆதாரம்?

அவங்க கிட்ட களிமண் பிள்ளையாரை மட்டும் கரைங்கன்னு யாராச்சும் எடுத்து சொன்னாங்களா?

எனிவேஎ, உங்க பதிவு, கெமிக்கல் பிள்ளையாரை கரைப்பதன் கேடுகளை சுட்டுவதாய் தெரியவில்லை.
பிள்ளையார் கரைத்தலை மொத்தமா 'நையாண்டி' செய்யும் விதமாதான் இருக்கு.

;) :)) ;)

said...

// சித்த வைத்தியர்களின் அனுபவம் பொதுமக்களுக்காகக் கற்றெடுத்த பாடம். அதனை மதமாக்கி வியாபாரம் செய்வது சரியா என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். //

:)) ;) :))

said...

//நீதி: எங்கு சுரணையும், பொதுப் புத்தியும், விழிப்புணர்ச்சியும் மழுங்கியிருக்கிறதோ அங்குதான் மதங்கள் தம் கொடிய கால்களை வலிய ஊன்றுகின்றன. //

சூப்பர்!

said...

////மண் பிள்ளையார் மட்டுமில்லை. இனி மண் கிடைப்பதும் அரிதாகிப் போகும். நீர்ப் பிடிப்பு இல்லாது போனால் களிமண் எங்கேயிருந்து வரும்?!//

அவுங்கவுங்க தலையில் இருந்து எடுத்துக்க வேண்டியதுதான்:-)))))//

துளசியக்கா சூப்பர் பஞ்ச் இது!

Anonymous said...

It is sheer lack of willingness to enforce rules whether it is pollution control
or building regulations or costal
zone management.Everyone takes
advantage of that. The serious
pollution caused by dyeing and bleaching industries and tanneries
was handled somewhat better thanks
to courts' intervention.Those who
organize such massive rallies and
dissolving those ganesha figures
should be made aware of the environmenatal consequences.
I think they can be convinced
of the need to find eco-friendly
solutions.

Anonymous said...

//மதத்தின் மகிமையை மழுங்க அடிப்பதற்காகவே பெரிய தலைகள் எல்லாம் சேர்ந்து அடிக்கும் கூத்து இது.//

மதத்தினுள் ஊடுருவியுகள்ள அரசியல் பெரிய தலைகளைத்தான் சொன்னேன்.

எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம் இதிலும் கலப்படம் தான்!

//மந்தைகளின் தவறுதான் இது//

ஆமாம் நாம் எல்லோரும் பூமித்தாயிடம் மேச்சலுக்காக அனுப்பப்பட்ட மந்தைகள் தான்.
எத்தனை பேர் மேச்சலை வெற்றிகரமாக முடிக்கப் போகிறோமோ!

எத்தனை பேர் மேய்ந்து கொண்டே இருக்கப் போகிறோமோ!!

அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!

said...

Surveysan,
//Immersing idols is a religious requirement. //
Is it so?! Which "Hindu" law says so? Everyone knows that this Pillayaar sathurthi was yet another religious day but was later transformed by Thilakar into a social unification practice during British rule. This was then hijacked by Hindu fundamentalists. Like any other religious practice, this one has multiple ways of celebrating. The one that is customary to Tamilnadu has not been this procession and immersion of chemical idols. Because, we know the value of water. (Go and see Pudukkottai, ramanathapuram and other dry districts of Tamilnadu how precious water is!) But now people under the influence of religious fundamentalism, are destroying their own wealth. This is an immature way of practicing a religion. This is like a kid burning his own house just to have fun with his friends. You do not want to understand my point. You do not want to open your eyes and see my respect to the very same Pillayaar religious practice. Please read the post again without any colored glasses.
//பிள்ளையார் பக்தர்கள் யாரும், கெமிக்கல் பிள்ளையாரை கடலில் கரச்சாதான் ஆச்சுன்னு அடம் பிடிக்கலையே? பிடிக்கறாங்களா?//
So they dont do it voluntarily! They do it because someone is telling them to do so. Interesting! Who compels them then to carry those humongous idols in a parade, shout near mosques and then dump their gods in their own waters?

//கரைக்க விடாமல் செய்ய சட்டம் கொண்டுவருவது அரசின் கடமை.//
1. As I clearly said above, there is no need to enact laws for simple things that require common sense. There are enough laws to ban this. It is in the hands of the civilized citizens to abide by the rules.
2. The govt is not so foolish to enact a law specifically on this. It knows that the cycle will start: Law - Stay Order by some SriGanesha Samaj- Agitations by ignorant people upon the induction of Hindu fundamentalist leaders - Social disharmony. Govt knows this. But, Social disharmony is what these Hindu fundamentalists want at the end!

So, try to understand things in a way that makes sense to you first, to others next! And dont make blanket statements like //பிள்ளையார் கரைத்தலை மொத்தமா 'நையாண்டி' செய்யும் விதமாதான் இருக்கு.// for it will discredit your argument, if you have any reasonable ones!

Finally,
You seem to believe in TV serials and stories told by himalayanacademy scientists as to who discovered Om, who discovered Yoga and Baratha Natiyam etc. But I am analyzing the hypothesis that Hinduism is a corporate religion. and it survives by swindling the wealth of the commons' spiritual, scientific and cultural wisdom.

said...

மைக் கட்டி கொண்டு ,தொழுகை நடத்தி,வருபவனையும் கண்டிக்க வேண்டும்.

திரு. ஓம் சதீஷ்
இஸ்லாமிய நாடான துபாயில் கனேஷ் விஸர்ஜன் வெகு விமர்சையாக அவரவ்ர் வீடுகளீல் கொண்டாடப்படுகிறது பத்தாவது நாளில் விநாயகரை கடலில் கரைக்க ஒரு குறிப்பிட்ட இடத்தில் அனுமதியும் வழங்கப்படுகிறது

said...

வணக்கம் சுந்தரவடிவேல் அவர்களே!

நெடுநாள் கழித்து உங்கள் பதிவை வாசிக்கும் வாய்ப்பு! :)

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது 'அவாள்களுக்கு' நன்றாகவே புரிகிறது; ஆனாலும், பார்ப்பனிய அரிப்பு காரணமாக ஊளையிடுகிறார்கள்!

இந்த பாசிசப் பார்ப்பனிய மதவாத திணிப்பை சென்னையில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

எப்படி ராமச்சந்திர மேனன் கட்சி துவக்கிய 1972-இல் இருந்து அய்யப்ப சாமியாட்டத்தைத்தைத் தீவிரப்படுத்தினார்களோ, அதேபோல் ஜெயா மாமி அதிமுக 'தலைவியான' 1988-89- இல் இருந்து பார்ப்புகளுக்கு குளிர்விட்டுப்போய், அந்தக் காலகட்டத்தில் இருந்துதான் - பிள்ளையார் ஊர்வலங்களை சென்னையில் நடத்தும் துணிவு இந்தப் பார்ப்பனிய பயங்கரவாதிகளுக்குக் கிடைத்தது :)

இந்தக் கூத்தை அங்கதமாகவே ஒரு கவிதையில் சொல்ல முயன்றிருக்கிறேன், இங்கே :


தல புராணம்

முடிந்தால் படித்துப் பார்க்கவும் :)