இன்றைய பிபிசி தமிழோசையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத் தொல்லியல் ஆராய்ச்சியாளர் முனைவர் கே. இராஜன் அவர்களுடனான செவ்வியைக் கேட்டேன். இவரும் இவரது சக ஆராய்ச்சியாளர்களும் தென்னிந்தியாவின் வரலாற்று வரைபடங்களைத் (Atlas, படத் தொகுதி?) தயாரிப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவ் வரைபடங்கள் அரசியல், சமூக, கலாச்சார மற்றும் பொருளாதாரத் தகவல்களைத் தாங்கியிருக்கும். கற்காலத்திலிருந்து விஜயநகரப் பேரரசின் காலம் வரையிலான தகவல்கள் தொகுக்கப் படுகின்றன. கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முதல் முயற்சியாகப் புதுக்கோட்டை மாவட்டத்தினைக் குறித்த விபரங்கள் சேகரிக்கப் பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன (இன்னும் முழுமையடையவில்லை). ஆந்திர, கேரள, கர்நாடக மாநிலப் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து செயற்படுத்தப்படும் இப்புறத்திட்டுக்கு பிரெஞ்ச்-இந்திய அமைப்பொன்றும் ஃபோர்டு அறக்கட்டளையும் உதவுகின்றன. இப்புறத்திட்டினைப் பற்றிய மேலதிகத் தகவல்களை Historical Atlas of South India எனும் இணைய தளத்தில் காணலாம். வரைபடங்களை மோசில்லா உலாவியை விட எக்ஸ்ப்ளோரரின் மூலம் நன்றாகக் காண முடிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
பதிவிற்கு நன்றி! செவ்வியை நாளைக்குக் கேட்டுப் பார்க்கிறேன்.
நல்ல தகவல்., இன்னொன்றைக் கொழுத்திவிட்டுப் பேய்விடுகிறேன்., இந்திய வரலாறே., குமரியிலிருந்து துவங்கி., இமயத்தில் முடியவேண்டுமாம். நாம் இமயம் முதல் குமரிவரை என்றல்லவா சொல்லுகிறோம்?., கல்தோன்றி., மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி., நமது மொழி. அப்படியென்றால் குமரிதா`னே முதலில் வந்திருக்க முடியும்?.
//நல்ல செய்தி. இதையெல்லாம் யாராவது செய்கிறார்கள்!!
நன்றிகள்!
தங்கமணி //
முனைவர் நாகசாமியின் குமுறலுக்குச் சிறிது மருந்து கிடைத்தாற் போலிருக்கும்.
நன்றி இராதா!
மரம், // குமரிதானே முதலில் வந்திருக்க முடியும்?// இல்லை, நீங்கள் சொல்வதன் படி பார்த்தால் குமரிக்கும் தெற்கேயுள்ள குடுகுடு கிழவிகளே முன் தோன்றியிருக்க முடியும்! இமயமும் இமய-குமரி கூப்பாடும் முந்தாநாள் தண்ணிக்குள்ளேருந்து கிளம்பின கல்லும் அது உதிர்த்த மண்ணும்! :))
Post a Comment