இன்னக்கி ஒரு கூட்டத்துக்குப் போனேன். ஒருத்தரு பேசுனாரு. ஹார்வர்டு பல்கலைக்கழகத்துல ஒரு விஞ்ஞானி. மூலச் செல் சிகிச்சை (stem cell therapy) ஆராய்ச்சியில கொம்பர். பேரு டக்ளஸ் மெல்ட்டன் (Douglas Melton). இன்னக்கி என்ன சொன்னாருன்னு ஒங்களுக்குச் சுருக்கமாச் சொல்லவா? விரிவா வேணும்னா கேள்வி கேளுங்க, தெரிஞ்சா சொல்றேன்!
20ம் நூற்றாண்டு கிட்டத்தட்ட மரபணுவான டி.என்.ஏ (DNA) யைச் சுத்தியே வாயப் பொளந்துக்கிட்டு வந்துச்சு. 1900ல மெண்டல்ல ஆரம்பிச்சது, அப்புறமா டி.என்.ஏயைக் கண்டுபிடிச்சது, அதோட மூலக்கூறு வடிவத்தைக் கண்டுபிடிச்சது, வரிசையைப் படிக்கற முறையக் கண்டுபிடிச்சது, அப்புறமா 2001ல மனுச டி.என்.ஏ வரிசையையே வெளியிட்டதுல வந்து நிக்குது. இது ஒரு நல்ல விசயம்னாலும் இந்த நூற்றாண்டு செல்களின் நூற்றாண்டா இருக்கப் போவுது. ஏன்னா செல்களைப் பத்தின ஆராய்ச்சி அதிலும் மூலச் செல்களைப் பத்தின ஆராய்ச்சிதான் மேல நிக்கும்னாரு.
அது என்னங்க மூலச்செல்? விந்தும் அண்டமும் ஒன்னாச் சேருதுல்ல, அப்போ வர்ற கருமுட்டை ரெண்டாகி, நாலாகிக் கொஞ்சம் செல்களோட இருக்கில்ல அந்த செல்களை எடுத்தோம்னா ஒடம்புல இருக்க எந்த செல்லை வேணும்னாலும் ஆய்வகத்துல செஞ்சுக்கலாம். அந்த செல்களைத்தான் கருமூலச்செல் (embryonic stem cell) அப்படின்னு சொல்றாங்க.
மெல்ட்டன் என்ன செய்றாருன்னா சக்கரை வியாதிக்காரங்களோட கணையம் (pancreas) இருக்குல்ல, அதுல இருக்க பீட்டா (beta) செல்லெல்லாம் பாதிப்படைஞ்சதால இன்சுலின் சுரக்க முடியாமப் போவுதுல்ல, அவுங்களுக்கு மூலச் செல் சிகிச்சை செய்யலாங்கறாரு. அது மட்டுமில்ல இத்தனை நாளா பீட்டா செல்லை மூலச்செல் மட்டுந்தான் உண்டாக்கும்னு எல்லாரும் நெனச்சுக்கிட்டு இருந்தாங்க, இவருதான் அடேய் பீட்டா செல்லே குட்டி போடுமுடா அப்படின்னு புதுசாப் போன வருசம் கண்டுபுடிச்சிருக்கார். இது ஒரு பரபரப்பு. ஆ, அப்புடின்னா குட்டி போடாதுன்னு நெனச்ச மத்த செல்லெல்லாம் குட்டி போடுமான்னு ஒரு கூட்டம் கிளம்பிருக்கு. ஒடனே நீங்க கேக்கலாம், அப்படின்னா பீட்டா செல்ல வச்சே பீட்டா செல்லை உண்டாக்கலாமே, என்னத்துக்குங்க இந்த அரசியல் சச்சரவு புடிச்ச மூலச்செல் வெவகாரம்னு கேக்கலாம். மெல்ட்டன் விடை வச்சிருக்காரு, அதாவது சக்கரை வியாதிக்காரருக்கு பீட்டா செல்லை வைக்கணும்னா அதைக் குடுக்குறதுக்கு ஒரு சவம் வேணும், ஏன்னா உயிராயிருக்கவங்ககிட்டேருந்து எடுக்குறது கஷ்டம். தானம் செய்றவங்க கிடைக்கிறது, அத ஒடனே போயி எடுக்குறது, பிரிச்செடுக்குறது, உள்ள வக்கிறது, வச்சது எதிர்ப்பாற்றலால சாவாம இருக்கது இதெல்லாம் கஷ்டம். இங்கதான் மூலச்செல் சிகிச்சை சிறப்பாத் தெரியுது. மூலச்செல் கையும் காலும் மொளச்ச கொழந்தயில்ல. அது ஒரு 30, 40 செல். ரொம்ப உணர்ச்சிவசப்படாம இந்தப் பாதிரி மாருங்க மனசு வச்சா ஒழுங்கா ஆராய்ச்சி செய்யலாம். சீக்குக்கு மருந்து கெடைக்கும் அப்படிங்குறாரு மெல்ட்டன்.
யோசிச்சுப் பாக்குறேன், நம்ம திருமூலர் 3000 வருசம் இருந்து வருசத்துக்கொன்னா 3000 பாட்டெழுதுனாராம். அது ஒரே திருமூலரா வெவ்வேற ஆட்களான்னு ஒரு குடுமிபிடி சண்டை போடலாம். ஆனாலும் மூலச்செல்களைத் தூண்டிவிட்டுக்கிட்டு மறுபடியும் மறுபடியும் அங்கமெல்லாம் புதுசாகி ஒரு மனுசன் 3000 வருசம் இருந்திருப்பானோங்கற யோசனை ரொம்பக் கவர்ச்சியா இருக்கு. இது திருமூலன் மேல இன்னும் காதலைக் கூட்டுது.
திருமூலன் அப்படி இருந்திருப்பானோ?
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
அதுனாலதான் அவருக்கு திரு-மூலர் னே பேர் வந்தது. :)
நல்ல பதிவு.
செல்லுக்கு வேறே சொல்லலாமே ;-)
// அதுனாலதான் அவருக்கு திரு-மூலர் னே பேர் வந்தது. :)//
அப்படிப் போடு:))
பெயரிலி: அணு, கலம் அப்படின்னெல்லாம் பாத்திருக்கேன், முந்தியொருக்க நாம இதப்பத்தி பேசினதா நெனப்பு. அது கொஞ்சம் குழப்புற மாதிரி இருக்கு. அணுவென்றால் atom என்றும், கலம் என்றால் என்னவோ படகு மாதிரி பெருசா ஒரு காட்சி தெரியுது. அதனாலதான் இப்போதைக்கு செல் ("beta")ன்னு சொல்வோம்ங்கறென்:)
சித்தம்ருத்துவ பழைய நூல்களில் காயகல்ப சிகிச்சை மாதிரி ஒன்று சொல்லப்பட்டிருக்கும். முதியவர்கள் இளமையான தோலையும், தோற்றத்தையும் திரும்பப்பெறுவதற்காக என. அவையெல்லாம் அறிவியற்பூர்வமாய் ஆராயப்பட வேண்டும். அவை இத்துடன் சம்பந்தப்பட்டவையாக இருக்ககூடும்.
//செல்லுக்கு வேறே சொல்லலாமே ;-)//
பெயரிலி,
செல்லே நல்லா இருக்குற மாதிரித்தான் தெரியுது. செல்லைத் தொந்தரவு பண்ணனுமா என்ன ? :-)
சுந்தர், நல்லா எளிமையா இருக்கு உங்க பதிவு. மூலச்செல் சிகிச்சை பற்றி இன்னும் நிறையத் தெரிந்து கொள்ளணும். போன வருஷம் இங்க ஒரு மருத்துவ நண்பர் கிட்ட இது பத்திக் கொஞ்சம் பேசித் தெரிஞ்சுக்கிட்டேன். ஏன் இதில மதம் பூந்து கெடுக்குதுண்ணு தெரியல!
பதிவுக்கும், தகவலுக்கும் நன்றி.
இன்று உயிரணு/மூலச்செல் தொடர்பாக கூகிள் அலெர்ட் அனுப்பியிருந்த ஒரு சேதி:
http://www.hindustantimes.com/news/5983_1348030,00430005.htm
முத்து: காயகல்பமே!
செல்வா: நான் 'காலம்' இதழில் இது குறித்து எழுதிய கட்டுரையைப் பிரதியெடுத்து அனுப்பவா? முகவரியைத் தெரிவிக்கவும்.
அன்பு சுட்டிக்கு, மூர்த்தி, நன்றி.
selva1 at gmail dot com க்கு அனுப்புங்க. காலம் - இணைய இதழா?
Post a Comment